• Oct 19 2024

தமிழினப் படுகொலைக்கான நீதியைக் கோரிப்பெறும் போது எங்கள் தேசம் அங்கீகரிக்கப்படும்...!காண்டீபன் தெரிவிப்பு...!samugammedia

Sharmi / Sep 8th 2023, 3:30 pm
image

Advertisement

தமிழினப்படுகொலைக்கான நீதியைக் கோரிப்பெறும் போது எங்கள் தேசம் அங்கீகரிக்கப்படும் என தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் கொள்கைப் பரப்புச் செயளாளர் நடராஜர் காண்டீபன் தெரிவித்துள்ளார்.

செம்மணிப் படுகொலையின் 27 வது நினைவேந்தல் தமிழ்த்  தேசிய மக்கள்  முன்னணியின் ஏற்பாட்டில் நேற்றையதினம் மாலை  யாழ் செம்மணி வளைவிற்கு அண்மையில்இடம்பெற்றது.
குறித்த நிகழ்வில் கலந்து கொண்டு ஊடகங்களிடம் கருத்துதெரிவிக்கையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,

செம்மணிப் படுகொலையானது உலகறிந்த இனப்படுகொலையாகும். உலகத்திலே இனப்படுகொலைக்காக யுகோஸ்லாவியாக்கான விசேட தீர்ப்பாயம் , ருவன்டாவிற்கான விசேட தீர்பாபாயமென இரு தீர்ப்பாயங்கள் உருவாக்கப்பட்டுள்ளது.

ருவாண்டாவிற்கான தீர்ப்பாயத்தில் தலைவியாக இருந்த நவநீதம்பிள்ளை அம்மையார் உகண்டாவிலே ஆட்சிசெய்த குக்கூ  இனத்தவர் ஹட்சி இனத்தவர்கள் மீது மேற்கொள்ளப்பட்ட இன அழிப்பை நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தியமையானது உதாரணமாகக் காணப்படுகின்றது.

இதேவேளை உரோம சாசனத்தின் சட்ட ஏற்பாட்டும் இனப் படுகொலைக்கான வரைபு தெளிவாகக் கூறப்படுகின்றது.

செம்மணியிலே  27ஆண்டுகளுக்கு  முன் பாடசாலைக்கு பரீட்சைக்காக சென்ற மாணவி சிங்கள பௌத்த பேரினவாதத்தின் ஒட்டுமொத்த வடிவமாகக் காணப்பட்ட ஸ்ரீலங்கா இராணுவத்தினர் சட்டவிரோதமாக கைது செய்து படுகொலையானது தற்பொழுது தன்னை புனிதையாக காட்டிக்காள்ளும் சந்திரிக்கா குமாரதுங்காவின் ஆட்சி்க்காலமாகும்.

அன்றைய காலத்தில் காணப்பட்ட நெருக்கு வாரங்களின் மத்தியிலும்  குறித்த செம்மணி வழக்கைத் துணித்து நடாத்தி சர்வதேசத்திற்கு எடுத்துச்  சென்றதன் காரணமாகத் தான்  சிங்கள பௌத்த பேரினவாத அரசால் பலி கொல்லப்பட்டார்.

எமது வரலாற்று தடங்களில் காணப்படும் சான்றுகளை வரலாற்றுத் தடத்தினூடாக வலிகளை  கடத்த வேண்டும்.  வருடத்தினுடைய அனைத்து நாள்களிலும் இனப்படுகொலைகளையும் இனவழிப்பையும் சான்றுகளாக கொண்டிருக்கின்ற  ஒரு இனமாக நாங்கள் காணப்படுகின்றோம்.

தமிழ்த் தேசியப் பரப்பில் ஜனநாயக ரீதியில் அதிகாரங்களைக் கைப்பற்றியுள்ள தரப்புகளால் இவ் விடங்கள் அணுகமுடியாதுள்ளமை துரதிஸ்டவசமானது.   கடந்த 14 வருடங்களாக  பாராளுமன்ற உறுப்பினர்களான கஜேந்திரகுமாரும் கஜேந்திரனும் முன்ணுதாரணமான அரசியலை நடாத்தி வருகின்றனர்.

தமிழினப் படுகொலை அழிப்பிற்கு  டக்லஸ் தேவானந்தா மற்றும் பிள்ளையான் உட்பட ஒட்டுக்குழுக்களின் தமிழ்ப் பெயர்களை அரசாங்கம் பயன்படுத்தி வந்தமையானது வரலாறுகளில் பதியப்பட்டுள்ளது.

சிங்கள பௌத்த பேரினவாதத்தின் அடக்கு முறைகள் தொடர்கின்ற பொழுது  ஒரு தனி நாடாகவோ தேசமாகவோ செல்வதற்கான ஏற்பாடுகளே உள்ளன.  ஆகவே இனப்படுகொலைக்கான நீதியைக் கோரிப் பெறும் போது எங்கள் தேசம் அங்கீகரிக்கப்படும் எனக் குறிப்பிட்டார்.

தமிழினப் படுகொலைக்கான நீதியைக் கோரிப்பெறும் போது எங்கள் தேசம் அங்கீகரிக்கப்படும்.காண்டீபன் தெரிவிப்பு.samugammedia தமிழினப்படுகொலைக்கான நீதியைக் கோரிப்பெறும் போது எங்கள் தேசம் அங்கீகரிக்கப்படும் என தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் கொள்கைப் பரப்புச் செயளாளர் நடராஜர் காண்டீபன் தெரிவித்துள்ளார்.செம்மணிப் படுகொலையின் 27 வது நினைவேந்தல் தமிழ்த்  தேசிய மக்கள்  முன்னணியின் ஏற்பாட்டில் நேற்றையதினம் மாலை  யாழ் செம்மணி வளைவிற்கு அண்மையில்இடம்பெற்றது.குறித்த நிகழ்வில் கலந்து கொண்டு ஊடகங்களிடம் கருத்துதெரிவிக்கையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார்.அவர் மேலும் தெரிவிக்கையில்,செம்மணிப் படுகொலையானது உலகறிந்த இனப்படுகொலையாகும். உலகத்திலே இனப்படுகொலைக்காக யுகோஸ்லாவியாக்கான விசேட தீர்ப்பாயம் , ருவன்டாவிற்கான விசேட தீர்பாபாயமென இரு தீர்ப்பாயங்கள் உருவாக்கப்பட்டுள்ளது.ருவாண்டாவிற்கான தீர்ப்பாயத்தில் தலைவியாக இருந்த நவநீதம்பிள்ளை அம்மையார் உகண்டாவிலே ஆட்சிசெய்த குக்கூ  இனத்தவர் ஹட்சி இனத்தவர்கள் மீது மேற்கொள்ளப்பட்ட இன அழிப்பை நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தியமையானது உதாரணமாகக் காணப்படுகின்றது.இதேவேளை உரோம சாசனத்தின் சட்ட ஏற்பாட்டும் இனப் படுகொலைக்கான வரைபு தெளிவாகக் கூறப்படுகின்றது. செம்மணியிலே  27ஆண்டுகளுக்கு  முன் பாடசாலைக்கு பரீட்சைக்காக சென்ற மாணவி சிங்கள பௌத்த பேரினவாதத்தின் ஒட்டுமொத்த வடிவமாகக் காணப்பட்ட ஸ்ரீலங்கா இராணுவத்தினர் சட்டவிரோதமாக கைது செய்து படுகொலையானது தற்பொழுது தன்னை புனிதையாக காட்டிக்காள்ளும் சந்திரிக்கா குமாரதுங்காவின் ஆட்சி்க்காலமாகும்.அன்றைய காலத்தில் காணப்பட்ட நெருக்கு வாரங்களின் மத்தியிலும்  குறித்த செம்மணி வழக்கைத் துணித்து நடாத்தி சர்வதேசத்திற்கு எடுத்துச்  சென்றதன் காரணமாகத் தான்  சிங்கள பௌத்த பேரினவாத அரசால் பலி கொல்லப்பட்டார்.எமது வரலாற்று தடங்களில் காணப்படும் சான்றுகளை வரலாற்றுத் தடத்தினூடாக வலிகளை  கடத்த வேண்டும்.  வருடத்தினுடைய அனைத்து நாள்களிலும் இனப்படுகொலைகளையும் இனவழிப்பையும் சான்றுகளாக கொண்டிருக்கின்ற  ஒரு இனமாக நாங்கள் காணப்படுகின்றோம்.தமிழ்த் தேசியப் பரப்பில் ஜனநாயக ரீதியில் அதிகாரங்களைக் கைப்பற்றியுள்ள தரப்புகளால் இவ் விடங்கள் அணுகமுடியாதுள்ளமை துரதிஸ்டவசமானது.   கடந்த 14 வருடங்களாக  பாராளுமன்ற உறுப்பினர்களான கஜேந்திரகுமாரும் கஜேந்திரனும் முன்ணுதாரணமான அரசியலை நடாத்தி வருகின்றனர்.தமிழினப் படுகொலை அழிப்பிற்கு  டக்லஸ் தேவானந்தா மற்றும் பிள்ளையான் உட்பட ஒட்டுக்குழுக்களின் தமிழ்ப் பெயர்களை அரசாங்கம் பயன்படுத்தி வந்தமையானது வரலாறுகளில் பதியப்பட்டுள்ளது. சிங்கள பௌத்த பேரினவாதத்தின் அடக்கு முறைகள் தொடர்கின்ற பொழுது  ஒரு தனி நாடாகவோ தேசமாகவோ செல்வதற்கான ஏற்பாடுகளே உள்ளன.  ஆகவே இனப்படுகொலைக்கான நீதியைக் கோரிப் பெறும் போது எங்கள் தேசம் அங்கீகரிக்கப்படும் எனக் குறிப்பிட்டார்.

Advertisement

Advertisement

Advertisement