• May 20 2024

வலி. வடக்கில் விடுவிக்கப்பட்ட பகுதிகளிலுள்ள வீடுகளில் திருட்டு; இராணுவத்தின் மீது நடவடிக்கை எடுக்குமாறு மக்கள் கோரிக்கை

Chithra / Feb 9th 2023, 10:06 am
image

Advertisement

வலி.வடக்கில் விடுவிக்கப்பட்ட பகுதிகளில் உள்ள வீடுகளில் காணப்படும் பெறுமதி வாய்ந்த உபகரணங்களை இரவு நேரங்களில் சிவில் உடையில் இராணுவத்தினர் எனக் கூறி வந்தவர்கள் பிடுங்கிச் செல்வதாக உரிமையாளர்கள் கவலை தெரிவிக்கின்றனர்.

வலி. வடக்கில் கடந்த 3ஆம் திகதி விடுவிக்கப்பட்ட 108 ஏக்கர் காணியில் சில வீடுகள் கட்டடங்களும் காணப்படுகின்றன. அவ்வாறு காணப்படும் வீடுகளில் சில பெறுமதியான பொருட்களும் தற்போது வரையில் உள்ளது.


இவ்வாறு காணப்படும் மெறுமதியான பொறுட்களை நேற்று இரவு 8 மணியளவில் சிவில் உடையில் இராணுவத்தினர் எனக் கூறி வந்த 10ற்கும் மேற்பட்டோர் பிடிங்கிச் சென்ற சமயம், வீட்டின் உரிமையாளர்களிற்கு தகவல் கிடைத்து சம்பவ இடத்திற்கு சென்றபோதும் உரிமையாளர்களை அச்சுறுத்தி அவற்றை இராணுவ முகாமிற்கு எடுத்துச் சென்றுள்ளனர்.

உலகம் அறிய விடுவதுபோல் அமைச்சர் உள்ளிட்டோர் வந்து படம்காட்டிவிட்டுச் செல்ல இராணுவத்தினர் இரவில் திருடர்கள் போன்று வந்து பிடுங்கிச் செல்கின்றனர். 


33 வருடம் எம்மை அலைய விட்டும் பசி அடங்காத நிலையில் எஞ்சியவற்றையும் பிடுங்கிச் செல்லவே முனைகின்றனர்.

எனவே இந்த விடயத்தில் மாவட்ட அரச அதிபர் மற்றும் அதிகாரிகள் தலையிட்டு எமது சொத்துக்களை பாதுகாத்து தர வேண்டும் என உரிமையாளர்கள் கோருகின்றனர்.


வலி. வடக்கில் விடுவிக்கப்பட்ட பகுதிகளிலுள்ள வீடுகளில் திருட்டு; இராணுவத்தின் மீது நடவடிக்கை எடுக்குமாறு மக்கள் கோரிக்கை வலி.வடக்கில் விடுவிக்கப்பட்ட பகுதிகளில் உள்ள வீடுகளில் காணப்படும் பெறுமதி வாய்ந்த உபகரணங்களை இரவு நேரங்களில் சிவில் உடையில் இராணுவத்தினர் எனக் கூறி வந்தவர்கள் பிடுங்கிச் செல்வதாக உரிமையாளர்கள் கவலை தெரிவிக்கின்றனர்.வலி. வடக்கில் கடந்த 3ஆம் திகதி விடுவிக்கப்பட்ட 108 ஏக்கர் காணியில் சில வீடுகள் கட்டடங்களும் காணப்படுகின்றன. அவ்வாறு காணப்படும் வீடுகளில் சில பெறுமதியான பொருட்களும் தற்போது வரையில் உள்ளது.இவ்வாறு காணப்படும் மெறுமதியான பொறுட்களை நேற்று இரவு 8 மணியளவில் சிவில் உடையில் இராணுவத்தினர் எனக் கூறி வந்த 10ற்கும் மேற்பட்டோர் பிடிங்கிச் சென்ற சமயம், வீட்டின் உரிமையாளர்களிற்கு தகவல் கிடைத்து சம்பவ இடத்திற்கு சென்றபோதும் உரிமையாளர்களை அச்சுறுத்தி அவற்றை இராணுவ முகாமிற்கு எடுத்துச் சென்றுள்ளனர்.உலகம் அறிய விடுவதுபோல் அமைச்சர் உள்ளிட்டோர் வந்து படம்காட்டிவிட்டுச் செல்ல இராணுவத்தினர் இரவில் திருடர்கள் போன்று வந்து பிடுங்கிச் செல்கின்றனர். 33 வருடம் எம்மை அலைய விட்டும் பசி அடங்காத நிலையில் எஞ்சியவற்றையும் பிடுங்கிச் செல்லவே முனைகின்றனர்.எனவே இந்த விடயத்தில் மாவட்ட அரச அதிபர் மற்றும் அதிகாரிகள் தலையிட்டு எமது சொத்துக்களை பாதுகாத்து தர வேண்டும் என உரிமையாளர்கள் கோருகின்றனர்.

Advertisement

Advertisement

Advertisement