• May 04 2025

அரசுடைமையாக்கப்படவுள்ள மக்களின் காணிகள்: அநுர வடக்கிற்கு விஜயம் மேற்கொள்ளக்கூடாது- சுமந்திரன் காட்டம்..!

Sharmi / May 3rd 2025, 10:02 pm
image

வடக்கில் 5,941ஏக்கர் தமிழ் மக்களின் காணிகளை அபகரிக்கும் வகையிலான வர்த்தமானியொன்றை அரசு வெளியீடு செய்யப்பட்டுள்ளதை சுட்டிக்காட்டிய இலங்கைத் தமிழ் அரசுக்கட்சியின் பொதுச்செயலாளரும் ஜனாதிபதி சட்டத்தரணியுமான எம்.ஏ.சுமந்திரன், ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க குறித்த வர்த்தமானியை மீளக் கைவாங்காமல் வடக்கு மாகாணத்திற்கு விஜயம் மேற்கொள்ளக்கூடாதெனவும் அவர் இதன்போது எச்சரிக்கையும் விடுத்துள்ளார். 

முல்லைத்தீவு - கள்ளப்பாடு வடக்குப்பகுதியில் அமைந்துள்ள வன்னிமாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் துரைராசா ரவிகரன் இல்லத்தில் நேற்றையதினம் குறித்த வர்த்தமானி மூலமான காணி அபகரிப்பு தொடர்பான விடயங்கள், அதை எதிர்கொள்வதற்கான சட்டஆலோசனைகள் தொடர்பிலும் எம்.ஏ.சுமந்திரன் தலைமையிலான சட்டத்தரணிகள் குழுவினரால் மக்களுக்கு தெளிவூட்டப்பட்டது. 


இந்நிலையில் குறித்த தெளிவூட்டல் கலந்துரையாடலில் பங்கேற்றுக் கருத்துத் தெரிவிக்கும்போதே எம்.ஏ.சுமந்திரன் இவ்வாறு தெரிவித்தார்.

தமிழ் மக்களின் காணிகளை ஆக்கிரமிப்புச் செய்யும் நோக்கில் வெளியிடப்பட்ட வர்த்தமானியை மீளக்கைவாங்காமல், அரசதலைவர் அனுரகுமார திசாநாயக்க வடக்கிற்கு விஜயம் மேற்கொள்ளக்கூடாதென மிகக் கடுமையாக எச்சரிக்கை விடுக்கின்றோம். 

அத்தோடு தமிழ் மக்கள் பரம்பரை பரம்பரையாக ஆட்சிசெய்துவந்த நிலங்களை ஒரு நொடியில் அரச நிலங்களாக மாற்றுவதற்குரிய செயற்பாடே இந்த வர்த்தமானி அறிவித்தலாகும். 

இவ்வாறு குறித்த வர்த்தமானி அறிவித்தலின் மூலம் ஆக்கிரமிப்பதற்காக நடவடிக்கை மேற்கொள்ளப்பட்ட இடங்களில் காணிகள் உள்ள தமிழ் மக்கள் உடனடியாக தமது காணிகளை உரிமைகோர வேண்டும். 

குறித்த பகுதிகளில் காணிகள் உள்ளவர்கள் புலம்பெயர்ந்திருப்பின் உடனடியாக வெளிநாடுகளிலிருந்து வருகை தந்து அக்காணிகளை உரிமைகோரவேண்டும். வெளிநாடுகளில் இருந்து வருகை தருவது கடினமாக இருப்பின், உடனடியாக அந்த காணிஉரிமையை இங்குள்ள உறவினர்களுக்கு வழங்குவதற்கான நடவடிக்கையை மேற்கொள்ளவேண்டும். 

இவ்வாறு தமிழ் மக்களின் காணிகள் அபகரிக்கப்பட்டு அரசகாணியாக்குவதை ஒருபோதும் அனுமதிக்கமுடியாது. அதற்கு தமிழ் இங்குள்ள தமிழ் மக்களும் அனுமதிக்கக்கூடாது. 

அதேவேளை பெரும்பாலான தமிழ் மக்கள் வெளிநாடுகளில் அகதிகளாகத் தங்கியிருக்கின்றனர். குறிப்பாக பெரும்பாலான தமிழ் மக்கள் இந்தியாவிலும் அகதிகளாகத் தங்கியுள்ளனர். அவ்வாறு இங்குள்ள தமிழ் மக்கள் அகதிகளாகத் தங்கியுள்ளனர். 


இத்தகையசூழல்கள் இருக்கும்போது தமிழ் மக்களின் காணிகளை ஆக்கிரமிக்கும் நோக்கில் இவ்வாறு வர்தமானி அறிவித்த வெளியிடப்பட்டிருப்பதை சுட்டிக்காட்டி இந்த வர்த்தமானியை மீளக் கைவாங்குவதற்கு நீதிமன்றை நாடவுள்ளோம். 

மேலும் அரசதலைவர் அனுரகுமார திசாநாயக்க இவ்வாறு தமிழ் மக்களின் காணிகளை அரசகாணிகளாக்குவதற்கு முயற்சிகளை மேற்கொண்டுவிட்டு, கடந்த முதலாம் திகதி யாழ்ப்பாணத்திலே 40ஏக்கர் காணிகளை விடுவிப்பதாக ஒரு கண்துடைப்பு நாடகத்தை நடாத்தியுள்ளார் எனவும் தெரிவித்தார்.

அரசுடைமையாக்கப்படவுள்ள மக்களின் காணிகள்: அநுர வடக்கிற்கு விஜயம் மேற்கொள்ளக்கூடாது- சுமந்திரன் காட்டம். வடக்கில் 5,941ஏக்கர் தமிழ் மக்களின் காணிகளை அபகரிக்கும் வகையிலான வர்த்தமானியொன்றை அரசு வெளியீடு செய்யப்பட்டுள்ளதை சுட்டிக்காட்டிய இலங்கைத் தமிழ் அரசுக்கட்சியின் பொதுச்செயலாளரும் ஜனாதிபதி சட்டத்தரணியுமான எம்.ஏ.சுமந்திரன், ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க குறித்த வர்த்தமானியை மீளக் கைவாங்காமல் வடக்கு மாகாணத்திற்கு விஜயம் மேற்கொள்ளக்கூடாதெனவும் அவர் இதன்போது எச்சரிக்கையும் விடுத்துள்ளார். முல்லைத்தீவு - கள்ளப்பாடு வடக்குப்பகுதியில் அமைந்துள்ள வன்னிமாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் துரைராசா ரவிகரன் இல்லத்தில் நேற்றையதினம் குறித்த வர்த்தமானி மூலமான காணி அபகரிப்பு தொடர்பான விடயங்கள், அதை எதிர்கொள்வதற்கான சட்டஆலோசனைகள் தொடர்பிலும் எம்.ஏ.சுமந்திரன் தலைமையிலான சட்டத்தரணிகள் குழுவினரால் மக்களுக்கு தெளிவூட்டப்பட்டது. இந்நிலையில் குறித்த தெளிவூட்டல் கலந்துரையாடலில் பங்கேற்றுக் கருத்துத் தெரிவிக்கும்போதே எம்.ஏ.சுமந்திரன் இவ்வாறு தெரிவித்தார்.தமிழ் மக்களின் காணிகளை ஆக்கிரமிப்புச் செய்யும் நோக்கில் வெளியிடப்பட்ட வர்த்தமானியை மீளக்கைவாங்காமல், அரசதலைவர் அனுரகுமார திசாநாயக்க வடக்கிற்கு விஜயம் மேற்கொள்ளக்கூடாதென மிகக் கடுமையாக எச்சரிக்கை விடுக்கின்றோம். அத்தோடு தமிழ் மக்கள் பரம்பரை பரம்பரையாக ஆட்சிசெய்துவந்த நிலங்களை ஒரு நொடியில் அரச நிலங்களாக மாற்றுவதற்குரிய செயற்பாடே இந்த வர்த்தமானி அறிவித்தலாகும். இவ்வாறு குறித்த வர்த்தமானி அறிவித்தலின் மூலம் ஆக்கிரமிப்பதற்காக நடவடிக்கை மேற்கொள்ளப்பட்ட இடங்களில் காணிகள் உள்ள தமிழ் மக்கள் உடனடியாக தமது காணிகளை உரிமைகோர வேண்டும். குறித்த பகுதிகளில் காணிகள் உள்ளவர்கள் புலம்பெயர்ந்திருப்பின் உடனடியாக வெளிநாடுகளிலிருந்து வருகை தந்து அக்காணிகளை உரிமைகோரவேண்டும். வெளிநாடுகளில் இருந்து வருகை தருவது கடினமாக இருப்பின், உடனடியாக அந்த காணிஉரிமையை இங்குள்ள உறவினர்களுக்கு வழங்குவதற்கான நடவடிக்கையை மேற்கொள்ளவேண்டும். இவ்வாறு தமிழ் மக்களின் காணிகள் அபகரிக்கப்பட்டு அரசகாணியாக்குவதை ஒருபோதும் அனுமதிக்கமுடியாது. அதற்கு தமிழ் இங்குள்ள தமிழ் மக்களும் அனுமதிக்கக்கூடாது. அதேவேளை பெரும்பாலான தமிழ் மக்கள் வெளிநாடுகளில் அகதிகளாகத் தங்கியிருக்கின்றனர். குறிப்பாக பெரும்பாலான தமிழ் மக்கள் இந்தியாவிலும் அகதிகளாகத் தங்கியுள்ளனர். அவ்வாறு இங்குள்ள தமிழ் மக்கள் அகதிகளாகத் தங்கியுள்ளனர். இத்தகையசூழல்கள் இருக்கும்போது தமிழ் மக்களின் காணிகளை ஆக்கிரமிக்கும் நோக்கில் இவ்வாறு வர்தமானி அறிவித்த வெளியிடப்பட்டிருப்பதை சுட்டிக்காட்டி இந்த வர்த்தமானியை மீளக் கைவாங்குவதற்கு நீதிமன்றை நாடவுள்ளோம். மேலும் அரசதலைவர் அனுரகுமார திசாநாயக்க இவ்வாறு தமிழ் மக்களின் காணிகளை அரசகாணிகளாக்குவதற்கு முயற்சிகளை மேற்கொண்டுவிட்டு, கடந்த முதலாம் திகதி யாழ்ப்பாணத்திலே 40ஏக்கர் காணிகளை விடுவிப்பதாக ஒரு கண்துடைப்பு நாடகத்தை நடாத்தியுள்ளார் எனவும் தெரிவித்தார்.

Advertisement

Advertisement

Advertisement