• May 13 2024

சுவிட்சர்லாந்து தமிழ் கல்விச்சேவையால் நடத்தப்பட்ட ஓவியப்போட்டி! samugammedia

Chithra / May 22nd 2023, 5:03 pm
image

Advertisement

சுவிட்சர்லாந்தில் ஆண்டுதோறும், “சுவிட்சர்லாந்து தமிழ் கல்விச்சேவையினால்” நடத்தப்படும் ஓவியப்போட்டி நேற்றையதினம்  இடம்பெற்றுள்ளது.

இந்த ஓவியப்போட்டியானது அந்நாடு முழுவதும் சுமார் 20 நிலையங்களில் நடைபெற்றுள்ளதுடன் 5 முதல் 19 வயது பிரிவுகளைச்சேர்ந்த 914 மாணவர்கள் பங்குபற்றியுள்ளனர்.

குறிப்பாக கடந்த ஆண்டு பங்குபற்றியதை விட இந்த ஆண்டு 198 மாணவர்கள் கூடுதலாக பங்குபற்றியுள்ளதாக ஏற்பாட்டுக்குழு தெரிவித்துள்ளது.

நடைபெற்ற போட்டியின் முடிவுகளை (14.06.2023) ஆம் திகதி பாடசாலை அதிபர் ஊடாக அல்லது கல்விச்சேவையின் இணையதளத்தில் பார்வையிட்டு அறிந்துகொள்ள முடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் வெற்றியாளர்களுக்கான பரிசில்கள் (02.09.2023) ஆம் திகதி சுவிட்சர்லாந்தில் நடைபெறவுள்ள தமிழ்க் கல்விச்சேவையின் முத்தமிழ் விழாவில் வழங்கப்படவுள்ளதாக ஏற்பாட்டுக்குழு தெரிவித்துள்ளது.

இதேவேளை போட்டிக்கு ஊக்குவிப்பு வழங்கிய கல்விச்சேவையின் தேர்வுப்பொறுப்பாளர், மாநில இணைப்பாளர்கள், அதிபர், ஆசிரியர்கள், பெற்றோர்கள் மற்றும் பங்குபற்றிய மாணவர்களுக்கு கல்விச்சேவை நிர்வாகம் நன்றி தெரிவித்துள்ளமையும் குறிப்பிடத்தக்கது.


சுவிட்சர்லாந்து தமிழ் கல்விச்சேவையால் நடத்தப்பட்ட ஓவியப்போட்டி samugammedia சுவிட்சர்லாந்தில் ஆண்டுதோறும், “சுவிட்சர்லாந்து தமிழ் கல்விச்சேவையினால்” நடத்தப்படும் ஓவியப்போட்டி நேற்றையதினம்  இடம்பெற்றுள்ளது.இந்த ஓவியப்போட்டியானது அந்நாடு முழுவதும் சுமார் 20 நிலையங்களில் நடைபெற்றுள்ளதுடன் 5 முதல் 19 வயது பிரிவுகளைச்சேர்ந்த 914 மாணவர்கள் பங்குபற்றியுள்ளனர்.குறிப்பாக கடந்த ஆண்டு பங்குபற்றியதை விட இந்த ஆண்டு 198 மாணவர்கள் கூடுதலாக பங்குபற்றியுள்ளதாக ஏற்பாட்டுக்குழு தெரிவித்துள்ளது.நடைபெற்ற போட்டியின் முடிவுகளை (14.06.2023) ஆம் திகதி பாடசாலை அதிபர் ஊடாக அல்லது கல்விச்சேவையின் இணையதளத்தில் பார்வையிட்டு அறிந்துகொள்ள முடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.மேலும் வெற்றியாளர்களுக்கான பரிசில்கள் (02.09.2023) ஆம் திகதி சுவிட்சர்லாந்தில் நடைபெறவுள்ள தமிழ்க் கல்விச்சேவையின் முத்தமிழ் விழாவில் வழங்கப்படவுள்ளதாக ஏற்பாட்டுக்குழு தெரிவித்துள்ளது.இதேவேளை போட்டிக்கு ஊக்குவிப்பு வழங்கிய கல்விச்சேவையின் தேர்வுப்பொறுப்பாளர், மாநில இணைப்பாளர்கள், அதிபர், ஆசிரியர்கள், பெற்றோர்கள் மற்றும் பங்குபற்றிய மாணவர்களுக்கு கல்விச்சேவை நிர்வாகம் நன்றி தெரிவித்துள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

Advertisement

Advertisement

Advertisement