• May 13 2024

எமது தனித்துவமான இறைமை அங்கீகரிக்கப்படாத எந்தவொரு தீர்வுத் திட்டத்திற்கும் இணங்கத் தயாரில்லை – கஜேந்திரகுமார் எம்.பி திட்டவட்டம்..! samugammedia

Chithra / Jul 24th 2023, 7:07 am
image

Advertisement

எமது தனித்துவமான இறைமை அங்கீகரிக்கப்படாத எந்தவொரு தீர்வுத் திட்டத்திற்கும் இணங்கத் தயாரில்லை என நாடாளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தெரிவித்தார்.

ஈழத் தமிழர்கள் மீதான அரசின் இனப்படுகொலைக்கு நீதி வேண்டும் என வலியுறுத்தி கறுப்பு யூலை நினைவேந்தல் யாழில் அனுஷ்டிக்கப்பட்டது.

தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் ஏற்பாட்டில் யாழ் பொது நூலகத்திற்கு அருகாமையில் நேற்று மாலை இவ் நினைவேந்தல் அனுஷ்டிக்கப்பட்டது.

இதன் போது கறுப்பு யூலை நினைவேந்தல் பொதுச் சுடரினை மாவீரரின் தந்தையொருவர் ஏற்றி வைத்ததைத் தொடர்ந்து ஏனையவர்களும் சுடரேற்றி அஞ்சலி செய்தனர்.

இந்நிகழ்வில் கலந்து கொண்டு மேலும் அவர் கருத்து தெரிவிக்கையில் 

சமஸ்டித் தீர்வைப் பெறும் வரை தமிழ் மக்கள் எக்காரணம் கொண்டும் எமது தேச அங்கீகாரத்தை அழிக்கும் தரப்புடன் ஒப்பந்தம் செய்யத் தயாரில்லை எனவும் அவர் இதன்போது தெரிவித்தார்.

கறுப்பு யூலை இனப் படுகொலை நிறைவடைந்து 40 ஆண்டுகள் நிறைவடைந்திருக்கின்றது.   இனப் படுகொலை செய்த எந்தவொரு தரப்புக்கும் எதிராக வழக்குக் கூடத் தாக்கல் செய்யாமல் 40 ஆண்டுகளைக்  கழித்துள்ளோம்.

இதற்கிடையில்  தமிழருக்கு  நடைபெற்ற அநீதிகளைச் சுட்டிக்காட்டி தீர்வு வழங்கப்பட வேண்டும்  என  பல முயற்சிகள் எடுக்கப்பட்டும்  ஒவ்வொரு முயற்சியையும் தோற்கடிக்கும் வகையில் ஸ்ரீலங்கா அரசு திட்டமிட்டிருந்தது.

அந்த வரலாற்றின் பின்னணியிலிருந்து தான் இன்று நடைபெறும் செயற்பாடுகளை அணுக வேண்டும்.  வரும் செப்ரெம்பர் மாதம் ஜெனிவா மனித உரிமை பேரவையிலே தனது நல்லெண்ணத்தை காட்டுவதற்கு உண்மை மற்றும் நல்லிண ஆணைக்குழுவொன்றை நிறுவவுள்ளதாக  அறிவித்துள்ளது. இதன் பின்னணிலே இன்றைய கறுப்பு யூலையின் 40 வது ஆண்டு எடுத்துக்காட்டாக உள்ளது.

போர் என்ற கோணத்தில் இரு இராணுவத் தரப்புகள் மோதிக்கொண்டிருக்கையில் ஒரு தரப்பு மற்றொரு தரப்பு இராணுவச்  சிப்பாய்களை குறி வைத்து  அழித்ததன் விளைவாக ஒட்டுமொத்தமாக  ஒரு இனத்தை அழிக்கின்ற  செயற்பாட்டை  மேற்கொண்ட கறுப்பு  யூலைக்க்கு  மன்னிப்பு கோரியோ அல்லது அதற்கான நீதியை  பெறுவதற்கான நடவடிக்கையை மேற்கொள்ளவில்லை. 

இவற்றுடன் ஒட்டுமொத்தமாக  முள்ளிவாய்க்காலில் மோற்கொண்ட  இன அழிப்பை உலகமே ஏற்றுக்கொள்ளும் சூழ்நிலையிலே  இந்த நல்லிணக்க ஆணைக்குழு ஊடாக நீதியை வழங்குவார்கள் என்பது முட்டாள்தனம்.

இன்றும் 1987ம் ஆண்டு 13ம் திருத்தச் சட்டம் என்ற பெயரில் கைச்சாத்திட்டனர்.  தற்போதும் நடைமுறையில் இருக்கும் அச் சட்டத்தில்  வட கிழக்கு இணைப்பு உள்ளடக்கப்பட்டது. 

எனினும் அது ஒரு தலைபட்சமாக நீக்கப்பட்டது.  தமிழ் மக்கள் சார்பில் கையெழுத்திட்ட இந்தியா வடகிழக்கு இணைப்பை மீள வலியுறுத்த ஒரு நடவடிக்கையும் எடுக்கவில்லை. 

ஒற்றையாட்சிக்குளிருக்கும் 13 ம் திருத்தச் சட்டத்தை அமுல்படுத்துவதாக கூறினாலும் யூலைக் கலவரம் முதல் அனுபவப்பட்ட தமிழ்  மக்கள் ஏமாறத் தயராரில்லை  என்பதை படுகொலையை நினைவு கூருவதன் மூலம் உலகத்திற்கு எடுத்துக் கூறுகின்றோம். 

எமது தனித்துவமான இறைமை அங்கீகரி்கப்படாத எந்தவொரு தீர்வுத் திட்டத்திற்கும்  இணங்கத் தயாரில்லை.  சிங்கள தேசத்துடன் ஒப்பந்தங்களை மேற்கொண்டு ஒரு தலைபட்சமக  நீக்கினால் தமிழினம் தன்னுடைய தலை விதியை  அதே பட்சமாக தீர்மானிக்கும் பலத்துடன மட்டுமே  தீர்வுக்கு செல்ல முடியும். 

அந்த தீர்வு தமிழரின் தேச அ்கீகாரமாகவும், தனித்துவமான இறைமை அங்கீகாரமாகவும்  சுய நிர்ணய உரிமையை முழுமையாக அனுபவிக்கக்கூடிய சமஸ்டித் தீர்வைப் பெறும் வரை தமிழ் மக்கள் எக் காரணங்கொண்டும் எமது தேச அங்கீகாரத்தை அழிக்கும் தரப்புடன் ஒப்பந்தம் செய்யத் தயாரில்லை எனத் தெரிவித்தார்

எமது தனித்துவமான இறைமை அங்கீகரிக்கப்படாத எந்தவொரு தீர்வுத் திட்டத்திற்கும் இணங்கத் தயாரில்லை – கஜேந்திரகுமார் எம்.பி திட்டவட்டம். samugammedia எமது தனித்துவமான இறைமை அங்கீகரிக்கப்படாத எந்தவொரு தீர்வுத் திட்டத்திற்கும் இணங்கத் தயாரில்லை என நாடாளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தெரிவித்தார்.ஈழத் தமிழர்கள் மீதான அரசின் இனப்படுகொலைக்கு நீதி வேண்டும் என வலியுறுத்தி கறுப்பு யூலை நினைவேந்தல் யாழில் அனுஷ்டிக்கப்பட்டது.தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் ஏற்பாட்டில் யாழ் பொது நூலகத்திற்கு அருகாமையில் நேற்று மாலை இவ் நினைவேந்தல் அனுஷ்டிக்கப்பட்டது.இதன் போது கறுப்பு யூலை நினைவேந்தல் பொதுச் சுடரினை மாவீரரின் தந்தையொருவர் ஏற்றி வைத்ததைத் தொடர்ந்து ஏனையவர்களும் சுடரேற்றி அஞ்சலி செய்தனர்.இந்நிகழ்வில் கலந்து கொண்டு மேலும் அவர் கருத்து தெரிவிக்கையில் சமஸ்டித் தீர்வைப் பெறும் வரை தமிழ் மக்கள் எக்காரணம் கொண்டும் எமது தேச அங்கீகாரத்தை அழிக்கும் தரப்புடன் ஒப்பந்தம் செய்யத் தயாரில்லை எனவும் அவர் இதன்போது தெரிவித்தார்.கறுப்பு யூலை இனப் படுகொலை நிறைவடைந்து 40 ஆண்டுகள் நிறைவடைந்திருக்கின்றது.   இனப் படுகொலை செய்த எந்தவொரு தரப்புக்கும் எதிராக வழக்குக் கூடத் தாக்கல் செய்யாமல் 40 ஆண்டுகளைக்  கழித்துள்ளோம்.இதற்கிடையில்  தமிழருக்கு  நடைபெற்ற அநீதிகளைச் சுட்டிக்காட்டி தீர்வு வழங்கப்பட வேண்டும்  என  பல முயற்சிகள் எடுக்கப்பட்டும்  ஒவ்வொரு முயற்சியையும் தோற்கடிக்கும் வகையில் ஸ்ரீலங்கா அரசு திட்டமிட்டிருந்தது.அந்த வரலாற்றின் பின்னணியிலிருந்து தான் இன்று நடைபெறும் செயற்பாடுகளை அணுக வேண்டும்.  வரும் செப்ரெம்பர் மாதம் ஜெனிவா மனித உரிமை பேரவையிலே தனது நல்லெண்ணத்தை காட்டுவதற்கு உண்மை மற்றும் நல்லிண ஆணைக்குழுவொன்றை நிறுவவுள்ளதாக  அறிவித்துள்ளது. இதன் பின்னணிலே இன்றைய கறுப்பு யூலையின் 40 வது ஆண்டு எடுத்துக்காட்டாக உள்ளது.போர் என்ற கோணத்தில் இரு இராணுவத் தரப்புகள் மோதிக்கொண்டிருக்கையில் ஒரு தரப்பு மற்றொரு தரப்பு இராணுவச்  சிப்பாய்களை குறி வைத்து  அழித்ததன் விளைவாக ஒட்டுமொத்தமாக  ஒரு இனத்தை அழிக்கின்ற  செயற்பாட்டை  மேற்கொண்ட கறுப்பு  யூலைக்க்கு  மன்னிப்பு கோரியோ அல்லது அதற்கான நீதியை  பெறுவதற்கான நடவடிக்கையை மேற்கொள்ளவில்லை. இவற்றுடன் ஒட்டுமொத்தமாக  முள்ளிவாய்க்காலில் மோற்கொண்ட  இன அழிப்பை உலகமே ஏற்றுக்கொள்ளும் சூழ்நிலையிலே  இந்த நல்லிணக்க ஆணைக்குழு ஊடாக நீதியை வழங்குவார்கள் என்பது முட்டாள்தனம்.இன்றும் 1987ம் ஆண்டு 13ம் திருத்தச் சட்டம் என்ற பெயரில் கைச்சாத்திட்டனர்.  தற்போதும் நடைமுறையில் இருக்கும் அச் சட்டத்தில்  வட கிழக்கு இணைப்பு உள்ளடக்கப்பட்டது. எனினும் அது ஒரு தலைபட்சமாக நீக்கப்பட்டது.  தமிழ் மக்கள் சார்பில் கையெழுத்திட்ட இந்தியா வடகிழக்கு இணைப்பை மீள வலியுறுத்த ஒரு நடவடிக்கையும் எடுக்கவில்லை. ஒற்றையாட்சிக்குளிருக்கும் 13 ம் திருத்தச் சட்டத்தை அமுல்படுத்துவதாக கூறினாலும் யூலைக் கலவரம் முதல் அனுபவப்பட்ட தமிழ்  மக்கள் ஏமாறத் தயராரில்லை  என்பதை படுகொலையை நினைவு கூருவதன் மூலம் உலகத்திற்கு எடுத்துக் கூறுகின்றோம். எமது தனித்துவமான இறைமை அங்கீகரி்கப்படாத எந்தவொரு தீர்வுத் திட்டத்திற்கும்  இணங்கத் தயாரில்லை.  சிங்கள தேசத்துடன் ஒப்பந்தங்களை மேற்கொண்டு ஒரு தலைபட்சமக  நீக்கினால் தமிழினம் தன்னுடைய தலை விதியை  அதே பட்சமாக தீர்மானிக்கும் பலத்துடன மட்டுமே  தீர்வுக்கு செல்ல முடியும். அந்த தீர்வு தமிழரின் தேச அ்கீகாரமாகவும், தனித்துவமான இறைமை அங்கீகாரமாகவும்  சுய நிர்ணய உரிமையை முழுமையாக அனுபவிக்கக்கூடிய சமஸ்டித் தீர்வைப் பெறும் வரை தமிழ் மக்கள் எக் காரணங்கொண்டும் எமது தேச அங்கீகாரத்தை அழிக்கும் தரப்புடன் ஒப்பந்தம் செய்யத் தயாரில்லை எனத் தெரிவித்தார்

Advertisement

Advertisement

Advertisement