• Feb 02 2025

களத்திற்கு செல்ல கட்சி நிர்வாகிகள் தயங்கக் கூடாது – த.வெ.க தலைவர் விஜய்

Tharmini / Feb 1st 2025, 12:11 pm
image

தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய் பனையூர் அலுவலகத்தில் நிர்வாகிகளோடு ஆலோசனை நடத்தியுள்ளார்.

இதைதொடர்ந்து, விஜய் கடந்த 28ம் முதல் 4 நாட்களுக்கு கட்சி நிர்வாகிகளுடன் ஆலோசனை மேற்கொண்டார். மேலும், தேர்வு செய்யப்பட்ட நிர்வாகிகளிடம் விஜய் நேர்காணல் நடத்தி வருகிறார்.

அதன்படி, 234 சட்டசபை தொகுதிகளுக்கும் பணிகளை தீவிரப்படுத்த 120 மாவட்ட செயலாளர்களில் பெரும்பாலானவர்கள் தேர்வு செய்யப்பட்டுவிட்டனர். அதில், முதல் கட்டம், 2ம் கட்டம், 3ம் கட்டமாக புதிதாக மாவட்ட செயலாளர்களின் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது.

இந்நிலையில், நேற்று தேர்வு செய்யப்பட்ட புதிய நிர்வாகிகள் மத்தியில் தவெக தலைவர் விஜய் உரையாடுகையில், 2026 ஆம் ஆண்டு இலக்கை அடைய என்ன செய்ய வேண்டுமோ அதை செய்வேன் என்றும், மக்கள் பணிகளை இனி தீவிரமாக மேற்கொள்ள வேண்டும்; என்றும் குறிப்பிட்டார்.

மேலும், கட்சி நிர்வாகிகள் களத்திற்கு செல்ல தயங்கக் கூடாது. உங்கள் உழைப்பில்தான் கட்சியின் வளர்ச்சி உள்ளது.

நானும் உழைக்கிறேன்; நீங்களும் உழையுங்கள்; வெற்றி அடைவோம் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

களத்திற்கு செல்ல கட்சி நிர்வாகிகள் தயங்கக் கூடாது – த.வெ.க தலைவர் விஜய் தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய் பனையூர் அலுவலகத்தில் நிர்வாகிகளோடு ஆலோசனை நடத்தியுள்ளார்.இதைதொடர்ந்து, விஜய் கடந்த 28ம் முதல் 4 நாட்களுக்கு கட்சி நிர்வாகிகளுடன் ஆலோசனை மேற்கொண்டார். மேலும், தேர்வு செய்யப்பட்ட நிர்வாகிகளிடம் விஜய் நேர்காணல் நடத்தி வருகிறார்.அதன்படி, 234 சட்டசபை தொகுதிகளுக்கும் பணிகளை தீவிரப்படுத்த 120 மாவட்ட செயலாளர்களில் பெரும்பாலானவர்கள் தேர்வு செய்யப்பட்டுவிட்டனர். அதில், முதல் கட்டம், 2ம் கட்டம், 3ம் கட்டமாக புதிதாக மாவட்ட செயலாளர்களின் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது.இந்நிலையில், நேற்று தேர்வு செய்யப்பட்ட புதிய நிர்வாகிகள் மத்தியில் தவெக தலைவர் விஜய் உரையாடுகையில், 2026 ஆம் ஆண்டு இலக்கை அடைய என்ன செய்ய வேண்டுமோ அதை செய்வேன் என்றும், மக்கள் பணிகளை இனி தீவிரமாக மேற்கொள்ள வேண்டும்; என்றும் குறிப்பிட்டார்.மேலும், கட்சி நிர்வாகிகள் களத்திற்கு செல்ல தயங்கக் கூடாது. உங்கள் உழைப்பில்தான் கட்சியின் வளர்ச்சி உள்ளது.நானும் உழைக்கிறேன்; நீங்களும் உழையுங்கள்; வெற்றி அடைவோம் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

Advertisement

Advertisement

Advertisement