• Jan 13 2025

வவுனியாவில் பொலிஸார் விசேட சுற்றி வளைப்பு; துப்பாக்கியுடன் ஒருவர் கைது..!

Sharmi / Dec 30th 2024, 1:08 pm
image

உள்நாட்டு துப்பாக்கி மற்றும் 18,000 மில்லி மீற்றர் கோடாவுடன் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக பூவரசன்குளம் பொலிசார் இன்று(30) தெரிவித்தனர்.

இச் சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,

வவுனியா, பூவரசன்குளம் பொலிசாருக்கு கிடைத்த இரகசிய தகவலையடுத்து இரண்டாம் செங்கல்படை பகுதியில் விசேட சுற்றி வளைப்பு ஒன்றை பூவரசன்குளம் பொலிசார் மேற்கொண்டனர்.

இதன்போது உள்நாட்டு துப்பாக்கி  மற்றும் பெரல் ஒன்றில் அடைக்கப்பட்டிருந்த கசிப்பு உற்பத்திக்கான 18,000 மில்லிலீற்றர் கோடா என்பன மீட்கப்பட்டதுடன், அதனை உடமையில் வைத்திருந்த நபர் கைது செய்யப்பட்டார்.

கைது செய்யப்பட்டவரை மேலதிக விசாரணைகளின் பின் நீதிமன்றில் முற்படுத்த நடவடிக்கை எடுத்துள்ளதாகவும் பூவரசன்குளம் பொலிசார் தெரிவித்தனர். 


வவுனியாவில் பொலிஸார் விசேட சுற்றி வளைப்பு; துப்பாக்கியுடன் ஒருவர் கைது. உள்நாட்டு துப்பாக்கி மற்றும் 18,000 மில்லி மீற்றர் கோடாவுடன் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக பூவரசன்குளம் பொலிசார் இன்று(30) தெரிவித்தனர்.இச் சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,வவுனியா, பூவரசன்குளம் பொலிசாருக்கு கிடைத்த இரகசிய தகவலையடுத்து இரண்டாம் செங்கல்படை பகுதியில் விசேட சுற்றி வளைப்பு ஒன்றை பூவரசன்குளம் பொலிசார் மேற்கொண்டனர்.இதன்போது உள்நாட்டு துப்பாக்கி  மற்றும் பெரல் ஒன்றில் அடைக்கப்பட்டிருந்த கசிப்பு உற்பத்திக்கான 18,000 மில்லிலீற்றர் கோடா என்பன மீட்கப்பட்டதுடன், அதனை உடமையில் வைத்திருந்த நபர் கைது செய்யப்பட்டார்.கைது செய்யப்பட்டவரை மேலதிக விசாரணைகளின் பின் நீதிமன்றில் முற்படுத்த நடவடிக்கை எடுத்துள்ளதாகவும் பூவரசன்குளம் பொலிசார் தெரிவித்தனர். 

Advertisement

Advertisement

Advertisement