• Nov 10 2024

எமது உயிருக்கு பாதுகாப்பு இல்லை! வவுனியாவில் பணிப்புறக்கணிப்பில் குதித்த அரச பேருந்து ஊழியர்கள்

Chithra / Sep 12th 2024, 10:17 am
image


தமது ஊழியர்களை தாக்கியவர்கள் மீது நடவடிக்கை எடுக்க கோரி இலங்கை போக்குவரத்து சபையின் வவுனியா சாலை ஊழியர்கள் இன்று பணிபகிஸ்கரிப்பில் ஈடுபட்டுள்ளனர்.

நேற்றையதினம் வவுனியா புதிய பேருந்து நிலையத்தில் கடமையில் இருந்த அரச பேருந்தின் நடத்துறர் மற்றும் ஊழியர்கள் மீது வவுனியாவில் இருந்து கொழும்பு நோக்கி பயணிக்கும் தனியார் பேருந்தின் ஊழியர்கள் தாக்குதலை மேற்கொண்டதாக தெரிவிக்கப்படுகின்றது.

குறித்த சம்பவத்தால் அரச பேருந்துத் தரப்பினை சேர்ந்த ஒருவர் காயமடைந்த நிலையில் வவுனியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்தார்.

இந்நிலையில் தாக்குதல் மேற்கொண்டவர்களை கைதுசெய்யுமாறு தெரிவித்து போக்குவரத்துச்சபையின் வவுனியா சாலை ஊழியர்கள் இன்று காலை முதல் பணிபகிஸ்கரிப்பில் ஈடுபட்டுவருகின்றனர்.

இதேவேளை இதுபோன்று சுமார் 30 சம்பவங்கள் இடம்பெற்றுள்ளதாகவும்,

தமது கோரிக்கைக்கு உரிய நடவடிக்கை எடுக்கத் தவறும் பட்சத்தில் வடமாகாண ரீதியாக பணிபகிஸ்கரிப்பு முன்னெடுக்கப்படும் என அவர்கள் தெரிவித்தனர்.

மேலும் எமது பாதுகாப்பிற்காக பேருந்து நிலையத்திற்கு விசேட அதிரடிப் படையினர் பாதுகாப்பு வழங்க வேண்டும் எனவும் அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

குறித்த நடவடிக்கை காரணமாக பாடசாலை மாணவர்கள், பயணிகள் பல்வேறு அசௌகரியங்களுக்கு உள்ளாகியுள்ளமை  குறிப்பிடத்தக்கது.


எமது உயிருக்கு பாதுகாப்பு இல்லை வவுனியாவில் பணிப்புறக்கணிப்பில் குதித்த அரச பேருந்து ஊழியர்கள் தமது ஊழியர்களை தாக்கியவர்கள் மீது நடவடிக்கை எடுக்க கோரி இலங்கை போக்குவரத்து சபையின் வவுனியா சாலை ஊழியர்கள் இன்று பணிபகிஸ்கரிப்பில் ஈடுபட்டுள்ளனர்.நேற்றையதினம் வவுனியா புதிய பேருந்து நிலையத்தில் கடமையில் இருந்த அரச பேருந்தின் நடத்துறர் மற்றும் ஊழியர்கள் மீது வவுனியாவில் இருந்து கொழும்பு நோக்கி பயணிக்கும் தனியார் பேருந்தின் ஊழியர்கள் தாக்குதலை மேற்கொண்டதாக தெரிவிக்கப்படுகின்றது.குறித்த சம்பவத்தால் அரச பேருந்துத் தரப்பினை சேர்ந்த ஒருவர் காயமடைந்த நிலையில் வவுனியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்தார்.இந்நிலையில் தாக்குதல் மேற்கொண்டவர்களை கைதுசெய்யுமாறு தெரிவித்து போக்குவரத்துச்சபையின் வவுனியா சாலை ஊழியர்கள் இன்று காலை முதல் பணிபகிஸ்கரிப்பில் ஈடுபட்டுவருகின்றனர்.இதேவேளை இதுபோன்று சுமார் 30 சம்பவங்கள் இடம்பெற்றுள்ளதாகவும்,தமது கோரிக்கைக்கு உரிய நடவடிக்கை எடுக்கத் தவறும் பட்சத்தில் வடமாகாண ரீதியாக பணிபகிஸ்கரிப்பு முன்னெடுக்கப்படும் என அவர்கள் தெரிவித்தனர்.மேலும் எமது பாதுகாப்பிற்காக பேருந்து நிலையத்திற்கு விசேட அதிரடிப் படையினர் பாதுகாப்பு வழங்க வேண்டும் எனவும் அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.குறித்த நடவடிக்கை காரணமாக பாடசாலை மாணவர்கள், பயணிகள் பல்வேறு அசௌகரியங்களுக்கு உள்ளாகியுள்ளமை  குறிப்பிடத்தக்கது.

Advertisement

Advertisement

Advertisement