சம்பள முரண்பாடு தொடர்பில் அதிபர் ஆசிரியர் சங்கம் மாத்திரமல்ல ஏனைய தொழிற்சங்கங்களுடனும் கலந்துரையாடி கடுமையான தொழிற்சங்க நடவடிக்கைகளை முன்னெடுக்க தயாராக உள்ளதாக இலங்கை ஆசிரியர் சங்கத்தின் செயலாளர் ஜோசப் ஸ்டாலின் தெரிவித்தார்.
சம்பள முரண்பாடு தொடர்பில் நேற்று கொழும்பில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.
பாராளுமன்றத்தில் ஜனாதிபதி இதுவரை அதிபர் மற்றும் ஆசிரியர்களின் சம்பள முரண்பாடு தொடர்பில் எவ்வித கருத்துக்களையும் தெரிவிக்கவில்லை.
வரவு – செலவு திட்டத்தை பாராளுமன்றத்தில் சமர்ப்பிப்பதற்கு முன்னரும் அவர் எவ்வித கருத்துகளையும் முன்வைக்கவில்லை.
ஆகையால் ஒட்டுமொத்த ஆசிரியர் துறையும் அரசாங்கத்தின் நிலைப்பாடு தொடர்பில் அதிருப்தி அடைந்துள்ளது.
சர்வதேச நாணய நிதியத்திடம் இருந்து உதவியை பெற்றுக் கொண்டதன் பின்னர் பல்கலைக்கழக பேராசிரியர்களுக்கான சம்பளம் உள்ளிட்ட கொடுப்பனவை அதிகரிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டது.
நாம் அதற்கு எதிராக எவ்வித கருத்துகளையும் முன்வைக்கப் போவதில்லை. எனினும் அதிபர் ஆசிரியர் குறித்து கவனத்தில் கொண்டிருக்கலாம் என்பதே எமது கோரிக்கை.
பாடசாலை மீண்டும் ஆரம்பிக்கப்பட்டதன் பின்னர், அதிபர் ஆசிரியர் சங்கம் மாத்திரம் அல்ல ஏனைய தொழிற்சங்கங்களுடனும் கலந்துரையாடி கடுமையான தொழிற்சங்க நடவடிக்கைகளை முன்னெடுக்க தயாராக உள்ளோம் என்றார்.
சகல தொழிற்சங்கங்களுடனும் இணைந்து கடுமையான தொழிற்சங்க நடவடிக்கை ஜோசப் ஸ்டாலின் எச்சரிக்கை சம்பள முரண்பாடு தொடர்பில் அதிபர் ஆசிரியர் சங்கம் மாத்திரமல்ல ஏனைய தொழிற்சங்கங்களுடனும் கலந்துரையாடி கடுமையான தொழிற்சங்க நடவடிக்கைகளை முன்னெடுக்க தயாராக உள்ளதாக இலங்கை ஆசிரியர் சங்கத்தின் செயலாளர் ஜோசப் ஸ்டாலின் தெரிவித்தார்.சம்பள முரண்பாடு தொடர்பில் நேற்று கொழும்பில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.பாராளுமன்றத்தில் ஜனாதிபதி இதுவரை அதிபர் மற்றும் ஆசிரியர்களின் சம்பள முரண்பாடு தொடர்பில் எவ்வித கருத்துக்களையும் தெரிவிக்கவில்லை.வரவு – செலவு திட்டத்தை பாராளுமன்றத்தில் சமர்ப்பிப்பதற்கு முன்னரும் அவர் எவ்வித கருத்துகளையும் முன்வைக்கவில்லை.ஆகையால் ஒட்டுமொத்த ஆசிரியர் துறையும் அரசாங்கத்தின் நிலைப்பாடு தொடர்பில் அதிருப்தி அடைந்துள்ளது. சர்வதேச நாணய நிதியத்திடம் இருந்து உதவியை பெற்றுக் கொண்டதன் பின்னர் பல்கலைக்கழக பேராசிரியர்களுக்கான சம்பளம் உள்ளிட்ட கொடுப்பனவை அதிகரிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டது.நாம் அதற்கு எதிராக எவ்வித கருத்துகளையும் முன்வைக்கப் போவதில்லை. எனினும் அதிபர் ஆசிரியர் குறித்து கவனத்தில் கொண்டிருக்கலாம் என்பதே எமது கோரிக்கை.பாடசாலை மீண்டும் ஆரம்பிக்கப்பட்டதன் பின்னர், அதிபர் ஆசிரியர் சங்கம் மாத்திரம் அல்ல ஏனைய தொழிற்சங்கங்களுடனும் கலந்துரையாடி கடுமையான தொழிற்சங்க நடவடிக்கைகளை முன்னெடுக்க தயாராக உள்ளோம் என்றார்.