• Apr 24 2025

74 வயது மூதாட்டியை பலாத்காரம் செய்த இளைஞனுக்கு எதிராக போராட்டத்தில் இறங்கிய மக்கள்

Thansita / Apr 23rd 2025, 11:57 pm
image

ஹட்டன் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட டிக்கோயா போடைஸ் தோட்டபகுதியில் 74 வயது மூதாட்டி மீது 24 வயது இளைஞன் ஒருவர் பாலியல் தொல்லை விளைவித்தமை தொடர்பில் போடைஸ் பிரதேச மக்கள் இனைந்து இன்றையதினம் ஆர்ப்பாட்டம் ஒன்றை முன்னெடுத்தனர்.

குற்றவாளிகளை கைது செய்து சட்டத்தை நிலைநாட்டு, கைது செய்,போதை குற்றவாளியை கைது செய், போதை பொருளை ஒழிப்போம் போன்ற பாதாதைகளை ஏந்தியவாறு ஆர்ப்பாட்டத்தை முன்னெடுத்தனர்.

ஆர்ப்பாட்டம் இடம்பெற்ற இடத்திற்கு வருகை தந்த ஹட்டன் பொலிஸார் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட மக்களை சந்தித்து சம்பவம் தொடர்பாக ஆராய்ந்த பின்னர் மக்கள் அங்கிருந்து கலைந்து சென்றதாக எமது செய்தியாளர் தெரிவித்தார்.

இந்த சம்பவம் தொடர்பாக ஹட்டன் பொலிஸாரிடம் தொடர்பு கொண்டு வினவியபோது,

 சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்ட நபரை நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்ட போது எதிர்வரும் மே மாதம் 04 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு ஹட்டன் நீதிமன்ற நீதவானினால் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்தனர்

 குறித்த சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருகையில்

கடந்த 20 ஆம் திகதி குறித்த தோட்டபகுதியில் உள்ள இளைஞன் ஐஸ் போதைப்பொருள் பாவித்துவிட்டு தனிமையில் இருந்த மூதாட்டி வீட்டில் வீட்டு ஜன்னலை உடைத்து உட்புகுந்த இளைஞன் மூதாட்டியை பாலியல் தொல்லைக்குட்படுத்தியதாக பொலிஸாரின் ஆரம்பகட்ட விசாரனைகளில் இருந்து தெரியவந்துள்ளது.

சம்பவ இடத்துக்கு விரைந்த பொலிஸார் குறித்த சந்தேக நபரை கைது செய்துள்ளனர். இதேவேளை பாதிக்கப்பட்ட 74 வயது மூதாட்டி டிக்கோயா கிழங்கன் ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருவதோடு சம்பவம் தொடர்பாக மேலதிக விசாரனைகளை ஹட்டன் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

74 வயது மூதாட்டியை பலாத்காரம் செய்த இளைஞனுக்கு எதிராக போராட்டத்தில் இறங்கிய மக்கள் ஹட்டன் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட டிக்கோயா போடைஸ் தோட்டபகுதியில் 74 வயது மூதாட்டி மீது 24 வயது இளைஞன் ஒருவர் பாலியல் தொல்லை விளைவித்தமை தொடர்பில் போடைஸ் பிரதேச மக்கள் இனைந்து இன்றையதினம் ஆர்ப்பாட்டம் ஒன்றை முன்னெடுத்தனர்.குற்றவாளிகளை கைது செய்து சட்டத்தை நிலைநாட்டு, கைது செய்,போதை குற்றவாளியை கைது செய், போதை பொருளை ஒழிப்போம் போன்ற பாதாதைகளை ஏந்தியவாறு ஆர்ப்பாட்டத்தை முன்னெடுத்தனர்.ஆர்ப்பாட்டம் இடம்பெற்ற இடத்திற்கு வருகை தந்த ஹட்டன் பொலிஸார் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட மக்களை சந்தித்து சம்பவம் தொடர்பாக ஆராய்ந்த பின்னர் மக்கள் அங்கிருந்து கலைந்து சென்றதாக எமது செய்தியாளர் தெரிவித்தார்.இந்த சம்பவம் தொடர்பாக ஹட்டன் பொலிஸாரிடம் தொடர்பு கொண்டு வினவியபோது, சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்ட நபரை நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்ட போது எதிர்வரும் மே மாதம் 04 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு ஹட்டன் நீதிமன்ற நீதவானினால் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்தனர் குறித்த சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருகையில்கடந்த 20 ஆம் திகதி குறித்த தோட்டபகுதியில் உள்ள இளைஞன் ஐஸ் போதைப்பொருள் பாவித்துவிட்டு தனிமையில் இருந்த மூதாட்டி வீட்டில் வீட்டு ஜன்னலை உடைத்து உட்புகுந்த இளைஞன் மூதாட்டியை பாலியல் தொல்லைக்குட்படுத்தியதாக பொலிஸாரின் ஆரம்பகட்ட விசாரனைகளில் இருந்து தெரியவந்துள்ளது.சம்பவ இடத்துக்கு விரைந்த பொலிஸார் குறித்த சந்தேக நபரை கைது செய்துள்ளனர். இதேவேளை பாதிக்கப்பட்ட 74 வயது மூதாட்டி டிக்கோயா கிழங்கன் ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருவதோடு சம்பவம் தொடர்பாக மேலதிக விசாரனைகளை ஹட்டன் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

Advertisement

Advertisement

Advertisement