• Nov 28 2024

புத்தளத்தில் வீதியைப் புனரமைத்து தருமாறு கோரி இன்று மக்கள் போராட்டம்

Tharmini / Oct 17th 2024, 3:04 pm
image

புத்தளம் மாவட்டத்தின் முந்தல் பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட கொத்தான்தீவு கிராமத்தில் இருந்து கட்டைக்காடு ஊடாக சின்னப்பாடு வரை செல்லும் 5 கிலோ மீற்றர் வீதியைப் புனரமைத்தை தருமாறு கோரி மக்கள் இன்று (17) போராட்டத்தில் ஈடுபட்டனர். உடப்பு - கரம்பை பிரதான வீதியின் கட்டைக்காடு முச் சந்தியில் இன்று (17) காலை 9.00 மணி முதல் காலை 10.00 மணி வரை மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

'கட்டைக்காடு வீதி மோசடியுடன் சம்பந்தப்பட்ட விஷமிகளை கைது செய்ய வேண்டும்', 'வீதி புனரமைப்பு தொடர்பில் விரிவான விசாரணை நடத்தப்பட வேண்டும்', 'அரசு எம்முடன், நாமும் அரசுடன்தான்', 'எமது பகுதியை ஊழல்வாதிகளிடமிருந்து பாதுகாத்திடுங்கள்' என்று இதுபோன்ற பல வாசகங்கள் எழுதப்பட்ட பல்வேறு பதாதைகளை ஏந்தியவாறு கோஷங்களை எழுப்பி போராட்டக்காரர்கள் தமது எதிர்ப்பினை வெளியிட்டனர்.

இந்த வீதியை கார்ப்பட்ட வீதியாக புனரமைப்பு செய்வதற்காக கடந்த அரசாங்கத்தினால் abc கற்கள் போட்டப்பட்டு ஒரு வருடமாகியும் இது வரை புனரமைப்பு செய்யப்படாமையினால் இந்த வீதியை பயன்படுத்தும் மக்கள் பல்வேறு சிரமங்களை எதிர் நோக்கி வருவதாக மக்கள் சுட்டிக்காட்டுகின்றனர். இதன்போது அங்கு வருகைதந்த உடப்பு பொலிஸார் போராட்டக்கார்களுடன் கலந்துரையாடினார்கள்.





புத்தளத்தில் வீதியைப் புனரமைத்து தருமாறு கோரி இன்று மக்கள் போராட்டம் புத்தளம் மாவட்டத்தின் முந்தல் பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட கொத்தான்தீவு கிராமத்தில் இருந்து கட்டைக்காடு ஊடாக சின்னப்பாடு வரை செல்லும் 5 கிலோ மீற்றர் வீதியைப் புனரமைத்தை தருமாறு கோரி மக்கள் இன்று (17) போராட்டத்தில் ஈடுபட்டனர். உடப்பு - கரம்பை பிரதான வீதியின் கட்டைக்காடு முச் சந்தியில் இன்று (17) காலை 9.00 மணி முதல் காலை 10.00 மணி வரை மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.'கட்டைக்காடு வீதி மோசடியுடன் சம்பந்தப்பட்ட விஷமிகளை கைது செய்ய வேண்டும்', 'வீதி புனரமைப்பு தொடர்பில் விரிவான விசாரணை நடத்தப்பட வேண்டும்', 'அரசு எம்முடன், நாமும் அரசுடன்தான்', 'எமது பகுதியை ஊழல்வாதிகளிடமிருந்து பாதுகாத்திடுங்கள்' என்று இதுபோன்ற பல வாசகங்கள் எழுதப்பட்ட பல்வேறு பதாதைகளை ஏந்தியவாறு கோஷங்களை எழுப்பி போராட்டக்காரர்கள் தமது எதிர்ப்பினை வெளியிட்டனர்.இந்த வீதியை கார்ப்பட்ட வீதியாக புனரமைப்பு செய்வதற்காக கடந்த அரசாங்கத்தினால் abc கற்கள் போட்டப்பட்டு ஒரு வருடமாகியும் இது வரை புனரமைப்பு செய்யப்படாமையினால் இந்த வீதியை பயன்படுத்தும் மக்கள் பல்வேறு சிரமங்களை எதிர் நோக்கி வருவதாக மக்கள் சுட்டிக்காட்டுகின்றனர். இதன்போது அங்கு வருகைதந்த உடப்பு பொலிஸார் போராட்டக்கார்களுடன் கலந்துரையாடினார்கள்.

Advertisement

Advertisement

Advertisement