எதிர்வரும் மார்ச் மாதம் முதலாம் திகதி முதல் இலங்கை மற்றும் மாலைதீவுகள் இடையில் விமான அம்பியூலன்ஸ் சேவையை ஆரம்பிக்க தீர்மானிக்கப்பட்டுள்ளதாக துறைமுகங்கள், கப்பல் போக்குவரத்து மற்றும் விமான சேவைகள் அமைச்சு தெரிவித்துள்ளது.
இலங்கையில் அவசர சிகிச்சையின் தரத்தை கருத்தில் கொண்டு மாலைதீவுகளில் இருந்து அவசர நோயாளிகளை சிகிச்சைக்காக இலங்கை வைத்தியசாலைகளுக்கு அனுப்ப மாலைதீவு அரசாங்கம் தீர்மானித்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதுவரை மாலைதீவு குடிமக்கள் அவசர சிகிச்சைகளுக்காக இந்தியாவிற்கு அழைத்துச் செல்லப்படுகின்றனர்.
இந்த நடவடிக்கைகளுக்கு தேவையான அனைத்து அனுமதிகளும் விமான நிலையம் மற்றும் சிவில் விமான சேவைகள் அதிகாரசபை அதிகாரிகளுக்கு வழங்கப்பட்டுள்ளதாக அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா தெரிவித்துளார்.
இலங்கை- மாலைதீவுகள் இடையே அம்பியூலன்ஸ் சேவையை ஆரம்பிக்க திட்டம்.samugammedia எதிர்வரும் மார்ச் மாதம் முதலாம் திகதி முதல் இலங்கை மற்றும் மாலைதீவுகள் இடையில் விமான அம்பியூலன்ஸ் சேவையை ஆரம்பிக்க தீர்மானிக்கப்பட்டுள்ளதாக துறைமுகங்கள், கப்பல் போக்குவரத்து மற்றும் விமான சேவைகள் அமைச்சு தெரிவித்துள்ளது.இலங்கையில் அவசர சிகிச்சையின் தரத்தை கருத்தில் கொண்டு மாலைதீவுகளில் இருந்து அவசர நோயாளிகளை சிகிச்சைக்காக இலங்கை வைத்தியசாலைகளுக்கு அனுப்ப மாலைதீவு அரசாங்கம் தீர்மானித்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.இதுவரை மாலைதீவு குடிமக்கள் அவசர சிகிச்சைகளுக்காக இந்தியாவிற்கு அழைத்துச் செல்லப்படுகின்றனர்.இந்த நடவடிக்கைகளுக்கு தேவையான அனைத்து அனுமதிகளும் விமான நிலையம் மற்றும் சிவில் விமான சேவைகள் அதிகாரசபை அதிகாரிகளுக்கு வழங்கப்பட்டுள்ளதாக அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா தெரிவித்துளார்.