• May 13 2024

குடிநீர் இன்றி அல்லலுறும் கிளிநொச்சி மக்கள்...! துறைசார் அதிகாரிகளே இது உங்களின் கவனத்திற்கு...!samugammedia

Sharmi / Sep 9th 2023, 1:17 pm
image

Advertisement

இலங்கையின் பல பாகங்களிலும் தற்போது வறட்சியான காலநிலை காணப்படுவதால் பல்வேறுபட்ட பாதிப்புக்களை மக்கள் சந்தித்து வருகின்றனர்.

அந்தவகையில், கிளிநொச்சி  கண்டாவளை பிரதேச செயலாளர் பிரிவுக்கு உட்பட்ட குமாரசாமிபுரம் பகுதியில் சுமார் 300க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வரும் நிலையில் அதில் பல குடும்பங்கள் மண் கிணற்றை நம்பியே குடிநீர் மற்றும் ஏனைய தேவைகளுக்கு பயன்படுத்தி வருகின்றனர்.


இந்நிலையில் தற்பொழுது கடும் வறட்சியின் காரணமாக மண் கிணற்றில் தண்ணீர் வற்றிய நிலையில் காணப்படுவதால் சிலர் காலையில்  கிணற்றில் ஊறிவரும் நீரை எடுத்து அதனை சுடுநீராக்கி குடிப்பதற்கு பயன்படுத்துகின்றனர்.

சிறுவர்களின் பாடசாலை சீருடைகள் மற்றும் நல்ல உடு புடவைகள்   கழுவுவதாயின் வேறு அயல் கிராமத்தில் சென்று அங்கிருந்து கொண்டு வரும் நீரினிலே உடைகள் கழுவுவதற்கு மற்றும் குளிப்பதற்கு பயன்படுத்துவதாகவும்  கடந்த வருடங்களில்  வறட்சி ஏற்படும் பொழுது  அயலில் உள்ள குளங்களில் சென்று குளிப்பதற்கு மற்றும் உடுபுடவைகள் கழுவ பயன்படுத்துவதாகவும்  மக்கள் தெரிவிக்கின்றனர்.


அதேவேளை, தற்பொழுது குளங்களிலும் நீர் இல்லாத காரணத்தினால் குளிப்பதற்கு கூட பெரும் சிரமப்படுவதாகவும் தெரிவித்துள்ளனர்.  பல வருட காலமாக பாதுகாப்பற்ற மண் கிணற்றை பயன்படுத்து வருவதாகவும் இனி வரும் காலங்களிலாவது  சிறுவர்களாவது சுத்தமான குடிநீரை பெற்று நோயற்றவர்களாக வாழ்வதற்கு எமது பகுதிக்கு சுத்தமான குடிநீர் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும்  கடந்த சில வருடங்களுக்கு முன்பு பிரதேச செயலங்கள் ஊடாக பவுசர் மூலம் தண்ணீர் விநியோகிக்கப்பட்டதாகவும் தற்பொழுது அந்த நிலையும் இல்லாது போய் உள்ளதாக தெரிவித்துள்ளனர்.


எனவே இது தொடர்பாக சம்பந்தப்பட்ட உரிய அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதியில் பாதிக்கப்பட்ட மக்கள் தெரிவித்துள்ளனர்.





குடிநீர் இன்றி அல்லலுறும் கிளிநொச்சி மக்கள். துறைசார் அதிகாரிகளே இது உங்களின் கவனத்திற்கு.samugammedia இலங்கையின் பல பாகங்களிலும் தற்போது வறட்சியான காலநிலை காணப்படுவதால் பல்வேறுபட்ட பாதிப்புக்களை மக்கள் சந்தித்து வருகின்றனர்.அந்தவகையில், கிளிநொச்சி  கண்டாவளை பிரதேச செயலாளர் பிரிவுக்கு உட்பட்ட குமாரசாமிபுரம் பகுதியில் சுமார் 300க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வரும் நிலையில் அதில் பல குடும்பங்கள் மண் கிணற்றை நம்பியே குடிநீர் மற்றும் ஏனைய தேவைகளுக்கு பயன்படுத்தி வருகின்றனர். இந்நிலையில் தற்பொழுது கடும் வறட்சியின் காரணமாக மண் கிணற்றில் தண்ணீர் வற்றிய நிலையில் காணப்படுவதால் சிலர் காலையில்  கிணற்றில் ஊறிவரும் நீரை எடுத்து அதனை சுடுநீராக்கி குடிப்பதற்கு பயன்படுத்துகின்றனர்.சிறுவர்களின் பாடசாலை சீருடைகள் மற்றும் நல்ல உடு புடவைகள்   கழுவுவதாயின் வேறு அயல் கிராமத்தில் சென்று அங்கிருந்து கொண்டு வரும் நீரினிலே உடைகள் கழுவுவதற்கு மற்றும் குளிப்பதற்கு பயன்படுத்துவதாகவும்  கடந்த வருடங்களில்  வறட்சி ஏற்படும் பொழுது  அயலில் உள்ள குளங்களில் சென்று குளிப்பதற்கு மற்றும் உடுபுடவைகள் கழுவ பயன்படுத்துவதாகவும்  மக்கள் தெரிவிக்கின்றனர்.அதேவேளை, தற்பொழுது குளங்களிலும் நீர் இல்லாத காரணத்தினால் குளிப்பதற்கு கூட பெரும் சிரமப்படுவதாகவும் தெரிவித்துள்ளனர்.  பல வருட காலமாக பாதுகாப்பற்ற மண் கிணற்றை பயன்படுத்து வருவதாகவும் இனி வரும் காலங்களிலாவது  சிறுவர்களாவது சுத்தமான குடிநீரை பெற்று நோயற்றவர்களாக வாழ்வதற்கு எமது பகுதிக்கு சுத்தமான குடிநீர் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும்  கடந்த சில வருடங்களுக்கு முன்பு பிரதேச செயலங்கள் ஊடாக பவுசர் மூலம் தண்ணீர் விநியோகிக்கப்பட்டதாகவும் தற்பொழுது அந்த நிலையும் இல்லாது போய் உள்ளதாக தெரிவித்துள்ளனர். எனவே இது தொடர்பாக சம்பந்தப்பட்ட உரிய அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதியில் பாதிக்கப்பட்ட மக்கள் தெரிவித்துள்ளனர்.

Advertisement

Advertisement

Advertisement