• Nov 28 2024

யாழில் டெங்கு கட்டுப்பாட்டு களப் பரிசோதனைகளை மேற்கொள்ள திட்டம்..!

Sharmi / Oct 9th 2024, 4:24 pm
image

யாழ்ப்பாண மாவட்டத்தில் எதிர்வரும் 2024.10.13 - 2024.10.15 ஆம் திகதிகளில் டெங்கு கட்டுப்பாட்டு களப்பரிசோதனை மேற்கொள்ள திட்டமிடப்பட்டுள்ளதாக யாழ்ப்பாணம் மாவட்ட பதில் அரசாங்க அதிபர் மருதலிங்கம் பிரதீபன் தெரிவித்துள்ளார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,

2024.10.13 கிராம உத்தியோகத்தர்கள், பிரதேச செயலாளர்களின் ஒத்துழைப்போடு கிராம மட்ட அமைப்புக்களை வலுப்படுத்தி அவர்கள் மூலமாக விழிப்புணர்வுகளை ஏற்படுத்தி பொது மக்கள் குடியிருப்புக்களில் டெங்கு பரம்பல் தொடர்பான பரிசோதனைகள் மேற்கொள்ளப்படவுள்ளது.

2024.10.14 அனைத்து அரச சார்பற்ற நிறுவனங்கள் மற்றும் தனியார் அலுவலகங்களிலும் டெங்கு பரம்பல் தொடர்பான பரிசோதனைகளை மேற்கொள்ளப்படவுள்ளது.

2024.10.15 அனைத்து பாடசாலைகள் (காலை), தனியார் கல்வி நிலையங்கள் (மாலை) டெங்கு பரம்பல் தொடர்பான பரிசோதனைகள் மேற்கொள்ளப்படவுள்ளது.

அரச அரச சார்பற்ற நிறுவனங்கள் மற்றும் பொது மக்களுக்கு தேவையான அறிவுறுத்தல்களை கிராம மட்ட உத்தியோகத்தர்கள் ஊடாக வழங்குவதுடன் மேற்படி நடவடிக்கைகளுக்கு அனைவரும் ஒத்துழைப்பு வழங்குமாறு கேட்டுக்கொள்கின்றேன் என தெரிவித்தார்.

யாழில் டெங்கு கட்டுப்பாட்டு களப் பரிசோதனைகளை மேற்கொள்ள திட்டம். யாழ்ப்பாண மாவட்டத்தில் எதிர்வரும் 2024.10.13 - 2024.10.15 ஆம் திகதிகளில் டெங்கு கட்டுப்பாட்டு களப்பரிசோதனை மேற்கொள்ள திட்டமிடப்பட்டுள்ளதாக யாழ்ப்பாணம் மாவட்ட பதில் அரசாங்க அதிபர் மருதலிங்கம் பிரதீபன் தெரிவித்துள்ளார்.அவர் மேலும் தெரிவிக்கையில்,2024.10.13 கிராம உத்தியோகத்தர்கள், பிரதேச செயலாளர்களின் ஒத்துழைப்போடு கிராம மட்ட அமைப்புக்களை வலுப்படுத்தி அவர்கள் மூலமாக விழிப்புணர்வுகளை ஏற்படுத்தி பொது மக்கள் குடியிருப்புக்களில் டெங்கு பரம்பல் தொடர்பான பரிசோதனைகள் மேற்கொள்ளப்படவுள்ளது.2024.10.14 அனைத்து அரச சார்பற்ற நிறுவனங்கள் மற்றும் தனியார் அலுவலகங்களிலும் டெங்கு பரம்பல் தொடர்பான பரிசோதனைகளை மேற்கொள்ளப்படவுள்ளது.2024.10.15 அனைத்து பாடசாலைகள் (காலை), தனியார் கல்வி நிலையங்கள் (மாலை) டெங்கு பரம்பல் தொடர்பான பரிசோதனைகள் மேற்கொள்ளப்படவுள்ளது.அரச அரச சார்பற்ற நிறுவனங்கள் மற்றும் பொது மக்களுக்கு தேவையான அறிவுறுத்தல்களை கிராம மட்ட உத்தியோகத்தர்கள் ஊடாக வழங்குவதுடன் மேற்படி நடவடிக்கைகளுக்கு அனைவரும் ஒத்துழைப்பு வழங்குமாறு கேட்டுக்கொள்கின்றேன் என தெரிவித்தார்.

Advertisement

Advertisement

Advertisement