• Dec 02 2025

தொடர் மின்தடை அவலப்படும் அம்பாறை மக்கள்!

dileesiya / Nov 30th 2025, 2:25 pm
image

சீரற்ற மின்சாரம் இன்மை காரணமாக பொதுமக்கள் பல்வேறு சிரமங்களை எதிர்கொண்டு வருகின்றனர்.

அம்பாறை மாவட்டத்தில் பெய்த அடை மழை மற்றும் கடும் காற்று காரணமாக ஏற்பட்ட வெள்ளப்பெருக்கு உள்ளிட்ட அசாதாரண காலநிலை காரணமாக இந்நிலை ஏற்பட்டுள்ளது.

அதிக மின்வலு கொண்ட மின்கட்டமைப்பில் ஏற்பட்ட பழுதினால் இவ்வாறு மாவட்டம் முழுவதும் மின்கட்டமைப்பு பாதிக்கப்பட்டுள்ளதாக மின்சார சபை தெரிவித்துள்ளது.

இதனால் குடிநீர் பற்றாக்குறை எரிபொருள் தட்டுப்பாடு இணைய சேவைகள் முடக்கம் என்பன கடந்த 3 தினங்களாக ஏற்பட்டுள்ளதுடன் பொதுமக்களும் பல்வேறு சிரமங்களை எதிர்கொண்டுள்ளனர்.

தற்போது அம்பாறை மாவட்டத்தில் சுழற்சி முறையில் சில இடங்களுக்கு மின்சாரம் வழங்கப்பட்டுள்ளதாக செய்திகள் வெளிவந்த வண்ணம் உள்ளதுடன் இலங்கை மின்சார சபையினரும் உறுதிப்படுத்தியுள்ளனர்.


தொடர் மின்தடை அவலப்படும் அம்பாறை மக்கள் சீரற்ற மின்சாரம் இன்மை காரணமாக பொதுமக்கள் பல்வேறு சிரமங்களை எதிர்கொண்டு வருகின்றனர்.அம்பாறை மாவட்டத்தில் பெய்த அடை மழை மற்றும் கடும் காற்று காரணமாக ஏற்பட்ட வெள்ளப்பெருக்கு உள்ளிட்ட அசாதாரண காலநிலை காரணமாக இந்நிலை ஏற்பட்டுள்ளது.அதிக மின்வலு கொண்ட மின்கட்டமைப்பில் ஏற்பட்ட பழுதினால் இவ்வாறு மாவட்டம் முழுவதும் மின்கட்டமைப்பு பாதிக்கப்பட்டுள்ளதாக மின்சார சபை தெரிவித்துள்ளது.இதனால் குடிநீர் பற்றாக்குறை எரிபொருள் தட்டுப்பாடு இணைய சேவைகள் முடக்கம் என்பன கடந்த 3 தினங்களாக ஏற்பட்டுள்ளதுடன் பொதுமக்களும் பல்வேறு சிரமங்களை எதிர்கொண்டுள்ளனர்.தற்போது அம்பாறை மாவட்டத்தில் சுழற்சி முறையில் சில இடங்களுக்கு மின்சாரம் வழங்கப்பட்டுள்ளதாக செய்திகள் வெளிவந்த வண்ணம் உள்ளதுடன் இலங்கை மின்சார சபையினரும் உறுதிப்படுத்தியுள்ளனர்.

Advertisement

Advertisement

Advertisement