நீதிமன்றத்தின் உத்தரவு நடைமுறையிலிருக்கும் நிலையிலும், நீதிமன்றத்தில் விசாரணைகள் இடம்பெற்றுக் கொண்டிருக்கும் நிலையிலும் தேசபந்து தென்னக்கோனை பொலிஸ்மா அதிபர் பதவியிவிருந்து நீக்குவது குறித்து நாடாளுமன்றத்தால் எந்தவொரு தீர்மானத்தையும் எடுக்க முடியாது என முன்னாள் அமைச்சர் உதய கம்மன்பில தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் ஊடகங்களிடம் அவர் மேலும் கூறுகையில்,
பொலிஸ்மா அதிபர் பதவியிலிருந்து தேசபந்து தென்னக்கோனை நீக்குவதற்கான யோசனை நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படவுள்ளது என்று செய்திகள் வெளியாகியுள்ளன.
ஆனால், அது தவறான தகவலாகும். அவ்வாறு தேசபந்து தென்னக்கோனை தற்போது பொலிஸ்மா அதிபர் பதிவியிலிருந்து நீக்க முடியாது.
தற்போது நாட்டில் நீதிமன்றத் தடையுத்தரவுக்கு உள்ளாகியுள்ள பொலிஸ்மா அதிபருடன், பதில் பொலிஸ்மா அதிபர் ஒருவரும் இருக்கின்றார்.
வழக்கு விசாரணைகள் நிறைவடையும் வரை தேசபந்து தென்னக்கோன் பொலிஸ்மா அதிபருக்குரிய பணிகளைச் செய்வதற்கு நீதிமன்றத்தால் தடையுத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
அவ்வாறெனில் தற்போதும் தேசபந்துவே பொலிஸ்மா அதிபர் ஆவார். நீதிமன்றத்தின் உத்தரவு நடைமுறையிலிருக்கும் நிலையிலும், நீதிமன்றத்தில் விசாரணைகள் இடம்பெற்றுக் கொண்டிருக்கும் நிலையிலும் அது குறித்து நாடாளுமன்றத்தால் எந்தவொரு தீர்மானத்தையும் எடுக்க முடியாது.
அவ்வாறானதொரு நடவடிக்கை எடுக்கப்பட்டால் அது நேரடியாக நீதித்துறையில் நாடாளுமன்றம் ஆதிக்கம் செலுத்துவதாகவே அமையும்.
இந்த விவகாரத்தில் பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜேபால பொய் கூறி நாடாளுமன்றத்தை ஏமாற்றியிருக்கின்றார் என்றார்.
தேசபந்து தென்னக்கோனைப் பதவி நீக்க நாடாளுமன்றத்தால் முடியாது கம்மன்பில சுட்டிக்காட்டு நீதிமன்றத்தின் உத்தரவு நடைமுறையிலிருக்கும் நிலையிலும், நீதிமன்றத்தில் விசாரணைகள் இடம்பெற்றுக் கொண்டிருக்கும் நிலையிலும் தேசபந்து தென்னக்கோனை பொலிஸ்மா அதிபர் பதவியிவிருந்து நீக்குவது குறித்து நாடாளுமன்றத்தால் எந்தவொரு தீர்மானத்தையும் எடுக்க முடியாது என முன்னாள் அமைச்சர் உதய கம்மன்பில தெரிவித்துள்ளார்.இது தொடர்பில் ஊடகங்களிடம் அவர் மேலும் கூறுகையில்,பொலிஸ்மா அதிபர் பதவியிலிருந்து தேசபந்து தென்னக்கோனை நீக்குவதற்கான யோசனை நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படவுள்ளது என்று செய்திகள் வெளியாகியுள்ளன.ஆனால், அது தவறான தகவலாகும். அவ்வாறு தேசபந்து தென்னக்கோனை தற்போது பொலிஸ்மா அதிபர் பதிவியிலிருந்து நீக்க முடியாது.தற்போது நாட்டில் நீதிமன்றத் தடையுத்தரவுக்கு உள்ளாகியுள்ள பொலிஸ்மா அதிபருடன், பதில் பொலிஸ்மா அதிபர் ஒருவரும் இருக்கின்றார்.வழக்கு விசாரணைகள் நிறைவடையும் வரை தேசபந்து தென்னக்கோன் பொலிஸ்மா அதிபருக்குரிய பணிகளைச் செய்வதற்கு நீதிமன்றத்தால் தடையுத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.அவ்வாறெனில் தற்போதும் தேசபந்துவே பொலிஸ்மா அதிபர் ஆவார். நீதிமன்றத்தின் உத்தரவு நடைமுறையிலிருக்கும் நிலையிலும், நீதிமன்றத்தில் விசாரணைகள் இடம்பெற்றுக் கொண்டிருக்கும் நிலையிலும் அது குறித்து நாடாளுமன்றத்தால் எந்தவொரு தீர்மானத்தையும் எடுக்க முடியாது.அவ்வாறானதொரு நடவடிக்கை எடுக்கப்பட்டால் அது நேரடியாக நீதித்துறையில் நாடாளுமன்றம் ஆதிக்கம் செலுத்துவதாகவே அமையும்.இந்த விவகாரத்தில் பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜேபால பொய் கூறி நாடாளுமன்றத்தை ஏமாற்றியிருக்கின்றார் என்றார்.