• Nov 23 2024

ஜனாதிபதிக்கு ஆதரவானவர்கள் அரச உயர் பதவிகளுக்கு நியமனம்- சஜித் தரப்பு குற்றச்சாட்டு..!

Sharmi / Oct 4th 2024, 2:17 pm
image

அரச சேவைகளில் பொருத்தமான நபர்களுக்குப் பதிலாக, ஜனாதிபதிக்கு ஆதரவானவர்கள் உயர் பதவிகளுக்கு நியமிக்கப்படுவதால் அரச துறை பிரச்சினையை எதிர்கொள்வதாக ஐக்கிய மக்கள் சக்தியின் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர்  முஜிபுர் ரஹ்மான் தெரிவித்தார்.

இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,

ஜனாதிபதியின் அண்மைக்கால அரச சேவைகளுக்கான நியமனங்கள் அவரது தேர்தல் பிரச்சாரத்திற்கு ஆதரவாக இருந்தவர்களுக்கே வழங்கப்பட்டுள்ளது.

பெரும்பாலான அரச துறை ஊழியர்கள் ஜனாதிபதி திஸாநாயக்கவிற்கு வாக்களித்தனர்.

60% - 70% வாக்குகள் தேசிய மக்கள் சக்தியினருக்கு கிடைத்தமை அஞ்சல் வாக்குகள் இதை நிரூபிக்கின்றன. 

எவ்வாறாயினும், அரச சேவைகளில் பொருத்தமான நபர்களுக்குப் பதிலாக, ஜனாதிபதிக்கு ஆதரவானவர்கள் உயர் பதவிகளுக்கு நியமிக்கப்படுவதால், அரச துறை ஒரு பிரச்சினையை எதிர்கொள்கிறது.

அரச துறையினர் இதனை எதிர்பார்க்கவில்லை எனத் தெரிவித்த அவர், அரச சேவைகளுக்கு அரசியல் ரீதியாக நியமனம் பெற்றவர்களை ஜனாதிபதி அகற்றி, தகுதியான ஊழியர்களுக்கு இத்துறையில் மேல்நோக்கிச் செல்வதற்கான வாய்ப்பை வழங்குவார் என எதிர்பார்க்கின்றோம்.

"அரச சேவைகளுக்கு அரசியல் நியமனம் பெற்றவர்கள் மீது கடந்த காலத்தில் தேசிய மக்கள் சக்தி எழுப்பிய குற்றச்சாட்டுகள், வாக்குறுதி அளித்தபடி மாற்றங்களைச் செயல்படுத்தாமல், புதிய நிர்வாகத்தால் மீண்டும் மீண்டும் கூறப்படுகின்றன.

இது எதிர்காலத்தில் அரச துறைக்குள் நெருக்கடியை ஏற்படுத்தும் என முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் முஜிபுர் ரஹ்மான் எச்சரித்துள்ளார். 


ஜனாதிபதிக்கு ஆதரவானவர்கள் அரச உயர் பதவிகளுக்கு நியமனம்- சஜித் தரப்பு குற்றச்சாட்டு. அரச சேவைகளில் பொருத்தமான நபர்களுக்குப் பதிலாக, ஜனாதிபதிக்கு ஆதரவானவர்கள் உயர் பதவிகளுக்கு நியமிக்கப்படுவதால் அரச துறை பிரச்சினையை எதிர்கொள்வதாக ஐக்கிய மக்கள் சக்தியின் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர்  முஜிபுர் ரஹ்மான் தெரிவித்தார்.இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,ஜனாதிபதியின் அண்மைக்கால அரச சேவைகளுக்கான நியமனங்கள் அவரது தேர்தல் பிரச்சாரத்திற்கு ஆதரவாக இருந்தவர்களுக்கே வழங்கப்பட்டுள்ளது.பெரும்பாலான அரச துறை ஊழியர்கள் ஜனாதிபதி திஸாநாயக்கவிற்கு வாக்களித்தனர்.60% - 70% வாக்குகள் தேசிய மக்கள் சக்தியினருக்கு கிடைத்தமை அஞ்சல் வாக்குகள் இதை நிரூபிக்கின்றன. எவ்வாறாயினும், அரச சேவைகளில் பொருத்தமான நபர்களுக்குப் பதிலாக, ஜனாதிபதிக்கு ஆதரவானவர்கள் உயர் பதவிகளுக்கு நியமிக்கப்படுவதால், அரச துறை ஒரு பிரச்சினையை எதிர்கொள்கிறது.அரச துறையினர் இதனை எதிர்பார்க்கவில்லை எனத் தெரிவித்த அவர், அரச சேவைகளுக்கு அரசியல் ரீதியாக நியமனம் பெற்றவர்களை ஜனாதிபதி அகற்றி, தகுதியான ஊழியர்களுக்கு இத்துறையில் மேல்நோக்கிச் செல்வதற்கான வாய்ப்பை வழங்குவார் என எதிர்பார்க்கின்றோம்."அரச சேவைகளுக்கு அரசியல் நியமனம் பெற்றவர்கள் மீது கடந்த காலத்தில் தேசிய மக்கள் சக்தி எழுப்பிய குற்றச்சாட்டுகள், வாக்குறுதி அளித்தபடி மாற்றங்களைச் செயல்படுத்தாமல், புதிய நிர்வாகத்தால் மீண்டும் மீண்டும் கூறப்படுகின்றன.இது எதிர்காலத்தில் அரச துறைக்குள் நெருக்கடியை ஏற்படுத்தும் என முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் முஜிபுர் ரஹ்மான் எச்சரித்துள்ளார். 

Advertisement

Advertisement

Advertisement