• Feb 01 2025

குளிரில் உறைந்த உலகப் புகழ் பெற்ற நயாகரா நீர்வீழ்ச்சி

Tharmini / Feb 1st 2025, 11:34 am
image

அமெரிக்காவில் நிலவி வரும் கடுங்குளிர் காரணமாக உலகப் புகழ் பெற்ற நயாகரா நீர்வீழ்ச்சி பாய்ந்து செல்லும் இடங்களில் பனிபடர்ந்து ரம்மியமாக காட்சி அளிக்கிறது.

வெள்ளைப் போர்வை போர்த்தியது போன்று காணப்படும் நயாகரா அருவியின் அழகை நேரில் காண அமெரிக்கா மற்றும் கனடாவின் பல்வேறு பகுதிகளிலிருந்தும் படையெடுத்து வருகின்றனர்.

உறைபனிக்கு மத்தியில் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டும் காட்சிகள் வெளியாகி கண்களை கவர்ந்து வருகிறது.

கடுமையான குளிரால் நீரின் சிலப்பகுதிகள் உறைந்தும் பனிப்பொழிவால் மூடப்பட்டும் காட்சியளிக்கின்றன. மேற்பகுதி உறைந்த நிலையில் காணப்பட்டாலும் நீர் முழுமையாக உறையவில்லை. எனவே, அடிப்பகுதியில் நீரோட்டம் நடக்கிறது.

குளிரில் உறைந்த உலகப் புகழ் பெற்ற நயாகரா நீர்வீழ்ச்சி அமெரிக்காவில் நிலவி வரும் கடுங்குளிர் காரணமாக உலகப் புகழ் பெற்ற நயாகரா நீர்வீழ்ச்சி பாய்ந்து செல்லும் இடங்களில் பனிபடர்ந்து ரம்மியமாக காட்சி அளிக்கிறது.வெள்ளைப் போர்வை போர்த்தியது போன்று காணப்படும் நயாகரா அருவியின் அழகை நேரில் காண அமெரிக்கா மற்றும் கனடாவின் பல்வேறு பகுதிகளிலிருந்தும் படையெடுத்து வருகின்றனர்.உறைபனிக்கு மத்தியில் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டும் காட்சிகள் வெளியாகி கண்களை கவர்ந்து வருகிறது.கடுமையான குளிரால் நீரின் சிலப்பகுதிகள் உறைந்தும் பனிப்பொழிவால் மூடப்பட்டும் காட்சியளிக்கின்றன. மேற்பகுதி உறைந்த நிலையில் காணப்பட்டாலும் நீர் முழுமையாக உறையவில்லை. எனவே, அடிப்பகுதியில் நீரோட்டம் நடக்கிறது.

Advertisement

Advertisement

Advertisement