• Nov 28 2024

கொழும்பில் மலர் வளையங்கள், சடலத்துடன் ஒன்று திரண்ட மக்கள்! குவிக்கப்பட்டுள்ள பொலிஸார்..!

Chithra / Jan 16th 2024, 1:58 pm
image

முன்னாள் சுகாதார அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்லவுக்கு எதிராக கொழும்பில் இன்று பாரிய ஆர்ப்பாட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது.

கெஹலியவுக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் வீதி நாடகமும் நடத்தப்பட்டுள்ளது.

ஆர்ப்பாட்டக் களத்தில் மலர் வளையங்கள், மற்றும் உயிரிழந்த சடலங்களைப் போல உருவங்களை வடிவமைத்து தமது எதிர்ப்புக்களை வெளியிட்டு வருகின்றனர்.

இலங்கையில் சுகாதாரத்துறையில் காணப்படும் பிரச்சினைகளுக்கு முன்னாள் அமைச்சர் கெஹலியவே  பதிலளிக்க வேண்டும் என தெரிவித்து இந்த போராட்டம் முன்னெடுக்கப்படுகிறது.

அத்துடன், போலி மருந்துகளை இறக்குமதி செய்வதற்கு காரணமான முன்னாள் அமைச்சர் கெஹலியவை கைது செய்ய வேண்டும் எனவும் இந்த போராட்டத்தில் வலியுறுத்தப்பட்டது.

இதேவேளை போராட்டக் களத்திற்கு வருகைத் தந்த நாடாளுமன்ற உறுப்பினர் காவிந்த ஜயவர்தனவிற்கு போராட்டக்காரர்கள் கடும் எதிர்ப்பு வெளியிட்டுள்ளனர்.

கடந்த முதலாம் திகதி முன்னாள் அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்லவின் வீட்டுக்கு முன்னால் மலர் வளையம் ஒன்று வைக்கப்பட்டமை குறித்து கெஹலியவின் மகள் செய்த முறைப்பாட்டுக்கு அமைய ஒரு சில சிவில் செயற்பாட்டாளர்கள் கறுவாத் தோட்டம் பொலிஸ் நிலையத்திற்கு அழைக்கப்பட்டுள்ளனர். 

இதன் காரணமாகவே கறுவாத் தோட்டம் பொலிஸ் நிலையத்திற்கு இந்த சிவில் செயற்பாட்டாளர்கள் சென்றுள்ளதாகவும், அவர்களிடத்தில் விசாரணை மேற்கொள்ளப்படுவதாக  தெரிவிக்கப்படுகின்றது.

அதேவேளை, குறித்த விடயங்கள் தொடர்பில் எதிர்க்கட்சித் தலைவர் நாடாளுமன்றத்தில் கேள்வி எழுப்பவோ நடவடிக்கை எடுக்கவோ இல்லை என தெரிவித்தும் போராட்டக்காரர்கள் கோஷமிட்டு வருகின்றனர்.

மேலும் சிவில் செயற்பாட்டாளர்கள் மற்றும் காலி முகத்திடல் போராட்டக்காரர்கள் ஒன்றிணைந்து போராட்டத்தில் ஈடுபட்டு வருவதுடன், நீர்த்தாரைப் பிரயோக வண்டிகளும் தயார் நிலையில் உள்ளன. 

மேலும், கண்ணீர்ப்புகை தாக்குதல் நடத்துவதற்கு கலகத் தடுப்பு பொலிஸாரும் தயார் நிலையில் உள்ளனர்.


கொழும்பில் மலர் வளையங்கள், சடலத்துடன் ஒன்று திரண்ட மக்கள் குவிக்கப்பட்டுள்ள பொலிஸார். முன்னாள் சுகாதார அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்லவுக்கு எதிராக கொழும்பில் இன்று பாரிய ஆர்ப்பாட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது.கெஹலியவுக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் வீதி நாடகமும் நடத்தப்பட்டுள்ளது.ஆர்ப்பாட்டக் களத்தில் மலர் வளையங்கள், மற்றும் உயிரிழந்த சடலங்களைப் போல உருவங்களை வடிவமைத்து தமது எதிர்ப்புக்களை வெளியிட்டு வருகின்றனர்.இலங்கையில் சுகாதாரத்துறையில் காணப்படும் பிரச்சினைகளுக்கு முன்னாள் அமைச்சர் கெஹலியவே  பதிலளிக்க வேண்டும் என தெரிவித்து இந்த போராட்டம் முன்னெடுக்கப்படுகிறது.அத்துடன், போலி மருந்துகளை இறக்குமதி செய்வதற்கு காரணமான முன்னாள் அமைச்சர் கெஹலியவை கைது செய்ய வேண்டும் எனவும் இந்த போராட்டத்தில் வலியுறுத்தப்பட்டது.இதேவேளை போராட்டக் களத்திற்கு வருகைத் தந்த நாடாளுமன்ற உறுப்பினர் காவிந்த ஜயவர்தனவிற்கு போராட்டக்காரர்கள் கடும் எதிர்ப்பு வெளியிட்டுள்ளனர்.கடந்த முதலாம் திகதி முன்னாள் அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்லவின் வீட்டுக்கு முன்னால் மலர் வளையம் ஒன்று வைக்கப்பட்டமை குறித்து கெஹலியவின் மகள் செய்த முறைப்பாட்டுக்கு அமைய ஒரு சில சிவில் செயற்பாட்டாளர்கள் கறுவாத் தோட்டம் பொலிஸ் நிலையத்திற்கு அழைக்கப்பட்டுள்ளனர். இதன் காரணமாகவே கறுவாத் தோட்டம் பொலிஸ் நிலையத்திற்கு இந்த சிவில் செயற்பாட்டாளர்கள் சென்றுள்ளதாகவும், அவர்களிடத்தில் விசாரணை மேற்கொள்ளப்படுவதாக  தெரிவிக்கப்படுகின்றது.அதேவேளை, குறித்த விடயங்கள் தொடர்பில் எதிர்க்கட்சித் தலைவர் நாடாளுமன்றத்தில் கேள்வி எழுப்பவோ நடவடிக்கை எடுக்கவோ இல்லை என தெரிவித்தும் போராட்டக்காரர்கள் கோஷமிட்டு வருகின்றனர்.மேலும் சிவில் செயற்பாட்டாளர்கள் மற்றும் காலி முகத்திடல் போராட்டக்காரர்கள் ஒன்றிணைந்து போராட்டத்தில் ஈடுபட்டு வருவதுடன், நீர்த்தாரைப் பிரயோக வண்டிகளும் தயார் நிலையில் உள்ளன. மேலும், கண்ணீர்ப்புகை தாக்குதல் நடத்துவதற்கு கலகத் தடுப்பு பொலிஸாரும் தயார் நிலையில் உள்ளனர்.

Advertisement

Advertisement

Advertisement