• Apr 02 2025

யாழில் சீரற்ற காலநிலையால் சிரமத்தில் மக்கள்..!அரசியல் தரப்பினரிடம் கீதநாத் வேண்டுகோள்..!

Sharmi / Nov 23rd 2024, 9:06 am
image

தேர்தலிற்கு பல கோடி ரூபாக்களை செலவு செய்தவர்கள் மழையால் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவுவதற்கும் முன் வரவேண்டும் என பொதுஜன பெரமுன கட்சியின் யாழ் மாவட்ட அமைப்பாளரான கீதாநாத் காசிலிங்கம் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

யாழ். மாவட்டத்தில் ஒரு நாள் பெய்த கன மழைக்கு 610 குடும்பங்கள் பாதிப்படையும் நிலையிலேயே இன்றும் யாழ்ப்பாணம் உள்ளது. 

எமது அரசு மீண்டும் ஆட்சிபீடம் ஏறினால் வடக்கின் வசந்தம் இரண்டாம் கட்டத்தின் கீழ் மக்களின் இத்தகைய இடப்பெயர்வு இடம்பெறாத வகையிலான ஓர் அபிவிருத்தி முன்னெடுக்கப்படும்.

இதேநேரம் நடந்து முடிந்த தேர்தலில் வடக்கு கிழக்கில் இருந்து அதிக மக்கள் தேசிய மக்கள் சக்திக்கு வாக்களித்த போதும் வடக்கு கிழக்கைச் சேரந்தவர்களிற்கு அமைச்சுப் பதவி வழங்கப்படவில்லை.

இ.சந்திரசேகரம் வடக்கு கிழக்கில் சேவையாற்றியிருக்கலாம். ஆனால் வடக்கு கிழக்கில் அமைச்சரவை அமைச்சரோ வடக்கில் ஓர் பிரதி அமைச்சரோ இந்த அரசில் கிடையாது.

வடக்கு கிழக்கில் இல்லாத பொய் எல்லாம் சொல்லி வாக்கை எடுத்தனர். ஆனால் இலங்கையின் வரலாற்றில் ஒரு முஸ்லீமோ அல்லது வடக்கு கிழக்கு பிரதிநிதியோ இல்லாத அமைச்சரவையை முதல் தடவையாக உருவாக்கியுள்ளனர்.

இதனைக் கேட்டால் இன மதமற்ற திறமையானவர்களிற்கு அமைச்சரவையில் இடமளித்திருப்பதாக கூறுகின்றனர்.

அப்படியானால் திறமையானவர்களைப் பட்டியலில் இணைத்திருக்க வேண்டும் எனவும் தெரிவித்தார்.

யாழில் சீரற்ற காலநிலையால் சிரமத்தில் மக்கள்.அரசியல் தரப்பினரிடம் கீதநாத் வேண்டுகோள். தேர்தலிற்கு பல கோடி ரூபாக்களை செலவு செய்தவர்கள் மழையால் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவுவதற்கும் முன் வரவேண்டும் என பொதுஜன பெரமுன கட்சியின் யாழ் மாவட்ட அமைப்பாளரான கீதாநாத் காசிலிங்கம் வேண்டுகோள் விடுத்துள்ளார்.யாழ். மாவட்டத்தில் ஒரு நாள் பெய்த கன மழைக்கு 610 குடும்பங்கள் பாதிப்படையும் நிலையிலேயே இன்றும் யாழ்ப்பாணம் உள்ளது. எமது அரசு மீண்டும் ஆட்சிபீடம் ஏறினால் வடக்கின் வசந்தம் இரண்டாம் கட்டத்தின் கீழ் மக்களின் இத்தகைய இடப்பெயர்வு இடம்பெறாத வகையிலான ஓர் அபிவிருத்தி முன்னெடுக்கப்படும்.இதேநேரம் நடந்து முடிந்த தேர்தலில் வடக்கு கிழக்கில் இருந்து அதிக மக்கள் தேசிய மக்கள் சக்திக்கு வாக்களித்த போதும் வடக்கு கிழக்கைச் சேரந்தவர்களிற்கு அமைச்சுப் பதவி வழங்கப்படவில்லை.இ.சந்திரசேகரம் வடக்கு கிழக்கில் சேவையாற்றியிருக்கலாம். ஆனால் வடக்கு கிழக்கில் அமைச்சரவை அமைச்சரோ வடக்கில் ஓர் பிரதி அமைச்சரோ இந்த அரசில் கிடையாது.வடக்கு கிழக்கில் இல்லாத பொய் எல்லாம் சொல்லி வாக்கை எடுத்தனர். ஆனால் இலங்கையின் வரலாற்றில் ஒரு முஸ்லீமோ அல்லது வடக்கு கிழக்கு பிரதிநிதியோ இல்லாத அமைச்சரவையை முதல் தடவையாக உருவாக்கியுள்ளனர்.இதனைக் கேட்டால் இன மதமற்ற திறமையானவர்களிற்கு அமைச்சரவையில் இடமளித்திருப்பதாக கூறுகின்றனர்.அப்படியானால் திறமையானவர்களைப் பட்டியலில் இணைத்திருக்க வேண்டும் எனவும் தெரிவித்தார்.

Advertisement

Advertisement

Advertisement