• Jan 11 2025

நோய்த்தாக்கத்தால் நெற்செய்கை பாதிப்பு - இம்முறையும் பெரும் நஷ்டம்; கிளிநொச்சி விவசாயிகள் கவலை

Chithra / Jan 6th 2025, 2:17 pm
image

 

கிளிநொச்சி மாவட்டத்தில் இம்முறை 70000ற்கு மேற்பட்ட ஏக்கர் நிலப்பரப்பில் நெற்ச்செய்கை மேற்கொள்ளப்பட்ட நிலையில் வெள்ள அனர்த்தத்தினால் வயல் நிலங்கள் பாதிக்கப்பட்டிருந்தன.

தற்போது கபில நிறத் தத்தி மற்றும் மடிச்சுக்கட்டி நோய்த்தாக்கம் அதிகரித்த நிலையில் நெல்  பூரணமாக முதிர்வடையாத நிலையில் அறுவடை செய்ய ஆரம்பித்துள்ளனர்.

எஞ்சி இருக்கின்ற நெல்லையாவது காப்பாற்றும் நோக்குடன் தாம் அறுவடை ஆரம்பித்துள்ளதாக விவசாயிகள் தெரிவித்துள்ளனர்.

கடந்த போகங்களிலும் நோய்த்தாக்கம் காரணமாக விளைச்சல் குறைவடைந்த நிலையில் இம்முறையும் தாம் பெரும் நஷ்டத்தை எதிர்நோக்கியுள்ளதாக விவசாயிகள் தெரிவிக்கின்றனர்.

கடந்த கால போகத்திலும் ஒரு ஏக்கருக்கு 5-8மூடைகளே அறுவடை செய்ய முடிந்ததாக விவசாயிகள் தெரிவிக்கின்றனர்.


நோய்த்தாக்கத்தால் நெற்செய்கை பாதிப்பு - இம்முறையும் பெரும் நஷ்டம்; கிளிநொச்சி விவசாயிகள் கவலை  கிளிநொச்சி மாவட்டத்தில் இம்முறை 70000ற்கு மேற்பட்ட ஏக்கர் நிலப்பரப்பில் நெற்ச்செய்கை மேற்கொள்ளப்பட்ட நிலையில் வெள்ள அனர்த்தத்தினால் வயல் நிலங்கள் பாதிக்கப்பட்டிருந்தன.தற்போது கபில நிறத் தத்தி மற்றும் மடிச்சுக்கட்டி நோய்த்தாக்கம் அதிகரித்த நிலையில் நெல்  பூரணமாக முதிர்வடையாத நிலையில் அறுவடை செய்ய ஆரம்பித்துள்ளனர்.எஞ்சி இருக்கின்ற நெல்லையாவது காப்பாற்றும் நோக்குடன் தாம் அறுவடை ஆரம்பித்துள்ளதாக விவசாயிகள் தெரிவித்துள்ளனர்.கடந்த போகங்களிலும் நோய்த்தாக்கம் காரணமாக விளைச்சல் குறைவடைந்த நிலையில் இம்முறையும் தாம் பெரும் நஷ்டத்தை எதிர்நோக்கியுள்ளதாக விவசாயிகள் தெரிவிக்கின்றனர்.கடந்த கால போகத்திலும் ஒரு ஏக்கருக்கு 5-8மூடைகளே அறுவடை செய்ய முடிந்ததாக விவசாயிகள் தெரிவிக்கின்றனர்.

Advertisement

Advertisement

Advertisement