• Dec 04 2024

வெள்ளத்தால் அழிவடைந்த 600ற்கு மேற்பட்ட ஏக்கர் வயல் நிலங்கள் - கவலையில் கிளிநொச்சி விவசாயிகள்

Chithra / Dec 3rd 2024, 3:29 pm
image

கிளிநொச்சி - புளியம்பொக்கணை கமநல சேவை நிலையத்திற்குற்பட்ட துவரையாற்றை அண்டிய பகுதிகளிலுள்ள பல ஏக்கர் வயல் நிலங்கள் வெள்ள அனர்த்தத்தினால் அழிவடைந்துள்ளதாக விவசாயிகள் கவலை தெரிவிக்கின்றனர்.

சுமார் 600ற்கு மேற்பட்ட ஏக்கர் வயல் நிலங்கள் அழிவடைந்துள்ளதாக விவசாயிகள் தெரிவிக்கின்றனர். 

இரணைமடுக்குளத்தின் வான் நீர் பாய்ந்தமையினாலேயே குறித்த அழிவு இடம்பெற்றுள்ளதாகவும், 

இதனால் தமது வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளனர்.

கடனைப் பெற்று நெற்செய்கை மேற்கொண்ட நிலையில், தாம் கடனை எவ்வாறு செலுத்தப்போகிறோம் என தெரிவில்லை என  கவலை தெரிவிக்கின்றனர்.

உரிய அதிகாரிகள் தமது வயல் நிலங்களை பார்வையிட்டு தமக்கு நஷ்ட ஈட்டை பெற்றுத்தர நடவடிக்கை எடுக்குமாறும் கோரிக்கை விடுக்கின்றனர்.

அத்துடன் கடந்த வருட காலபோக நெற்செய்கையில் பாரிய அளவிலான நோய் தாக்கம் ஏற்பட்டு அறுவடையின் போது பாரிய வீழ்ச்சியை சந்தித்த விவசாயிகள், இம்முறை வெள்ளத்தினால்  பாதிக்கப்பட்டுள்ளதாக கவலை தெரிவித்துள்ளனர்.


வெள்ளத்தால் அழிவடைந்த 600ற்கு மேற்பட்ட ஏக்கர் வயல் நிலங்கள் - கவலையில் கிளிநொச்சி விவசாயிகள் கிளிநொச்சி - புளியம்பொக்கணை கமநல சேவை நிலையத்திற்குற்பட்ட துவரையாற்றை அண்டிய பகுதிகளிலுள்ள பல ஏக்கர் வயல் நிலங்கள் வெள்ள அனர்த்தத்தினால் அழிவடைந்துள்ளதாக விவசாயிகள் கவலை தெரிவிக்கின்றனர்.சுமார் 600ற்கு மேற்பட்ட ஏக்கர் வயல் நிலங்கள் அழிவடைந்துள்ளதாக விவசாயிகள் தெரிவிக்கின்றனர். இரணைமடுக்குளத்தின் வான் நீர் பாய்ந்தமையினாலேயே குறித்த அழிவு இடம்பெற்றுள்ளதாகவும், இதனால் தமது வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளனர்.கடனைப் பெற்று நெற்செய்கை மேற்கொண்ட நிலையில், தாம் கடனை எவ்வாறு செலுத்தப்போகிறோம் என தெரிவில்லை என  கவலை தெரிவிக்கின்றனர்.உரிய அதிகாரிகள் தமது வயல் நிலங்களை பார்வையிட்டு தமக்கு நஷ்ட ஈட்டை பெற்றுத்தர நடவடிக்கை எடுக்குமாறும் கோரிக்கை விடுக்கின்றனர்.அத்துடன் கடந்த வருட காலபோக நெற்செய்கையில் பாரிய அளவிலான நோய் தாக்கம் ஏற்பட்டு அறுவடையின் போது பாரிய வீழ்ச்சியை சந்தித்த விவசாயிகள், இம்முறை வெள்ளத்தினால்  பாதிக்கப்பட்டுள்ளதாக கவலை தெரிவித்துள்ளனர்.

Advertisement

Advertisement

Advertisement