• Nov 08 2024

இலங்கையை உலுக்கிய கொடூரம்; கழுத்து அறுக்கப்பட்டு வயோதிப தம்பதி கொலை

Chithra / Oct 4th 2024, 2:17 pm
image


அஹங்கம - வல்ஹெங்கொட பிரதேசத்தில் உள்ள வீடொன்றில் கணவன், மனைவி கொலை செய்யப்பட்டுள்ளதாக அஹங்கம பொலிஸார் தெரிவித்தனர்.

அல்கேவத்தையைச் சேர்ந்த 63 வயதுடைய கமனி வீரதுங்க,  67 வயதுடைய பி.ஜயசிங்க  ஆகியோரே இவ்வாறு உயிரிழந்துள்ளனர்.

குறித்த தம்பதியின் மகள் கொழும்பு சென்ற நிலையில், இன்று காலை வீட்டிலிருந்த தந்தையின் தொலைபேசிக்கு மகள் அழைப்பு விடுத்துள்ளார்.

தந்தையிடமிருந்து பதில் இல்லாத காரணத்தினால் உறவினர்களிடம் தந்தையை சென்று பார்க்கமாறு கூறியுள்ளார்.

அதன்படி உறவினர் சென்று பார்த்தபோது, வீட்டில் இரத்தக்கறை இருந்ததை பார்த்து பொலிஸாருக்கு தகவல் அளித்துள்ளனர்.

பொலிஸார் சம்பவயிடத்தை சோதனைசெய்தபோது, வீட்டுக்குள் தம்பதியர் கழுத்தறுத்து கொலை செய்யப்பட்டிருப்பது தெரியவந்துள்ளது.

கொலைக்கான காரணமோ, சந்தேகநபர்கள் தொடர்பிலோ இதுவரை தகவல் வெளியாகவில்லை.

குறித்த சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை அஹங்கம பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

இலங்கையை உலுக்கிய கொடூரம்; கழுத்து அறுக்கப்பட்டு வயோதிப தம்பதி கொலை அஹங்கம - வல்ஹெங்கொட பிரதேசத்தில் உள்ள வீடொன்றில் கணவன், மனைவி கொலை செய்யப்பட்டுள்ளதாக அஹங்கம பொலிஸார் தெரிவித்தனர்.அல்கேவத்தையைச் சேர்ந்த 63 வயதுடைய கமனி வீரதுங்க,  67 வயதுடைய பி.ஜயசிங்க  ஆகியோரே இவ்வாறு உயிரிழந்துள்ளனர்.குறித்த தம்பதியின் மகள் கொழும்பு சென்ற நிலையில், இன்று காலை வீட்டிலிருந்த தந்தையின் தொலைபேசிக்கு மகள் அழைப்பு விடுத்துள்ளார்.தந்தையிடமிருந்து பதில் இல்லாத காரணத்தினால் உறவினர்களிடம் தந்தையை சென்று பார்க்கமாறு கூறியுள்ளார்.அதன்படி உறவினர் சென்று பார்த்தபோது, வீட்டில் இரத்தக்கறை இருந்ததை பார்த்து பொலிஸாருக்கு தகவல் அளித்துள்ளனர்.பொலிஸார் சம்பவயிடத்தை சோதனைசெய்தபோது, வீட்டுக்குள் தம்பதியர் கழுத்தறுத்து கொலை செய்யப்பட்டிருப்பது தெரியவந்துள்ளது.கொலைக்கான காரணமோ, சந்தேகநபர்கள் தொடர்பிலோ இதுவரை தகவல் வெளியாகவில்லை.குறித்த சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை அஹங்கம பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

Advertisement

Advertisement

Advertisement