• Apr 28 2024

தமிழ் தேசியம் பேசி குற்றங்களில் ஈடுபட்டவர்கள் மாவீரர் துயிலுமில்லங்களுக்குள் நுழைய முடியாது...!samugammedia

Sharmi / Oct 24th 2023, 4:42 pm
image

Advertisement

ஒழுக்க சீலர்கள் மட்டும்தான் புனிதர்களை வழிநடத்தும் செயற்பாடுகளில் ஈடுபடமுடியும்.தமிழ் தேசியம் பேசி குற்றங்களில் ஈடுபட்டவர்கள் இவற்றில் உள்நுழைய முடியாது என தரவை மாவீரர் துயிலும் இல்ல ஏற்பாட்டு குழு உறுப்பினர் நிதர்சன் தெரிவித்தார்.

மட்டு.ஊடக அமையத்தில் இன்று(24) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின்போதே இந்த கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இதன்போது கருத்து தெரிவித்த தரவை மாவீரர் துயிலும் இல்ல ஏற்பாட்டு குழு உறுப்பினர் நிதர்சன்,

தரவை மாவீரர் துயிலுமில்லத்தின் ஏற்பாட்டு குழுவாகிய நாங்கள் அன்பு உள்ளம் கொண்ட எமது மாவீரர் பெற்றோர்கள் எமது மக்கள் அனைவரையும் இந்த புனிதர்கள் உறங்கிக் கொண்டிருக்கும் அந்த பூமியை துப்புரவு செய்வதற்காக அங்கு அனைவரும் வந்து உங்களது ஒத்துழைப்பினை வழங்கி எமது அந்த புனிதர்களின் புனித பூமியை துப்புரவு செய்து இம்முறை அவர்களின் நிகழ்வினை விளக்கேற்றும் நிகழ்வினை மிகவும் சிறப்பான முறையில் நடத்துவதற்கு நீங்கள் அனைவரும் எமக்கு ஒத்துழைப்பு வழங்க வேண்டும்.

எமது மாவீரர் செயற்பாட்டு குழுவின் தலைவராக நான்கு மாவீரர்களினை ஈன்றெடுத்த தந்தையினை நாங்கள் தெரிவு செய்துள்ளோம் சுகயீனம் காரணமாக அவரால் தற்போது கலந்து கொள்ள முடியவில்லை.

அன்பான உறவுகளே, இம்முறை எதுவித கெடுபிடிகளும் இல்லாததன் காரணத்தினால் நீங்கள் அனைவரும் வருகை தந்து இந்த புனிதர்கள் உறங்கும் புனித பூமியினை துப்புரவு பணி செய்து அவர்களுக்கு நெய் விளக்கேற்றி வழிபாடுகள் செய்வதற்கு எம்முடன் இணைந்து கொள்ளுமாறும் உங்களை வேண்டுவதோடு இந்த துயிலும் இல்லத்துக்கு என்று எமது செயற்பாட்டு குழுவை தவிர இங்கு ஒரு சிலர் குழப்பங்களை ஏற்படுத்துவதற்கும் பாரிய குற்றங்களை செய்த சிலர் வந்து தேசியம் என்கின்ற செயற்பாட்டினுள் எவரும் வர முடியாது.

ஒழுக்க சிலர்கள் மட்டும்தான் இந்த புனிதர்களை வழிநடத்தும் செயற்பாடுகளில் யாவரும் இறங்க வேண்டும் ஆகையால் அன்பான உறவுகள் அனைவரும் மாவீரரை ஈன்றெடுத்த எமது தாய் தந்தையர்களையும் அந்த புனிதர்களின் பூமியை துப்புரவு செய்வதற்கு அன்புடன் வருமாறு தரவை மாவீரர் துயிலும் இல்லத்தின் செயற்பாட்டு குழுவினராகிய நாங்கள் இருகரம் கூப்பி உங்களை வேண்டி நிற்கின்றோம்.

மட்டக்களப்பு அம்பாறை மாவட்டத்திற்கு அந்தந்த இடங்களில் ஒவ்வொரு குழுக்கள் அமைக்கப்பட்டிருக்கின்றன அந்தந்த குழுக்கள் அந்தந்த இடங்களில் மாவீரர்களின் நினைவேந்தலினை அந்தந்த இடங்களில் அவர்கள் அந்த ஏற்பாட்டினை செய்வார்கள் நாங்கள் தரவை மாவீரர் துயிலும் இல்லத்தின் ஏற்பாட்டு குழு பெரியதொரு பிரதேசத்தில் அதுவும் ஒரு காட்டுப் பகுதியில் இந்த தரவை துயிலும் இல்லம் இருப்பதினால் முன்கூட்டியே இந்த அறிவித்தலை எமது மக்களுக்கு விடுப்பதற்காகவே இந்த ஊடக முன்னாள் நாம் வந்துள்ளோம்.

அவ்வாறானதொரு நிலைக்கு இனி வராது இது நாங்கள் தாயக செயற்பாட்டு குழுவினர் புலம்பெயர் தேசத்தில் எமது துயிலும் இல்லங்களை வழிநடத்துவதற்கு தாயக செயற்பாட்டு குழு என்று ஒரு அமைப்பு புலம்பெயர் தேசத்தில் இருக்கின்றார்கள் அவர்களுடன் இணைந்து எமது மாவீரர் குழுக்களும் சரியான முறையில் இந்த நிகழ்வினை செய்து முடிப்பதே எமது எண்ணங்களும் எமது நோக்கமும் ஆகும்.

இந்த அரசாங்கம் எங்களது துயிலும் இல்லங்களில் பாரிய முகாம்களை இன்று தாண்டியடியாக இருக்கட்டும் வன்னி பிரதேசங்களாக இருக்கட்டும் பல இடங்களில் ராணுவ முகாம்களை அமைத்திருக்கின்றது ஆனால் நாங்கள் இந்த தடவை துயிலும் இல்லங்களை தற்போது எமது துயிலும் இல்லத்திலும் கூட ஒரு சில ஆக்கிரமிப்பாளர்கள் வந்து பக்கத்தில் ராணுவ முகாம் பரிபாலன சபையினர் வந்து ஒரு சில குளறுபடிகளை செய்து கொண்டிருக்கின்றனர் ஆனால் நாங்கள் இந்த தடவை துயிலும் இல்லங்களை சிறப்பான முறையில் ஒரு குழுவாக அதனை துப்பர பணியை செய்து தொடர்ச்சியான முறையில் அதனை பராமரித்து கொண்டு இருப்போம் எனவும் தெரிவித்தார்.

தமிழ் தேசியம் பேசி குற்றங்களில் ஈடுபட்டவர்கள் மாவீரர் துயிலுமில்லங்களுக்குள் நுழைய முடியாது.samugammedia ஒழுக்க சீலர்கள் மட்டும்தான் புனிதர்களை வழிநடத்தும் செயற்பாடுகளில் ஈடுபடமுடியும்.தமிழ் தேசியம் பேசி குற்றங்களில் ஈடுபட்டவர்கள் இவற்றில் உள்நுழைய முடியாது என தரவை மாவீரர் துயிலும் இல்ல ஏற்பாட்டு குழு உறுப்பினர் நிதர்சன் தெரிவித்தார்.மட்டு.ஊடக அமையத்தில் இன்று(24) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின்போதே இந்த கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.இதன்போது கருத்து தெரிவித்த தரவை மாவீரர் துயிலும் இல்ல ஏற்பாட்டு குழு உறுப்பினர் நிதர்சன்,தரவை மாவீரர் துயிலுமில்லத்தின் ஏற்பாட்டு குழுவாகிய நாங்கள் அன்பு உள்ளம் கொண்ட எமது மாவீரர் பெற்றோர்கள் எமது மக்கள் அனைவரையும் இந்த புனிதர்கள் உறங்கிக் கொண்டிருக்கும் அந்த பூமியை துப்புரவு செய்வதற்காக அங்கு அனைவரும் வந்து உங்களது ஒத்துழைப்பினை வழங்கி எமது அந்த புனிதர்களின் புனித பூமியை துப்புரவு செய்து இம்முறை அவர்களின் நிகழ்வினை விளக்கேற்றும் நிகழ்வினை மிகவும் சிறப்பான முறையில் நடத்துவதற்கு நீங்கள் அனைவரும் எமக்கு ஒத்துழைப்பு வழங்க வேண்டும்.எமது மாவீரர் செயற்பாட்டு குழுவின் தலைவராக நான்கு மாவீரர்களினை ஈன்றெடுத்த தந்தையினை நாங்கள் தெரிவு செய்துள்ளோம் சுகயீனம் காரணமாக அவரால் தற்போது கலந்து கொள்ள முடியவில்லை.அன்பான உறவுகளே, இம்முறை எதுவித கெடுபிடிகளும் இல்லாததன் காரணத்தினால் நீங்கள் அனைவரும் வருகை தந்து இந்த புனிதர்கள் உறங்கும் புனித பூமியினை துப்புரவு பணி செய்து அவர்களுக்கு நெய் விளக்கேற்றி வழிபாடுகள் செய்வதற்கு எம்முடன் இணைந்து கொள்ளுமாறும் உங்களை வேண்டுவதோடு இந்த துயிலும் இல்லத்துக்கு என்று எமது செயற்பாட்டு குழுவை தவிர இங்கு ஒரு சிலர் குழப்பங்களை ஏற்படுத்துவதற்கும் பாரிய குற்றங்களை செய்த சிலர் வந்து தேசியம் என்கின்ற செயற்பாட்டினுள் எவரும் வர முடியாது.ஒழுக்க சிலர்கள் மட்டும்தான் இந்த புனிதர்களை வழிநடத்தும் செயற்பாடுகளில் யாவரும் இறங்க வேண்டும் ஆகையால் அன்பான உறவுகள் அனைவரும் மாவீரரை ஈன்றெடுத்த எமது தாய் தந்தையர்களையும் அந்த புனிதர்களின் பூமியை துப்புரவு செய்வதற்கு அன்புடன் வருமாறு தரவை மாவீரர் துயிலும் இல்லத்தின் செயற்பாட்டு குழுவினராகிய நாங்கள் இருகரம் கூப்பி உங்களை வேண்டி நிற்கின்றோம்.மட்டக்களப்பு அம்பாறை மாவட்டத்திற்கு அந்தந்த இடங்களில் ஒவ்வொரு குழுக்கள் அமைக்கப்பட்டிருக்கின்றன அந்தந்த குழுக்கள் அந்தந்த இடங்களில் மாவீரர்களின் நினைவேந்தலினை அந்தந்த இடங்களில் அவர்கள் அந்த ஏற்பாட்டினை செய்வார்கள் நாங்கள் தரவை மாவீரர் துயிலும் இல்லத்தின் ஏற்பாட்டு குழு பெரியதொரு பிரதேசத்தில் அதுவும் ஒரு காட்டுப் பகுதியில் இந்த தரவை துயிலும் இல்லம் இருப்பதினால் முன்கூட்டியே இந்த அறிவித்தலை எமது மக்களுக்கு விடுப்பதற்காகவே இந்த ஊடக முன்னாள் நாம் வந்துள்ளோம்.அவ்வாறானதொரு நிலைக்கு இனி வராது இது நாங்கள் தாயக செயற்பாட்டு குழுவினர் புலம்பெயர் தேசத்தில் எமது துயிலும் இல்லங்களை வழிநடத்துவதற்கு தாயக செயற்பாட்டு குழு என்று ஒரு அமைப்பு புலம்பெயர் தேசத்தில் இருக்கின்றார்கள் அவர்களுடன் இணைந்து எமது மாவீரர் குழுக்களும் சரியான முறையில் இந்த நிகழ்வினை செய்து முடிப்பதே எமது எண்ணங்களும் எமது நோக்கமும் ஆகும்.இந்த அரசாங்கம் எங்களது துயிலும் இல்லங்களில் பாரிய முகாம்களை இன்று தாண்டியடியாக இருக்கட்டும் வன்னி பிரதேசங்களாக இருக்கட்டும் பல இடங்களில் ராணுவ முகாம்களை அமைத்திருக்கின்றது ஆனால் நாங்கள் இந்த தடவை துயிலும் இல்லங்களை தற்போது எமது துயிலும் இல்லத்திலும் கூட ஒரு சில ஆக்கிரமிப்பாளர்கள் வந்து பக்கத்தில் ராணுவ முகாம் பரிபாலன சபையினர் வந்து ஒரு சில குளறுபடிகளை செய்து கொண்டிருக்கின்றனர் ஆனால் நாங்கள் இந்த தடவை துயிலும் இல்லங்களை சிறப்பான முறையில் ஒரு குழுவாக அதனை துப்பர பணியை செய்து தொடர்ச்சியான முறையில் அதனை பராமரித்து கொண்டு இருப்போம் எனவும் தெரிவித்தார்.

Advertisement

Advertisement

Advertisement