• Oct 19 2024

15 ஆண்டுகளின் பின்னர் Pepsi சின்னத்தில் ஏற்பட்ட மாற்றம்!samugammedia

Sharmi / Mar 30th 2023, 10:08 am
image

Advertisement

Pepsi நிறுவனம் 15 ஆண்டுகளுக்குப் பின்னர் சின்னத்தை மாற்றியுள்ளதாக தெரியவந்துள்ளது.

அதற்கமைய,  அதன் பிரபல பானத்திற்கான சின்னத்தை மாற்றியுள்ளது.



 2008ஆம் ஆண்டிலிருந்து அந்த  பானத்தின் சின்னம் வட்டத்திற்குள் சிவப்பு, வெள்ளை, நீலம் ஆகிய வண்ணங்களுடனும் அதன் கீழே Pepsi என்ற சொல் என இதுவரை இருந்து வந்துள்ளது.

ஆனால் புதிய சின்னத்தில் Pepsi என்ற சொல் வட்டத்திற்கு உள்ளே சென்றுவிட்டது. அதில் இடம்பெற்றிருக்கும் புதிய எழுத்து வடிவமும் வடிவமைப்பும் நம்பிக்கையையும் உற்சாகத்தையும் பிரதிபலிப்பதாக நிறுவனத்தின் தலைமை விற்பனை மற்றும் விளம்பர அதிகாரி தெரிவித்துள்ளார்.

1990 களில் இருந்த அதன் சின்னம் போன்றும்  புதியது இருப்பதாகக் கூறப்படுகிறது. அதன் புதிய zero sugar என்கிற சர்க்கரை இல்லாத  Pepsi பானங்களைப் பிரபலப்படுத்துவதற்காகச் சின்னம் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.



அதற்கான புதிய சின்னம் இந்த ஆண்டின்  பிற்பகுதியில் வட அமெரிக்காவில் அறிமுகம் செய்யப்படும் என்பதுடன் அடுத்த ஆண்டு அது உலகம் முழுவதும் வெளியிடப்படும் என கூறப்படுக்கிறது.

Pepsi பானம் விற்பனைக்கு வந்து  சுமார் 125 ஆண்டுகளாகும் நிலையில் அதன் சின்னம் பலமுறை மாற்றப்பட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

15 ஆண்டுகளின் பின்னர் Pepsi சின்னத்தில் ஏற்பட்ட மாற்றம்samugammedia Pepsi நிறுவனம் 15 ஆண்டுகளுக்குப் பின்னர் சின்னத்தை மாற்றியுள்ளதாக தெரியவந்துள்ளது.அதற்கமைய,  அதன் பிரபல பானத்திற்கான சின்னத்தை மாற்றியுள்ளது. 2008ஆம் ஆண்டிலிருந்து அந்த  பானத்தின் சின்னம் வட்டத்திற்குள் சிவப்பு, வெள்ளை, நீலம் ஆகிய வண்ணங்களுடனும் அதன் கீழே Pepsi என்ற சொல் என இதுவரை இருந்து வந்துள்ளது. ஆனால் புதிய சின்னத்தில் Pepsi என்ற சொல் வட்டத்திற்கு உள்ளே சென்றுவிட்டது. அதில் இடம்பெற்றிருக்கும் புதிய எழுத்து வடிவமும் வடிவமைப்பும் நம்பிக்கையையும் உற்சாகத்தையும் பிரதிபலிப்பதாக நிறுவனத்தின் தலைமை விற்பனை மற்றும் விளம்பர அதிகாரி தெரிவித்துள்ளார்.1990 களில் இருந்த அதன் சின்னம் போன்றும்  புதியது இருப்பதாகக் கூறப்படுகிறது. அதன் புதிய zero sugar என்கிற சர்க்கரை இல்லாத  Pepsi பானங்களைப் பிரபலப்படுத்துவதற்காகச் சின்னம் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.அதற்கான புதிய சின்னம் இந்த ஆண்டின்  பிற்பகுதியில் வட அமெரிக்காவில் அறிமுகம் செய்யப்படும் என்பதுடன் அடுத்த ஆண்டு அது உலகம் முழுவதும் வெளியிடப்படும் என கூறப்படுக்கிறது. Pepsi பானம் விற்பனைக்கு வந்து  சுமார் 125 ஆண்டுகளாகும் நிலையில் அதன் சின்னம் பலமுறை மாற்றப்பட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

Advertisement

Advertisement

Advertisement