• Oct 10 2024

சினிமாப் படப்பிடிப்புக்காக மூடப்படும் மலையக தொடருந்து பாதையின் ஒரு பகுதி!

Chithra / Oct 9th 2024, 8:09 am
image

Advertisement

 

 

மலையக தொடருந்து பாதையின் பதுளை, எல்ல ஒன்பது வளைவுகள் பிரதேசம் தற்காலிகமாக மூடப்படவுள்ளது.

அதன் பிரகாரம் இன்று தொடக்கம் எதி்ர்வரும் 15ம் திகதி வரை எல்ல தொடக்கம் பதுளை வரையான தொடருந்து பாதை தற்காலிகமாக மூடப்படவுள்ளது.

இந்திய சினிமாப் படப்பிடிப்பு ஒன்றிற்காகவே இவ்வாறு தொடருந்து பாதை தற்காலிகமாக மூடப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது.

தொடருந்து பாதை தற்காலிகமாக மூடப்படும் நாட்களில் கொழும்பு - பதுளை தொடருந்துகள் கொழும்பில் இருந்து எல்ல தொடருந்து நிலையம் வரை மட்டுமே பயணிக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

பதுளை- கொழும்பு தொடருந்துகளும் எல்ல தொடருந்து நிலையத்தில் இருந்தே புறப்படும் என்று  திணைக்களம் அறிவித்துள்ளது.

சினிமாப் படப்பிடிப்புக்காக மூடப்படும் மலையக தொடருந்து பாதையின் ஒரு பகுதி   மலையக தொடருந்து பாதையின் பதுளை, எல்ல ஒன்பது வளைவுகள் பிரதேசம் தற்காலிகமாக மூடப்படவுள்ளது.அதன் பிரகாரம் இன்று தொடக்கம் எதி்ர்வரும் 15ம் திகதி வரை எல்ல தொடக்கம் பதுளை வரையான தொடருந்து பாதை தற்காலிகமாக மூடப்படவுள்ளது.இந்திய சினிமாப் படப்பிடிப்பு ஒன்றிற்காகவே இவ்வாறு தொடருந்து பாதை தற்காலிகமாக மூடப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது.தொடருந்து பாதை தற்காலிகமாக மூடப்படும் நாட்களில் கொழும்பு - பதுளை தொடருந்துகள் கொழும்பில் இருந்து எல்ல தொடருந்து நிலையம் வரை மட்டுமே பயணிக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.பதுளை- கொழும்பு தொடருந்துகளும் எல்ல தொடருந்து நிலையத்தில் இருந்தே புறப்படும் என்று  திணைக்களம் அறிவித்துள்ளது.

Advertisement

Advertisement

Advertisement