• Nov 24 2024

கமலா ஹரிஸ் அமெரிக்க ஜனாதிபதி வேட்பாளருக்கு போஸ்டர் அடித்துக் கலக்கும் துளசேந்திரபுரம் மக்கள்

Tharun / Jul 24th 2024, 7:10 pm
image

தென் இந்திய நகரமான  திருவாரூர் மாவட்டத்தில் உள்ள அழகான எழில் கொஞ்சும் காவிரிக் கரை கிராமம்தான் துளசேந்திரபுரம். திடீர் உற்சாகத்துடன் அந்தக் கிராமம் மகிழ்ச்சியாக காணப்படுகிறது. அமெரிக்க ஜனாதிபதி  வேட்பாளரான கமலா ஹ்ரிஸின் பூர்வீக  கிராமம் துளசேந்திரபுரம்

கமலா ஹரிஸ் துணை ஜனாதிபதியாகப்  பதவியேற்றபோது துளசேந்திர புரம் கிராமமே திருவிழாக் கோலம் பூண்டு காணப்பட்டது. எங்க ஊரு புள்ளைங்க அது.. எங்க ஊருக்கே பெருமை சேர்த்திருச்சு.. எங்களுக்கெல்லாம் ரொம்பக் கெளரவமா இருக்கு.. எங்க ஊரை இப்போ உலகமே பேசுது என்று துளசேந்திரபுரம் மக்கள் பெருமைப்பட்டுக் கொண்டனர்.  இப்போது அந்தக் கிராம மக்கள் இன்னொரு உற்சாகத்திற்குத் தயாராகி விட்டனர்.

கமலா ஹரிஸ் அமெரிக்க ஜனாதிபதித்  தேர்தலில் போட்டியிடுகிறார். அவர் வெல்லும் வாய்ப்புகளும் இருப்பதாக கருதப்படுகிறது. அவர் வெற்றி பெற்றால் முதல் தமிழ் வம்சாவளி அமெரிக்க அதிபர், முதல் தமிழ் வம்சாவளி பெண் அமெரிக்க அதிபர், முதல் கருப்பர் இன பெண் அமெரிக்க அதிபர், முதல் இந்திய வம்சாவளி பெண் அமெரிக்க அதிபர் என பல பெருமைகள் அவருக்குக் கிடைக்கும்.

இது துளசேந்திரபுரம் கிராம மக்களுக்கும் பெரும் சந்தோஷத்தை் கொடுத்துள்ளது. துணை அதிபராக அவர் ஆனபோதே தடபுடலாக அதைக் கொண்டாடினார்கள். கோவிலில் பொங்கல் வைப்பது, அன்னதானம், போஸ்டர் அடித்து மகிழ்ச்சி தெரிவிப்பது என்று கலக்கியிருந்தனர். இப்போதும் அதே போல கொண்டாட்டங்களைத் தொடங்கி விட்டனர். ஊர் முழுக்க போஸ்டர்கள், கட் அவுட்கள் வைக்கப்பட்டுள்ளன. மேலும் கோவிலிலும் சிறப்பு வழிபாடுகள் நடத்தப்படுகின்றன.

கமலா ஹாரிஸ் வெற்றி பெற வேண்டும். அவர் வெற்றி பெற்றால் நமது நாட்டுக்கும், தமிழ்நாட்டுக்கும், எங்க ஊருக்கும் பெருமை கிடைக்கும். எங்க ஊரை உலகமே திரும்பிப் பார்க்கும். எங்க ஊர் பசங்க நாளைக்கு அமெரிக்கா போனால் அவர்களுக்குப் புதிய மரியாதை கிடைக்கும் என்று ஊர் மக்கள் பெருமையுடன் சொல்கிறார்கள்.

கமலா ஹரிஸ் அமெரிக்க ஜனாதிபதி வேட்பாளருக்கு போஸ்டர் அடித்துக் கலக்கும் துளசேந்திரபுரம் மக்கள் தென் இந்திய நகரமான  திருவாரூர் மாவட்டத்தில் உள்ள அழகான எழில் கொஞ்சும் காவிரிக் கரை கிராமம்தான் துளசேந்திரபுரம். திடீர் உற்சாகத்துடன் அந்தக் கிராமம் மகிழ்ச்சியாக காணப்படுகிறது. அமெரிக்க ஜனாதிபதி  வேட்பாளரான கமலா ஹ்ரிஸின் பூர்வீக  கிராமம் துளசேந்திரபுரம்கமலா ஹரிஸ் துணை ஜனாதிபதியாகப்  பதவியேற்றபோது துளசேந்திர புரம் கிராமமே திருவிழாக் கோலம் பூண்டு காணப்பட்டது. எங்க ஊரு புள்ளைங்க அது. எங்க ஊருக்கே பெருமை சேர்த்திருச்சு. எங்களுக்கெல்லாம் ரொம்பக் கெளரவமா இருக்கு. எங்க ஊரை இப்போ உலகமே பேசுது என்று துளசேந்திரபுரம் மக்கள் பெருமைப்பட்டுக் கொண்டனர்.  இப்போது அந்தக் கிராம மக்கள் இன்னொரு உற்சாகத்திற்குத் தயாராகி விட்டனர்.கமலா ஹரிஸ் அமெரிக்க ஜனாதிபதித்  தேர்தலில் போட்டியிடுகிறார். அவர் வெல்லும் வாய்ப்புகளும் இருப்பதாக கருதப்படுகிறது. அவர் வெற்றி பெற்றால் முதல் தமிழ் வம்சாவளி அமெரிக்க அதிபர், முதல் தமிழ் வம்சாவளி பெண் அமெரிக்க அதிபர், முதல் கருப்பர் இன பெண் அமெரிக்க அதிபர், முதல் இந்திய வம்சாவளி பெண் அமெரிக்க அதிபர் என பல பெருமைகள் அவருக்குக் கிடைக்கும்.இது துளசேந்திரபுரம் கிராம மக்களுக்கும் பெரும் சந்தோஷத்தை் கொடுத்துள்ளது. துணை அதிபராக அவர் ஆனபோதே தடபுடலாக அதைக் கொண்டாடினார்கள். கோவிலில் பொங்கல் வைப்பது, அன்னதானம், போஸ்டர் அடித்து மகிழ்ச்சி தெரிவிப்பது என்று கலக்கியிருந்தனர். இப்போதும் அதே போல கொண்டாட்டங்களைத் தொடங்கி விட்டனர். ஊர் முழுக்க போஸ்டர்கள், கட் அவுட்கள் வைக்கப்பட்டுள்ளன. மேலும் கோவிலிலும் சிறப்பு வழிபாடுகள் நடத்தப்படுகின்றன.கமலா ஹாரிஸ் வெற்றி பெற வேண்டும். அவர் வெற்றி பெற்றால் நமது நாட்டுக்கும், தமிழ்நாட்டுக்கும், எங்க ஊருக்கும் பெருமை கிடைக்கும். எங்க ஊரை உலகமே திரும்பிப் பார்க்கும். எங்க ஊர் பசங்க நாளைக்கு அமெரிக்கா போனால் அவர்களுக்குப் புதிய மரியாதை கிடைக்கும் என்று ஊர் மக்கள் பெருமையுடன் சொல்கிறார்கள்.

Advertisement

Advertisement

Advertisement