மட்டக்களப்பு- வாகரை பிதேசத்தில் தற்காலிகமாக தங்கியிருந்த இளம் ஜோடி, ஐந்தரை மாதம் மதிக்கத்தக்க சிசுவை அவ்வீட்டிலேயே விட்டு தலைமறைவாகிவிட்டனர்.
குறித்த சோக சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,,
அதாவது இளம் ஜோடி, ஒரு கிழமைக்கு முன்னர், மற்றுமொரு பெண்ணின் உதவியுடன், கைக்குழந்தையுடன் இந்த தோட்டத்துக்கு தற்காலிகமாக வசிப்பதற்கு வந்துள்ளனர். கலஹா, லூல்கந்துர பிரதேசத்தில் உள்ள தோட்ட வீட்டில் விட்டுவிட்டே இவ்வாறு தலைமறைவாகிவிட்டனர்.
பின்னர் அங்கிருந்து ரகசியமான முறையில் தப்பிச்சென்றுள்ளனர் என்பது விசாரணைகளின் ஊடாக கண்டறியப்பட்டுள்ளது.
அங்கிருந்த போது அடையாளம் கண்டு கொண்ட மற்றுமொரு நபருக்கு தொலைபேசி அழைப்பை எடுத்துள்ள அந்த ஜோடி, தாங்கள் இருவரும் வெளிநாட்டுக்குச் செல்வதாகவும், கைக்குழந்தை தாங்கள் தங்கியிருந்த வீட்டின் அறையில் இருப்பதாகவும், அதனை வளர்ப்பதற்கு யாரிடமாவது கொடுத்து விடுமாறும் கேட்டுக்கொண்டுள்ளனர்.
மேலும் இது தொடர்பில், பொலிஸாருக்கு கிடைத்த தகவலை அடுத்து, சிசுவை மீட்ட பொலிஸார், அச்சிசுவை கலஹா வைத்தியசாலைக்குக் கொண்டுச்சென்றனர். அங்கு தாய்பால் ஊட்டுவதற்கு வசதிகள் இன்மையால், பேராதனை வைத்தியசாலைக்கு மாற்றியுள்ளனர். இந்த சம்பவம் தொடர்பில் கலஹா பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
மட்டக்களப்பில் ஐந்தரை மாத சிசுவை வீட்டிலேயே விட்டு தப்பிச் சென்ற பெற்றோர். மட்டக்களப்பு- வாகரை பிதேசத்தில் தற்காலிகமாக தங்கியிருந்த இளம் ஜோடி, ஐந்தரை மாதம் மதிக்கத்தக்க சிசுவை அவ்வீட்டிலேயே விட்டு தலைமறைவாகிவிட்டனர். குறித்த சோக சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,,அதாவது இளம் ஜோடி, ஒரு கிழமைக்கு முன்னர், மற்றுமொரு பெண்ணின் உதவியுடன், கைக்குழந்தையுடன் இந்த தோட்டத்துக்கு தற்காலிகமாக வசிப்பதற்கு வந்துள்ளனர். கலஹா, லூல்கந்துர பிரதேசத்தில் உள்ள தோட்ட வீட்டில் விட்டுவிட்டே இவ்வாறு தலைமறைவாகிவிட்டனர்.பின்னர் அங்கிருந்து ரகசியமான முறையில் தப்பிச்சென்றுள்ளனர் என்பது விசாரணைகளின் ஊடாக கண்டறியப்பட்டுள்ளது.அங்கிருந்த போது அடையாளம் கண்டு கொண்ட மற்றுமொரு நபருக்கு தொலைபேசி அழைப்பை எடுத்துள்ள அந்த ஜோடி, தாங்கள் இருவரும் வெளிநாட்டுக்குச் செல்வதாகவும், கைக்குழந்தை தாங்கள் தங்கியிருந்த வீட்டின் அறையில் இருப்பதாகவும், அதனை வளர்ப்பதற்கு யாரிடமாவது கொடுத்து விடுமாறும் கேட்டுக்கொண்டுள்ளனர்.மேலும் இது தொடர்பில், பொலிஸாருக்கு கிடைத்த தகவலை அடுத்து, சிசுவை மீட்ட பொலிஸார், அச்சிசுவை கலஹா வைத்தியசாலைக்குக் கொண்டுச்சென்றனர். அங்கு தாய்பால் ஊட்டுவதற்கு வசதிகள் இன்மையால், பேராதனை வைத்தியசாலைக்கு மாற்றியுள்ளனர். இந்த சம்பவம் தொடர்பில் கலஹா பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.