• Mar 26 2025

சிவனடிபாத மலைக்கு தரிசனம் செய்ய வந்த நபர் உயிரிழப்பு..!

Sharmi / Mar 24th 2025, 9:03 am
image

சிவனடி பாத மலைக்கு தரிசனம் செய்ய வந்த நபர் உயிரிழந்துள்ளார்.

இச் சம்பவம் நேற்று இடம்பெற்றுள்ளது.

இவ்வாறு மரணித்தவர் மொரட்டுவ பகுதியில் இருந்து நேற்று முன்தினம் இரவு சிவனடி பாத மலைக்கு தரிசனம் செய்ய சென்ற வேளையில், ஊசி மலை பகுதியில் வைத்து திடீர் என சுகவீனம் காரணமாக உறவினர்கள் நல்லதண்ணி நகருக்கு அழைத்து வந்து அங்கு இருந்து அவசர அம்பூலன்ஸ் மூலம் மஸ்கெலியா மாவட்ட வைத்தியசாலைக்கு கொண்டு வரும் வேளையில் உயிரிழந்துள்ளார் என மஸ்கெலியா மாவட்ட வைத்தியசாலை அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

இவ்வாறு உயிரிழந்தவர் மொரட்டுவ பகுதியில் உள்ள 62 வயது உடைய அனுரகுமார பெர்நாந்து என அடையாளம் காணப்பட்டுள்ளது.

அவரது உடலம் டிக்கோயா கிளங்கன் ஆதார வைத்தியசாலையில் உள்ள சட்ட வைத்திய அதிகாரி முன்னிலையில் உடற்கூற்று பரிசோதனை மேற்கொண்ட பின்னர் உடலம் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது என நல்லதண்ணி பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி சாந்த வீரசேகர தெரிவித்தார்.

சிவனடிபாத மலைக்கு தரிசனம் செய்ய வந்த நபர் உயிரிழப்பு. சிவனடி பாத மலைக்கு தரிசனம் செய்ய வந்த நபர் உயிரிழந்துள்ளார்.இச் சம்பவம் நேற்று இடம்பெற்றுள்ளது.இவ்வாறு மரணித்தவர் மொரட்டுவ பகுதியில் இருந்து நேற்று முன்தினம் இரவு சிவனடி பாத மலைக்கு தரிசனம் செய்ய சென்ற வேளையில், ஊசி மலை பகுதியில் வைத்து திடீர் என சுகவீனம் காரணமாக உறவினர்கள் நல்லதண்ணி நகருக்கு அழைத்து வந்து அங்கு இருந்து அவசர அம்பூலன்ஸ் மூலம் மஸ்கெலியா மாவட்ட வைத்தியசாலைக்கு கொண்டு வரும் வேளையில் உயிரிழந்துள்ளார் என மஸ்கெலியா மாவட்ட வைத்தியசாலை அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.இவ்வாறு உயிரிழந்தவர் மொரட்டுவ பகுதியில் உள்ள 62 வயது உடைய அனுரகுமார பெர்நாந்து என அடையாளம் காணப்பட்டுள்ளது.அவரது உடலம் டிக்கோயா கிளங்கன் ஆதார வைத்தியசாலையில் உள்ள சட்ட வைத்திய அதிகாரி முன்னிலையில் உடற்கூற்று பரிசோதனை மேற்கொண்ட பின்னர் உடலம் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது என நல்லதண்ணி பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி சாந்த வீரசேகர தெரிவித்தார்.

Advertisement

Advertisement

Advertisement