கனடா Toronto பகுதியில் தமிழர் அதிகளவாக வாழும் பகுதிகளில் பல்வேறு குற்றச்செயல்கள் அதிகரித்து வருவதாக தெரியவருகிறது. அண்மையில் தீபாவளி தினத்தன்றும் பல அசம்பாவிதங்கள் பதிவாகியுள்ளன.
கனடாவிலுள்ள திரையரங்கு ஒன்றில் இரண்டு நபர்கள் வெடி பொருட்களை கொழுத்தி தீவிபத்தை ஏற்படுத்தியமையாலும் தேவையற்ற இடங்களில் பட்டாசுகளை வெடித்தமையாலும் மக்கள் பெரும் அசௌகரியத்தை எதிர்கொண்டதாக தெரியவருகிறது.
குறித்த சம்பவங்கள் தொடர்பில் மேலும் தெரியவருகையில்
கனடாவின் டொரன்டோ பகுதியில் அமைந்துள்ள திரையரங்கு ஒன்றில் இரண்டு சந்தேக நபர்கள் மேற்கொண்ட அசம்பாவிதத்தினால், பதற்ற நிலை ஏற்பட்டிருந்தது.
டொரன்டோவின் வுட்சைட் சதுக்கத்தில் இடம்பெற்ற இந்த சம்பவத்தில் மர்மப் பொருள் ஒன்றை குறித்த இரண்டு சந்தேக நபர்களும் எரித்ததாக தெரிவிக்கப்படுகிறது.
இந்த சம்பவம் காரணமாக தீப்பரவல் ஏற்பட்டதால் திரையரங்கில் இருந்தவர்கள் அவசர அவசரமாக பாதுகாப்பாக வெளியேற்றப்பட்டுள்ளனர்.
தீ உடனடியாக கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்டதாகவும் இதில் எவருக்கும் பாதிப்பு ஏற்படவில்லை எனவும் தெரிவிக்கப்படுகிறது.
சம்பவ இடத்திற்கு குண்டு செலிழிக்கும் பிரிவினர் அழைக்கப்பட்டதுடன் க சிசிடிவி கமெராவில் பதிவாகிய காட்சிகளினடிப்படையில் இந்த சம்பவத்துடன் தொடர்புடைய இருவரையும் பொலிஸார் கைது செய்துள்ளனர்.
அத்துடன் அதே பகுதியில் தொடர்ச்சியான கார் திருட்டுகளும் இடம்பெறுவதாகவும் . 300 இற்கு மேற்பட்ட கார்கள் திருடர்களிடம் இருந்து பறி முதல் செய்யப்பட்டுள்ளது.
மேலும் கனடாவில் பிரபல நகை கடை ஒன்றில் துணிச்சலான முறையில் கொள்ளைச்சம்பவங்கள் இடம்பெற்றுள்ளது. பட்டப்பகலில் கடை ஒன்றுக்குள் புகுந்த ஆயுததாரிகள் கடையிலிருந்தவரைத் தாக்கி விட்டு நகைகளை கொள்ளையிட்டு தப்பி சென்ற காணொளியும் சமூக வலைத்தங்களில் பரவலாக வெளியாகியுள்ளது. இந்தச்சம்பவங்களால் மக்கள் அச்சமடைந்துள்ளனர்.
கனடாவிலுள்ள தமிழர் பகுதியில் - அதிகரிக்கும் குற்றச்செயல்கள்-பெரும் அச்சத்தில் மக்கள் கனடா Toronto பகுதியில் தமிழர் அதிகளவாக வாழும் பகுதிகளில் பல்வேறு குற்றச்செயல்கள் அதிகரித்து வருவதாக தெரியவருகிறது. அண்மையில் தீபாவளி தினத்தன்றும் பல அசம்பாவிதங்கள் பதிவாகியுள்ளன. கனடாவிலுள்ள திரையரங்கு ஒன்றில் இரண்டு நபர்கள் வெடி பொருட்களை கொழுத்தி தீவிபத்தை ஏற்படுத்தியமையாலும் தேவையற்ற இடங்களில் பட்டாசுகளை வெடித்தமையாலும் மக்கள் பெரும் அசௌகரியத்தை எதிர்கொண்டதாக தெரியவருகிறது. குறித்த சம்பவங்கள் தொடர்பில் மேலும் தெரியவருகையில் கனடாவின் டொரன்டோ பகுதியில் அமைந்துள்ள திரையரங்கு ஒன்றில் இரண்டு சந்தேக நபர்கள் மேற்கொண்ட அசம்பாவிதத்தினால், பதற்ற நிலை ஏற்பட்டிருந்தது.டொரன்டோவின் வுட்சைட் சதுக்கத்தில் இடம்பெற்ற இந்த சம்பவத்தில் மர்மப் பொருள் ஒன்றை குறித்த இரண்டு சந்தேக நபர்களும் எரித்ததாக தெரிவிக்கப்படுகிறது.இந்த சம்பவம் காரணமாக தீப்பரவல் ஏற்பட்டதால் திரையரங்கில் இருந்தவர்கள் அவசர அவசரமாக பாதுகாப்பாக வெளியேற்றப்பட்டுள்ளனர்.தீ உடனடியாக கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்டதாகவும் இதில் எவருக்கும் பாதிப்பு ஏற்படவில்லை எனவும் தெரிவிக்கப்படுகிறது.சம்பவ இடத்திற்கு குண்டு செலிழிக்கும் பிரிவினர் அழைக்கப்பட்டதுடன் க சிசிடிவி கமெராவில் பதிவாகிய காட்சிகளினடிப்படையில் இந்த சம்பவத்துடன் தொடர்புடைய இருவரையும் பொலிஸார் கைது செய்துள்ளனர்.அத்துடன் அதே பகுதியில் தொடர்ச்சியான கார் திருட்டுகளும் இடம்பெறுவதாகவும் . 300 இற்கு மேற்பட்ட கார்கள் திருடர்களிடம் இருந்து பறி முதல் செய்யப்பட்டுள்ளது.மேலும் கனடாவில் பிரபல நகை கடை ஒன்றில் துணிச்சலான முறையில் கொள்ளைச்சம்பவங்கள் இடம்பெற்றுள்ளது. பட்டப்பகலில் கடை ஒன்றுக்குள் புகுந்த ஆயுததாரிகள் கடையிலிருந்தவரைத் தாக்கி விட்டு நகைகளை கொள்ளையிட்டு தப்பி சென்ற காணொளியும் சமூக வலைத்தங்களில் பரவலாக வெளியாகியுள்ளது. இந்தச்சம்பவங்களால் மக்கள் அச்சமடைந்துள்ளனர்.