• Apr 02 2025

இறந்து கரையொதுங்கும் முதலைகளால் துர்நாற்றம் - மக்கள் அசௌகரியம்

Chithra / Jul 14th 2024, 2:38 pm
image

 

 

அம்பாறை மாவட்டம் காரைதீவு பொலிஸ் பிரிவிற்குட்பட்ட மாவடிப்பள்ளி பாலம் அருகில் அண்மைக்காலமாக பல முதலைகள்  இறந்த நிலையில் கரையொதுங்கி வருகின்றன. இதனால் இப்பகுதி எங்கும் துர்நாற்றம் வீசுவதுடன் பொதுமக்கள் சிரமத்துடன்  பயணம் செய்வதாக தெரியவருகின்றது.

மேலும் இப்பாலத்தை அண்டிய பகுதிகளில் சுமார் 30க்கு அதிகமான முதலைகள் காணப்பட்ட போதிலும் தற்போது 10 முதல் 15 வரையிலான முதலைகளே காணப்படுவதாக தெரிவிக்கப்படுகின்றது.

சுமார் 7 அடி முதல் 8 மற்றும் 9 அடி முதலைகள் தற்போது இறந்த நிலையில் நீரில் மிதந்து காணப்படுகின்றன.

அத்துடன் குறித்த பாலத்தை சுற்றி சட்டவிரோதமாக குப்பைகளும் கொட்டப்பட்டுள்ளன.

இவ்வாறு முதலைகள் இறந்த நிலையில் காணப்படுவது குறித்து பல்வேறு சந்தேகங்களை பொதுமக்கள் தெரிவித்து வருகின்றனர்.


இறந்து கரையொதுங்கும் முதலைகளால் துர்நாற்றம் - மக்கள் அசௌகரியம்   அம்பாறை மாவட்டம் காரைதீவு பொலிஸ் பிரிவிற்குட்பட்ட மாவடிப்பள்ளி பாலம் அருகில் அண்மைக்காலமாக பல முதலைகள்  இறந்த நிலையில் கரையொதுங்கி வருகின்றன. இதனால் இப்பகுதி எங்கும் துர்நாற்றம் வீசுவதுடன் பொதுமக்கள் சிரமத்துடன்  பயணம் செய்வதாக தெரியவருகின்றது.மேலும் இப்பாலத்தை அண்டிய பகுதிகளில் சுமார் 30க்கு அதிகமான முதலைகள் காணப்பட்ட போதிலும் தற்போது 10 முதல் 15 வரையிலான முதலைகளே காணப்படுவதாக தெரிவிக்கப்படுகின்றது.சுமார் 7 அடி முதல் 8 மற்றும் 9 அடி முதலைகள் தற்போது இறந்த நிலையில் நீரில் மிதந்து காணப்படுகின்றன.அத்துடன் குறித்த பாலத்தை சுற்றி சட்டவிரோதமாக குப்பைகளும் கொட்டப்பட்டுள்ளன.இவ்வாறு முதலைகள் இறந்த நிலையில் காணப்படுவது குறித்து பல்வேறு சந்தேகங்களை பொதுமக்கள் தெரிவித்து வருகின்றனர்.

Advertisement

Advertisement

Advertisement

Buy Now