அக்கரப் பத்தனை பொலிஸ் பிரிவில் உள்ள நியூ போர்ட் மோர்
தோட்டத்திற்கு சொந்தமான இடு காட்டை தனி நபர் ஒருவரினால் ஆக்கிரமிப்பு
செய்யப்பட்டு விவசாயம் மேற் கொள்ளப்பட்டதால் தோட்ட தொழிலாளர்கள் பணி
பகீஸ்கரிப்பு போராட்டத்தை முன்னெடுத்துள்ளனர்.
இப்
பிரச்சனை நீண்ட நாட்களாகவே காணப்பட்டுள்ளது தோட்ட பொதுமக்கள் இந்த
பிரச்சினையை சுமூகமாக முடிப்பதற்காக சம்பந்தப்பட்ட ஆக்கிரமிப்பு நபருக்கு
ஒரு குறிப்பிட்ட காணியை இடுகாடு காணப்படுகின்ற நிலத்துக்கு பதிலாக மாற்று
காணியை தோட்ட நிர்வாகத்தோடு பேச்சுவார்த்தை நடாத்தி வழங்கியுள்ளார்கள்.
எனினும்
மீண்டும் குறித்த நபர் இடுகாட்டு பகுதியை ஆக்கிரமிப்பு செய்தமையால் தோட்ட
தொழிலாளர்களும் ,பொதுமக்களும் பணி பகிஸ்கரிப்பு போராட்டத்தை
முன்னெடுத்துள்ளனர்.
இவ்விடயம்
தொடர்பில் தோட்ட முகாமையாளர் ஊடாக அக்கரைப்பத்தனை பொலிஸ் நிலயத்தில்
தோட்டமக்கள் முறைப்பாடு செய்துள்ளதோடு சம்பந்தப்பட்ட முரண்பாடை நீதிமன்றம்
ஊடாக தீர்த்துக் கொள்ளுமாறு பணிக்கப்பட்டு இருக்கின்றமையும்
குறிப்பிடத்தக்கது.
இப்பணி
பகீஸ்கரிப்பு போராட்டத்தின் போது சம்பவமிடத்திற்கு சென்ற இ.தொ.கா உபதலைவர்
சச்சுதானந்தன், முன்னாள் அக்கரப்பத்தனை பிரதேச சபை தலைவர் ராமன்
கோபாலகிருஷ்ணன் ,இ.தொகா மாநில இயக்குனர் ஸ்ரீதர் மற்றும் தோட்ட தலைவர்கள்
இந்த விடயத்தில் முழுமையாக ஈடுபட்டு பிரச்சனைக்கான தீர்வை பெற்றுத் தரும்
விதத்தில் அதற்கான ஆவணங்களை சேகரிக்கும் விடயத்தில் இறங்கியுள்ளார்கள்.
மேலும், நேற்று முறையிடப்பட்ட இந்த புகார் எதிர்வரும் வெள்ளிக்கிழமை
நுவரெலிய மாவட்ட நீதிமன்றத்தில் விசாரணைக்காக எடுத்துக் கொள்ளப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
இடுகாடு ஆக்கிரமிப்புக்கு எதிராக தோட்ட மக்கள் பணி பகிஸ்கரிப்பு போராட்டம்.samugammedia அக்கரப் பத்தனை பொலிஸ் பிரிவில் உள்ள நியூ போர்ட் மோர்
தோட்டத்திற்கு சொந்தமான இடு காட்டை தனி நபர் ஒருவரினால் ஆக்கிரமிப்பு
செய்யப்பட்டு விவசாயம் மேற் கொள்ளப்பட்டதால் தோட்ட தொழிலாளர்கள் பணி
பகீஸ்கரிப்பு போராட்டத்தை முன்னெடுத்துள்ளனர்.இப்
பிரச்சனை நீண்ட நாட்களாகவே காணப்பட்டுள்ளது தோட்ட பொதுமக்கள் இந்த
பிரச்சினையை சுமூகமாக முடிப்பதற்காக சம்பந்தப்பட்ட ஆக்கிரமிப்பு நபருக்கு
ஒரு குறிப்பிட்ட காணியை இடுகாடு காணப்படுகின்ற நிலத்துக்கு பதிலாக மாற்று
காணியை தோட்ட நிர்வாகத்தோடு பேச்சுவார்த்தை நடாத்தி வழங்கியுள்ளார்கள்.எனினும்
மீண்டும் குறித்த நபர் இடுகாட்டு பகுதியை ஆக்கிரமிப்பு செய்தமையால் தோட்ட
தொழிலாளர்களும் ,பொதுமக்களும் பணி பகிஸ்கரிப்பு போராட்டத்தை
முன்னெடுத்துள்ளனர்.இவ்விடயம்
தொடர்பில் தோட்ட முகாமையாளர் ஊடாக அக்கரைப்பத்தனை பொலிஸ் நிலயத்தில்
தோட்டமக்கள் முறைப்பாடு செய்துள்ளதோடு சம்பந்தப்பட்ட முரண்பாடை நீதிமன்றம்
ஊடாக தீர்த்துக் கொள்ளுமாறு பணிக்கப்பட்டு இருக்கின்றமையும்
குறிப்பிடத்தக்கது.இப்பணி
பகீஸ்கரிப்பு போராட்டத்தின் போது சம்பவமிடத்திற்கு சென்ற இ.தொ.கா உபதலைவர்
சச்சுதானந்தன், முன்னாள் அக்கரப்பத்தனை பிரதேச சபை தலைவர் ராமன்
கோபாலகிருஷ்ணன் ,இ.தொகா மாநில இயக்குனர் ஸ்ரீதர் மற்றும் தோட்ட தலைவர்கள்
இந்த விடயத்தில் முழுமையாக ஈடுபட்டு பிரச்சனைக்கான தீர்வை பெற்றுத் தரும்
விதத்தில் அதற்கான ஆவணங்களை சேகரிக்கும் விடயத்தில் இறங்கியுள்ளார்கள்.மேலும், நேற்று முறையிடப்பட்ட இந்த புகார் எதிர்வரும் வெள்ளிக்கிழமை