• Jan 23 2025

பாராளுமன்றக் குழுக் கூட்டங்களைப் புறக்கணிக்க எதிர்க்கட்சி தீர்மானம்?

Chithra / Jan 16th 2025, 10:19 am
image


பாராளுமன்றக் குழுக் கூட்டங்களைப் புறக்கணிக்க ஐக்கிய மக்கள் சக்தி தீர்மானித்துள்ளதாக எதிர்க்கட்சியின் பிரதம கொறடா கயந்த கருணாதிலக தெரிவித்துள்ளார்.

இந்தக் குழுக்களில் ஆளும் கட்சி எதிர்க்கட்சிக்கு போதிய பிரதிநிதித்துவம் வழங்காத காரணத்தினால், இந்தத் தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக பாராளுமன்ற உறுப்பினர் கருணாதிலக்க தெரிவித்துள்ளார். 

பொது நிதிக் குழுவில் மட்டுமே எங்களுக்கு உரிய பிரதிநிதித்துவம் வழங்கப்பட்டுள்ளது.

எதிர்க்கட்சி உறுப்பினர் ஹர்ஷ டி சில்வா தலைமையில் நிதிக்குழு கூட்டம் நடைபெறுவதால் ஐக்கிய மக்கள் சக்தி உறுப்பினர்கள் அதில் மாத்திரம் பங்கேற்பார்கள் என பாராளுமன்ற உறுப்பினர் தெரிவித்தார்.

இந்நிலையில் அரசாங்கத்தின் முடிவுகளுக்கமையவே எதிர்க்கட்சிகள் நாடாளுமன்ற குழுக்களைப் புறக்கணிப்பது  தொடர்பான இறுதித் தீர்மானம் எட்டப்படும் என தமிழ் முற்போக்கு கூட்டணியின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான மனோ கணேசன் தெரிவித்துள்ளார். 


பாராளுமன்றக் குழுக் கூட்டங்களைப் புறக்கணிக்க எதிர்க்கட்சி தீர்மானம் பாராளுமன்றக் குழுக் கூட்டங்களைப் புறக்கணிக்க ஐக்கிய மக்கள் சக்தி தீர்மானித்துள்ளதாக எதிர்க்கட்சியின் பிரதம கொறடா கயந்த கருணாதிலக தெரிவித்துள்ளார்.இந்தக் குழுக்களில் ஆளும் கட்சி எதிர்க்கட்சிக்கு போதிய பிரதிநிதித்துவம் வழங்காத காரணத்தினால், இந்தத் தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக பாராளுமன்ற உறுப்பினர் கருணாதிலக்க தெரிவித்துள்ளார். பொது நிதிக் குழுவில் மட்டுமே எங்களுக்கு உரிய பிரதிநிதித்துவம் வழங்கப்பட்டுள்ளது.எதிர்க்கட்சி உறுப்பினர் ஹர்ஷ டி சில்வா தலைமையில் நிதிக்குழு கூட்டம் நடைபெறுவதால் ஐக்கிய மக்கள் சக்தி உறுப்பினர்கள் அதில் மாத்திரம் பங்கேற்பார்கள் என பாராளுமன்ற உறுப்பினர் தெரிவித்தார்.இந்நிலையில் அரசாங்கத்தின் முடிவுகளுக்கமையவே எதிர்க்கட்சிகள் நாடாளுமன்ற குழுக்களைப் புறக்கணிப்பது  தொடர்பான இறுதித் தீர்மானம் எட்டப்படும் என தமிழ் முற்போக்கு கூட்டணியின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான மனோ கணேசன் தெரிவித்துள்ளார். 

Advertisement

Advertisement

Advertisement