ஈரானில் நூற்றுக்கணக்கான பாடசாலை மாணவிகளுக்கு விஷம் அளிக்கப்பட்ட விவகாரத்தின் பின்னணியில் பிரித்தானிய தூதுவர் இருப்பதாக அங்குள்ள செய்தி ஊடகங்கள் குற்றஞ்சாட்டியுள்ளன.
ஈரானின் பல்வேறு பாடசாலைகளில் திடீரென்று மாணவிகள் நோய்வாய்ப்பட்டு நூற்றுக்கணக்கானோர் மருத்துவமனையில் சேர்ப்பிக்கப்பட்டனர். இந்த விவகாரம் வெளிநாட்டு சதி என்றே ஈரான் நிர்வாகம் கூறி வந்தது.
ஆனால், Mashregh செய்தி ஊடகமானது மாணவிகள் நோய்வாய்ப்பட்டதற்கு முதன்மை காரணம் பிரிட்டிஷ் தூதர் சைமன் ஷெர்க்ளிஃப் என வெளிப்படையாக குற்றஞ்சாட்டியுள்ளது.
அதில், ஈரானில் உள்ள பிரித்தானிய தூதுவர், நம் நாட்டில் மாணவிகளுக்கு விஷம் கொடுத்த சம்பவத்தில் நேரடியாக ஈடுபட்டுள்ளார் என குறிப்பிட்டுள்ளது. மட்டுமின்றி, இது தொடர்பில் முன்னெடுக்கப்பட்ட ரகசிய விசாரணையில், வெளிநாட்டு சதி இருப்பதாகவும் அந்த செய்தி ஊடகம் வெளிப்படுத்தியுள்ளது.
ஆனால் இந்த குற்றச்சாட்டானது நாட்டில் அதிகரித்து வரும் கோபத்திற்கு மத்தியில் பழியை திசைதிருப்பும் ஈரான் நிர்வாகத்தின் முயற்சி என கூறுகின்றனர். மட்டுமின்றி, மாணவிகளுக்கு விஷம் கொடுத்ததே ஈரான் நிர்வாகம் தான், சமீப மாதங்களாக தொடர் போராட்டங்களில் ஈடுபட்டுவரும் மாணவிகளை திசைதிருப்பவே இந்த செயல் எனவும் ஈரானிய மக்கள் குற்றஞ்சாட்டி வருகின்றனர்.
கடந்த நவம்பர் மாதத்தில் இருந்தே விஷம் கொடுக்கப்பட்ட சம்பவம் வெளிவரத்தொடங்கியுள்ளது. சுமார் 1,000 மாணவிகள் இது தொடர்பில் புகார் அளித்துள்ளனர். மூச்சுத்திணறல், கூச்ச உணர்வு, குமட்டல் உள்ளிட்டவை அறிகுறிகளாக கூறுகின்றனர்.
நூற்றுக்கணக்கான மாணவிகள் மருத்துவ சிகிச்சையை நாடியும், இதுவரை உண்மையான காரணம் கண்டறியப்படவில்லை. 100க்கும் மேற்பட்ட நகரங்கள் இலக்கு வைக்கப்பட்டுள்ளதாகவும் குறைந்தது 8,000 மாணவர்கள் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் நிபுணர்கள் தரப்பு மதிப்பிட்டுள்ளனர்.
இதனிடையே, இந்த விவகாரத்தின் பின்னனியில் ஈரானுகான பிரித்தானிய தூதுவர் இருப்பதாக கூறும் அந்த செய்தி ஊடகம் காரணத்தை மட்டும் குறிப்பிடவில்லை என்றே தெரியவந்துள்ளது.
நூற்றுக்கணக்கான மாணவிகளுக்கு அளிக்கப்பட்ட விஷம்: பின்னணியில் யார் வெளிநாட்டு சதியா SamugamMedia ஈரானில் நூற்றுக்கணக்கான பாடசாலை மாணவிகளுக்கு விஷம் அளிக்கப்பட்ட விவகாரத்தின் பின்னணியில் பிரித்தானிய தூதுவர் இருப்பதாக அங்குள்ள செய்தி ஊடகங்கள் குற்றஞ்சாட்டியுள்ளன.ஈரானின் பல்வேறு பாடசாலைகளில் திடீரென்று மாணவிகள் நோய்வாய்ப்பட்டு நூற்றுக்கணக்கானோர் மருத்துவமனையில் சேர்ப்பிக்கப்பட்டனர். இந்த விவகாரம் வெளிநாட்டு சதி என்றே ஈரான் நிர்வாகம் கூறி வந்தது.ஆனால், Mashregh செய்தி ஊடகமானது மாணவிகள் நோய்வாய்ப்பட்டதற்கு முதன்மை காரணம் பிரிட்டிஷ் தூதர் சைமன் ஷெர்க்ளிஃப் என வெளிப்படையாக குற்றஞ்சாட்டியுள்ளது.அதில், ஈரானில் உள்ள பிரித்தானிய தூதுவர், நம் நாட்டில் மாணவிகளுக்கு விஷம் கொடுத்த சம்பவத்தில் நேரடியாக ஈடுபட்டுள்ளார் என குறிப்பிட்டுள்ளது. மட்டுமின்றி, இது தொடர்பில் முன்னெடுக்கப்பட்ட ரகசிய விசாரணையில், வெளிநாட்டு சதி இருப்பதாகவும் அந்த செய்தி ஊடகம் வெளிப்படுத்தியுள்ளது.ஆனால் இந்த குற்றச்சாட்டானது நாட்டில் அதிகரித்து வரும் கோபத்திற்கு மத்தியில் பழியை திசைதிருப்பும் ஈரான் நிர்வாகத்தின் முயற்சி என கூறுகின்றனர். மட்டுமின்றி, மாணவிகளுக்கு விஷம் கொடுத்ததே ஈரான் நிர்வாகம் தான், சமீப மாதங்களாக தொடர் போராட்டங்களில் ஈடுபட்டுவரும் மாணவிகளை திசைதிருப்பவே இந்த செயல் எனவும் ஈரானிய மக்கள் குற்றஞ்சாட்டி வருகின்றனர்.கடந்த நவம்பர் மாதத்தில் இருந்தே விஷம் கொடுக்கப்பட்ட சம்பவம் வெளிவரத்தொடங்கியுள்ளது. சுமார் 1,000 மாணவிகள் இது தொடர்பில் புகார் அளித்துள்ளனர். மூச்சுத்திணறல், கூச்ச உணர்வு, குமட்டல் உள்ளிட்டவை அறிகுறிகளாக கூறுகின்றனர்.நூற்றுக்கணக்கான மாணவிகள் மருத்துவ சிகிச்சையை நாடியும், இதுவரை உண்மையான காரணம் கண்டறியப்படவில்லை. 100க்கும் மேற்பட்ட நகரங்கள் இலக்கு வைக்கப்பட்டுள்ளதாகவும் குறைந்தது 8,000 மாணவர்கள் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் நிபுணர்கள் தரப்பு மதிப்பிட்டுள்ளனர்.இதனிடையே, இந்த விவகாரத்தின் பின்னனியில் ஈரானுகான பிரித்தானிய தூதுவர் இருப்பதாக கூறும் அந்த செய்தி ஊடகம் காரணத்தை மட்டும் குறிப்பிடவில்லை என்றே தெரியவந்துள்ளது.