• Aug 22 2025

விஜேராம இல்லத்திற்கு மகிந்தவை பார்க்க படையெடுத்த மக்கள்; பரபரப்பாகும் தென்னிலங்கை

Chithra / Aug 20th 2025, 11:21 am
image


முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவின் விஜேராம வீட்டுக்கு அவரை சந்திக்க தேரர்கள் மற்றும் சிங்கள பெரும்பான்மையின கட்சிகளின் உறுப்பினர்கள் அண்மையநாட்களாக சென்று வருவது சமூக ஊடகங்களில் அதிகமாக பகிரப்பட்டு வருகின்றது. 

நேற்று அநுராதபுரத்தில் இருந்து இரண்டு மூன்று பேருந்துகளில் முன்னாள் ஜனாதிபதி மகிந்தவை பார்ப்பதற்காக பரிசுப் பொருட்கள்  மற்றும் உணவு பண்டங்களுடன் பலர் வருகை தந்திருந்தனர். 

இக் காட்சிகள் தென்னிலங்கை ஊடகங்கள் மற்றும் சமூக வலைத்தளங்களில் பகிரப்பட்டு வருகின்றது. 

இவ்வாறான செயற்பாடுகள்,  ராஜபக்சக்கள் மீது தற்போது பெருமளவிலான மக்களுக்கு இருக்கும் வெறுப்பான மன நிலையில் மாற்றத்தை ஏற்படுத்துமா என்ற கேள்வி எழுந்துள்ளது.  


மேலும்,  நேற்றைய இந்த சந்திப்பின் போது,  மகிந்தவைப் பார்க்க வந்த  மக்களின் முன்னிலையில், ராஜபக்சக்களின் தீவிர விசுவாசியான திஸ்ஸ குட்டியாராச்சி பேசும்போது, 

“நாம் இன்னும் துட்டகைமுனு மன்னனை ஏன் மறக்காமல் இருக்கின்றோம். 

அவர் யுத்தம் செய்து நாட்டு மக்களைக் காப்பாற்றியதனால் தானே, அதேபோலதான் மகிந்தவும், பிரிவினைவாத போரை முடிவுக்குக் கொண்டு வந்த மக்களை காப்பாற்றியதால் அவரும் அரசர் தான்” என்று வந்திருந்த மக்களை ஆவேசப்படுத்தும் வகையில் உரையாற்றியுள்ளார்.

அத்தோடு மகிந்த, லொஹான் ரத்வத்தையின் இறுதி கிரியைக்கு சென்றிருந்த போது சில பெண்கள் அவரின் காலை பிடித்து கொண்டு கதறி அழும் காணொளியும் சமூக ஊடகங்களில்  வெளியாகியுள்ளது. 

விஜேராம இல்லத்திற்கு மகிந்தவை பார்க்க படையெடுத்த மக்கள்; பரபரப்பாகும் தென்னிலங்கை முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவின் விஜேராம வீட்டுக்கு அவரை சந்திக்க தேரர்கள் மற்றும் சிங்கள பெரும்பான்மையின கட்சிகளின் உறுப்பினர்கள் அண்மையநாட்களாக சென்று வருவது சமூக ஊடகங்களில் அதிகமாக பகிரப்பட்டு வருகின்றது. நேற்று அநுராதபுரத்தில் இருந்து இரண்டு மூன்று பேருந்துகளில் முன்னாள் ஜனாதிபதி மகிந்தவை பார்ப்பதற்காக பரிசுப் பொருட்கள்  மற்றும் உணவு பண்டங்களுடன் பலர் வருகை தந்திருந்தனர். இக் காட்சிகள் தென்னிலங்கை ஊடகங்கள் மற்றும் சமூக வலைத்தளங்களில் பகிரப்பட்டு வருகின்றது. இவ்வாறான செயற்பாடுகள்,  ராஜபக்சக்கள் மீது தற்போது பெருமளவிலான மக்களுக்கு இருக்கும் வெறுப்பான மன நிலையில் மாற்றத்தை ஏற்படுத்துமா என்ற கேள்வி எழுந்துள்ளது.  மேலும்,  நேற்றைய இந்த சந்திப்பின் போது,  மகிந்தவைப் பார்க்க வந்த  மக்களின் முன்னிலையில், ராஜபக்சக்களின் தீவிர விசுவாசியான திஸ்ஸ குட்டியாராச்சி பேசும்போது, “நாம் இன்னும் துட்டகைமுனு மன்னனை ஏன் மறக்காமல் இருக்கின்றோம். அவர் யுத்தம் செய்து நாட்டு மக்களைக் காப்பாற்றியதனால் தானே, அதேபோலதான் மகிந்தவும், பிரிவினைவாத போரை முடிவுக்குக் கொண்டு வந்த மக்களை காப்பாற்றியதால் அவரும் அரசர் தான்” என்று வந்திருந்த மக்களை ஆவேசப்படுத்தும் வகையில் உரையாற்றியுள்ளார்.அத்தோடு மகிந்த, லொஹான் ரத்வத்தையின் இறுதி கிரியைக்கு சென்றிருந்த போது சில பெண்கள் அவரின் காலை பிடித்து கொண்டு கதறி அழும் காணொளியும் சமூக ஊடகங்களில்  வெளியாகியுள்ளது. 

Advertisement

Advertisement

Advertisement