• Nov 23 2024

சம்பூரில் ரணிலுக்கு ஆதரவு தெரிவித்து மக்கள் சந்திப்பு..!

Sharmi / Sep 12th 2024, 1:48 pm
image

ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடும் சுயாதீன வேட்பாளர் ரணில் விக்கிரம சிங்கவை ஆதரிக்கும் மக்கள் சந்திப்பு திருகோணமலை -சம்பூரில் இன்றையதினம்(12) இடம்பெற்றது.

இம் மக்கள் சந்திப்பில் திருகோணமலை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் கபில நுவான் அத்துகோரல கலந்து கொண்டனர்.

கூட்டத்தில் கபில நுவான் அத்துகோரல உரையாற்றுகையில்,

நாட்டை மீட்டெடுத்தவர் என்ற வகையில் தற்போது மக்கள் ரணில் விக்கிரமசிங்கவுக்கு வாக்களிக்க தயாராக உள்ளனர்.அதன் பங்காளர்களாக நாங்களும் இருக்க முன் வர வேண்டும்.

ஒரு நேரத்தில் அத்தியாவசிய பொருட்களுக்கான தட்டுப்பாடு,மருத்துவ வசதியின்மை,ஒரு நாட்டின் பொருளாதாரம் மோசமடைந்திருந்தமை உள்ளிட்ட பிரச்சினைகளால் நாடு மோசமாக பாதிக்கப்பட்டிருந்தது.

அந்த நேரத்தில் நாட்டை கொண்டு நடாத்த முன்னாள் தலைவர்களும்,தற்போது ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடுகின்ற வேட்பாளர்கள் எல்லோரும் ஓடி ஒழிந்தனர்.

யாரும் முன் வரவில்லை.இந்த நேரத்தில் நாட்டை தனி ஒருவராக நின்று பொறுப்பெடுத்து நாட்டை ஓரளவிற்கு மீட்டவர் ரணில் விக்ரமசிங்க என தெரிவித்தார்.

மீண்டும் ஜனாதிபதியாக ரணில் விக்ரமசிங்க தெரிவு செய்யப்படாவிட்டால் மக்கள் இன்னும் கஷ்டப்பட வேண்டிய நிலை ஏற்படும்.எந்த கட்சியும் இல்லாமல் சுயேட்சையாக போட்டியிடுகின்ற ரணில் விக்கிரமசிங்கவிக்கு ஆதரவளிக்கு நாங்கள் முன் வர வேண்டும் என தெரிவித்தார்.

அதைவேளை, திருகோணமலை மாவட்டத்தில் இருக்கின்ற முஸ்லிம் பாராளுமன்ற உறுப்பினர்களும் உங்களுக்கு எந்தவித அபிவிருத்திகளையும் செய்யப்போவதில்லை எனவும் தெரிவித்தார்.

சம்பூரில் ரணிலுக்கு ஆதரவு தெரிவித்து மக்கள் சந்திப்பு. ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடும் சுயாதீன வேட்பாளர் ரணில் விக்கிரம சிங்கவை ஆதரிக்கும் மக்கள் சந்திப்பு திருகோணமலை -சம்பூரில் இன்றையதினம்(12) இடம்பெற்றது.இம் மக்கள் சந்திப்பில் திருகோணமலை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் கபில நுவான் அத்துகோரல கலந்து கொண்டனர்.கூட்டத்தில் கபில நுவான் அத்துகோரல உரையாற்றுகையில்,நாட்டை மீட்டெடுத்தவர் என்ற வகையில் தற்போது மக்கள் ரணில் விக்கிரமசிங்கவுக்கு வாக்களிக்க தயாராக உள்ளனர்.அதன் பங்காளர்களாக நாங்களும் இருக்க முன் வர வேண்டும்.ஒரு நேரத்தில் அத்தியாவசிய பொருட்களுக்கான தட்டுப்பாடு,மருத்துவ வசதியின்மை,ஒரு நாட்டின் பொருளாதாரம் மோசமடைந்திருந்தமை உள்ளிட்ட பிரச்சினைகளால் நாடு மோசமாக பாதிக்கப்பட்டிருந்தது.அந்த நேரத்தில் நாட்டை கொண்டு நடாத்த முன்னாள் தலைவர்களும்,தற்போது ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடுகின்ற வேட்பாளர்கள் எல்லோரும் ஓடி ஒழிந்தனர்.யாரும் முன் வரவில்லை.இந்த நேரத்தில் நாட்டை தனி ஒருவராக நின்று பொறுப்பெடுத்து நாட்டை ஓரளவிற்கு மீட்டவர் ரணில் விக்ரமசிங்க என தெரிவித்தார்.மீண்டும் ஜனாதிபதியாக ரணில் விக்ரமசிங்க தெரிவு செய்யப்படாவிட்டால் மக்கள் இன்னும் கஷ்டப்பட வேண்டிய நிலை ஏற்படும்.எந்த கட்சியும் இல்லாமல் சுயேட்சையாக போட்டியிடுகின்ற ரணில் விக்கிரமசிங்கவிக்கு ஆதரவளிக்கு நாங்கள் முன் வர வேண்டும் என தெரிவித்தார்.அதைவேளை, திருகோணமலை மாவட்டத்தில் இருக்கின்ற முஸ்லிம் பாராளுமன்ற உறுப்பினர்களும் உங்களுக்கு எந்தவித அபிவிருத்திகளையும் செய்யப்போவதில்லை எனவும் தெரிவித்தார்.

Advertisement

Advertisement

Advertisement