• Nov 26 2024

காவேரி கலா மன்றத்தின் ஏற்பாட்டில் : ஊடக பாதை செயலமர்வு

Tharmini / Nov 24th 2024, 9:58 am
image

காவேரி கலா மன்றம் நடாத்திய "பசுமை விழி" எனும் தொனிப்பொருளிலான ஊடக பாதை செயலமர்வு நேற்று (23),

கல்லூண்டாயில் அமைந்துள்ள தேசிய இளைஞர் சேவைகள் மன்றத்தின் மண்டபத்தில் நடைபெற்றது.

இதில் வளவாளர்களாக யாழ்ப்பாணம் மற்றும் வவுனியா பல்கலைக்கழகத்தின் வருகைதரு விரிவுரையாளரும்,

சுயாதீன ஊடகவியலாளரும், பால்நிலை ஆலோசகருமான கிருத்திகா தருமராஜா, மற்றும் யாழ்ப்பாணம் அனர்த்த முகாமைத்துவ பிரிவின் பிரதிப் பணிப்பாளர் ரி.என்.சூரியராஜா ஆகியோர் கலந்துகொண்டனர்.

அத்துடன் தொழுநோய் தொடர்பான விழிப்புணர்வு கருத்துரையை பொது சுகாதார பரிசோதகர் சூரியகுமார் வழங்கியிருந்ததுடன், தொற்றா நோய் தொடர்பான விழிப்புணர்வு கருத்துரையை வைத்தியர் குகதாசன் வழங்கினார். 

நிகழ்வின் இறுதியில் பங்குபற்றிய அனைவருக்கும் சான்றிதழ்கள் வழங்கப்பட்டன.

இந்த நிகழ்வில் காவேரி கலா மன்றத்தினர், ஊடகவியலாளர்கள், சமூக செயற்பாட்டாளர்கள் ஆகியோர் கலந்துகொண்டனர்.

 




காவேரி கலா மன்றத்தின் ஏற்பாட்டில் : ஊடக பாதை செயலமர்வு காவேரி கலா மன்றம் நடாத்திய "பசுமை விழி" எனும் தொனிப்பொருளிலான ஊடக பாதை செயலமர்வு நேற்று (23), கல்லூண்டாயில் அமைந்துள்ள தேசிய இளைஞர் சேவைகள் மன்றத்தின் மண்டபத்தில் நடைபெற்றது.இதில் வளவாளர்களாக யாழ்ப்பாணம் மற்றும் வவுனியா பல்கலைக்கழகத்தின் வருகைதரு விரிவுரையாளரும், சுயாதீன ஊடகவியலாளரும், பால்நிலை ஆலோசகருமான கிருத்திகா தருமராஜா, மற்றும் யாழ்ப்பாணம் அனர்த்த முகாமைத்துவ பிரிவின் பிரதிப் பணிப்பாளர் ரி.என்.சூரியராஜா ஆகியோர் கலந்துகொண்டனர்.அத்துடன் தொழுநோய் தொடர்பான விழிப்புணர்வு கருத்துரையை பொது சுகாதார பரிசோதகர் சூரியகுமார் வழங்கியிருந்ததுடன், தொற்றா நோய் தொடர்பான விழிப்புணர்வு கருத்துரையை வைத்தியர் குகதாசன் வழங்கினார். நிகழ்வின் இறுதியில் பங்குபற்றிய அனைவருக்கும் சான்றிதழ்கள் வழங்கப்பட்டன.இந்த நிகழ்வில் காவேரி கலா மன்றத்தினர், ஊடகவியலாளர்கள், சமூக செயற்பாட்டாளர்கள் ஆகியோர் கலந்துகொண்டனர். 

Advertisement

Advertisement

Advertisement