• May 03 2024

வெடுக்குநாறிமலையில் குவிந்த மக்கள் பிரதிநிதிகள்..! - அடுத்த மாதம் வழக்கு samugammedia

Chithra / Apr 30th 2023, 12:41 pm
image

Advertisement

வவுனியா - வெடுக்குநாறி மலையில் மீண்டும் விக்கிரகங்கள் கடந்த 28ஆம் திகதி பிரதிஷ்டை செய்யப்பட்டிருந்த நிலையில் இன்று காலை தமிழரசுக்கட்சியின் சில உறுப்பினர்கள் அங்கு சென்று வழிபாடுகளில் ஈடுபட்டிருந்தனர்.

குறிப்பாக எம்.ஏ.சுமந்திரன், வடக்குமாகாண அவைத்தலைவர் சி.வி.கே.சிவஞானம் உள்ளிட்ட பலர் அங்கு சென்று வழிபாடுகளில் ஈடுபட்டிருந்தனர்.

இதேவேளை கடந்த 28ஆம் திகதி சிவலிங்கம், அம்மன், முருகன், பிள்ளையார், வைரவர், நாகதம்பிரான் உள்ளிட்ட விக்கிரகங்கள் பிரதிஷ்டை செய்யப்பட்டன.

வெடுக்குநாறி மலையில் வழிபாடுகளை மேற்கொள்ள பக்தர்கள் செல்வதைத் தடுக்கும் வகையில், எந்தவொரு அரச அதிகாரியும் செயற்படக்கூடாது என வவுனியா நீதவான் நீதிமன்றம் கடந்த 24 ஆம் திகதி உத்தரவிட்டிருந்தார்.

தொல்லியல் திணைக்களத்தின் மேற்பார்வையுடன் விக்கிரகங்கள் மீள பிரதிஷ்டை செய்யப்பட வேண்டும் என இதன்போது நீதவான் உத்தரவிட்டிருந்தார்.

இதேவேளை அடுத்த வழக்கு விசாரணை எதிர்வரும் மே மாதம் 17 ஆம் திகதி வரை ஒத்திவைக்கப்பட்டுள்ளது.


வெடுக்குநாறிமலையில் குவிந்த மக்கள் பிரதிநிதிகள். - அடுத்த மாதம் வழக்கு samugammedia வவுனியா - வெடுக்குநாறி மலையில் மீண்டும் விக்கிரகங்கள் கடந்த 28ஆம் திகதி பிரதிஷ்டை செய்யப்பட்டிருந்த நிலையில் இன்று காலை தமிழரசுக்கட்சியின் சில உறுப்பினர்கள் அங்கு சென்று வழிபாடுகளில் ஈடுபட்டிருந்தனர்.குறிப்பாக எம்.ஏ.சுமந்திரன், வடக்குமாகாண அவைத்தலைவர் சி.வி.கே.சிவஞானம் உள்ளிட்ட பலர் அங்கு சென்று வழிபாடுகளில் ஈடுபட்டிருந்தனர்.இதேவேளை கடந்த 28ஆம் திகதி சிவலிங்கம், அம்மன், முருகன், பிள்ளையார், வைரவர், நாகதம்பிரான் உள்ளிட்ட விக்கிரகங்கள் பிரதிஷ்டை செய்யப்பட்டன.வெடுக்குநாறி மலையில் வழிபாடுகளை மேற்கொள்ள பக்தர்கள் செல்வதைத் தடுக்கும் வகையில், எந்தவொரு அரச அதிகாரியும் செயற்படக்கூடாது என வவுனியா நீதவான் நீதிமன்றம் கடந்த 24 ஆம் திகதி உத்தரவிட்டிருந்தார்.தொல்லியல் திணைக்களத்தின் மேற்பார்வையுடன் விக்கிரகங்கள் மீள பிரதிஷ்டை செய்யப்பட வேண்டும் என இதன்போது நீதவான் உத்தரவிட்டிருந்தார்.இதேவேளை அடுத்த வழக்கு விசாரணை எதிர்வரும் மே மாதம் 17 ஆம் திகதி வரை ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

Advertisement

Advertisement

Advertisement