• Mar 15 2025

'படலந்த ஆணைக்குழு அறிக்கை' பாராளுமன்றில் சமர்ப்பிப்பு..!

Sharmi / Mar 14th 2025, 11:00 am
image

‘படலந்த ஆணைக்குழு அறிக்கை’ இன்று(14)  நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டது.

குறித்த அறிக்கையை சபை முதல்வர்  அமைச்சர் பிமல் ரத்நாயக்க சமர்ப்பித்தார்.

இது தொடர்பில் நாடாளுமன்றத்தில் உரையாற்றிய அமைச்சர் ரத்நாயக்க, 

படலந்த ஆணைக்குழு அறிக்கை தொடர்பாக நடவடிக்கை எடுப்பதற்காக ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்கவுடன் இணைந்து அமைச்சரவை ஒரு கொள்கை முடிவு எடுத்துள்ளதாக தெரிவித்தார்.

அறிக்கை குறித்து பரிந்துரைகளை வழங்கவும், தேவையான ஆலோசனைகளுக்காக சட்டமா அதிபருக்கு அனுப்பவும் ஒரு சிறப்புக் குழுவை நியமிக்க முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக அவர் மேலும்  தெரிவித்தார்.

'படலந்த ஆணைக்குழு அறிக்கை' பாராளுமன்றில் சமர்ப்பிப்பு. ‘படலந்த ஆணைக்குழு அறிக்கை’ இன்று(14)  நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டது.குறித்த அறிக்கையை சபை முதல்வர்  அமைச்சர் பிமல் ரத்நாயக்க சமர்ப்பித்தார்.இது தொடர்பில் நாடாளுமன்றத்தில் உரையாற்றிய அமைச்சர் ரத்நாயக்க, படலந்த ஆணைக்குழு அறிக்கை தொடர்பாக நடவடிக்கை எடுப்பதற்காக ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்கவுடன் இணைந்து அமைச்சரவை ஒரு கொள்கை முடிவு எடுத்துள்ளதாக தெரிவித்தார்.அறிக்கை குறித்து பரிந்துரைகளை வழங்கவும், தேவையான ஆலோசனைகளுக்காக சட்டமா அதிபருக்கு அனுப்பவும் ஒரு சிறப்புக் குழுவை நியமிக்க முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக அவர் மேலும்  தெரிவித்தார்.

Advertisement

Advertisement

Advertisement