• Apr 16 2025

விபத்தில் சிக்கிய இளங்குமரன் எம்.பியை நேரில் சென்று பார்வையிட்ட பிரதமர்!

Chithra / Feb 16th 2025, 7:08 am
image

 

விபத்தில் சிக்கிக் காயமடைந்த நிலையில் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ள தேசிய மக்கள் சக்தியின் யாழ்ப்பாணம் மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் க. இளங்குமரனை பிரதமர் ஹரிணி அமரசூரிய நேற்று நேரில் சென்று பார்வையிட்டார். 

அத்துடன் நாடாளுமன்ற உறுப்பினர் க.இளங்குமரனின் உடல் நிலை தொடர்பில் வைத்தியர்களிடம் கேட்டறிந்து கொண்டார். 

யாழ்ப்பாணம் மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் க. இளங்குமரன் பயணித்த வாகனம் சாவகச்சேரி தளங்கிளப்பு பகுதியில் நேற்று மாலை விபத்துக்குள்ளானதில் நாடாளுமன்ற உறுப்பினர் உள்ளிட்ட மூவர் காயமடைந்தனர். 

கிளிநொச்சியிலிருந்து யாழ்ப்பாணம் நோக்கிப் பயணித்துக் கொண்டிருந்த நாடாளுமன்ற உறுப்பினரின் மகிழுந்து, டிப்பர் ரக வாகனமொன்றுடன் மோதியதன் பின்னர் வயலுக்குல் பாய்ந்து விபத்துக்குள்ளானதாக காவல்துறையினர் தெரிவித்தனர்.

குறித்த விபத்தில் நாடாளுமன்ற உறுப்பினர் க. இளங்குமரனும், வாகனத்தின் சாரதி உட்பட அதில் பயணித்த மூவர் காயமடைந்தனர்.

விபத்தில் சிக்கிய இளங்குமரன் எம்.பியை நேரில் சென்று பார்வையிட்ட பிரதமர்  விபத்தில் சிக்கிக் காயமடைந்த நிலையில் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ள தேசிய மக்கள் சக்தியின் யாழ்ப்பாணம் மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் க. இளங்குமரனை பிரதமர் ஹரிணி அமரசூரிய நேற்று நேரில் சென்று பார்வையிட்டார். அத்துடன் நாடாளுமன்ற உறுப்பினர் க.இளங்குமரனின் உடல் நிலை தொடர்பில் வைத்தியர்களிடம் கேட்டறிந்து கொண்டார். யாழ்ப்பாணம் மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் க. இளங்குமரன் பயணித்த வாகனம் சாவகச்சேரி தளங்கிளப்பு பகுதியில் நேற்று மாலை விபத்துக்குள்ளானதில் நாடாளுமன்ற உறுப்பினர் உள்ளிட்ட மூவர் காயமடைந்தனர். கிளிநொச்சியிலிருந்து யாழ்ப்பாணம் நோக்கிப் பயணித்துக் கொண்டிருந்த நாடாளுமன்ற உறுப்பினரின் மகிழுந்து, டிப்பர் ரக வாகனமொன்றுடன் மோதியதன் பின்னர் வயலுக்குல் பாய்ந்து விபத்துக்குள்ளானதாக காவல்துறையினர் தெரிவித்தனர்.குறித்த விபத்தில் நாடாளுமன்ற உறுப்பினர் க. இளங்குமரனும், வாகனத்தின் சாரதி உட்பட அதில் பயணித்த மூவர் காயமடைந்தனர்.

Advertisement

Advertisement

Advertisement