திருகோணமலை பிராந்திய குற்றத்தடுப்பு பிரிவினர் மேற்கொண்ட சோதனையின் போது 50 கிராம் ஐஸ் போதைப்பொருளை தம் வசம் வைத்திருந்த குற்றச்சாட்டின் பேரில் பொலிஸ் கான்ஸ்டபிள் ஒருவர் நேற்றிரவு (10) கைது செய்யப்பட்டுள்ளார்.
யுக்திய திட்டத்திற்கு அமைவாக கிடைக்கப்பெற்ற தகவலையடுத்து, மன்னாரிலிருந்து திருகோணமலை நோக்கி வந்து கொண்டிருந்த வேளை குறித்த பொலிஸ் கான்ஸ்டபிளை வில்கம் விகாரை பகுதியில் வைத்து சோதனையிட்டபோது அவரிடம் இருந்து 50 கிராம் ஐஸ் போதைப் பொருள் கைப்பற்றப்பட்டதாகவும் பொலிசார் தெரிவித்தனர்.
இவ்வாறு கைது செய்யப்பட்டவர் யாழிலுள்ள பொலிஸ் நிலையமொன்றில் பணியாற்றும் 27 வயதுடைய பொலிஸ் கான்ஸ்டபிள் என தெரிவிக்கப்படுகிறது.
கைது செய்யப்பட்ட குறித்த சந்தேக நபரை திருகோணமலை உப்புவெளி பொலிஸ் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளதாகவும் தெரியவருகின்றது.
குறித்த சம்பவம் தொடர்பில் உப்புவெளி பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
போதைப் பொருளுடன் பொலிஸ் கான்ஸ்டபிள் கைது. யுக்திய நடவடிக்கையில் அதிரடி.samugammedia திருகோணமலை பிராந்திய குற்றத்தடுப்பு பிரிவினர் மேற்கொண்ட சோதனையின் போது 50 கிராம் ஐஸ் போதைப்பொருளை தம் வசம் வைத்திருந்த குற்றச்சாட்டின் பேரில் பொலிஸ் கான்ஸ்டபிள் ஒருவர் நேற்றிரவு (10) கைது செய்யப்பட்டுள்ளார்.யுக்திய திட்டத்திற்கு அமைவாக கிடைக்கப்பெற்ற தகவலையடுத்து, மன்னாரிலிருந்து திருகோணமலை நோக்கி வந்து கொண்டிருந்த வேளை குறித்த பொலிஸ் கான்ஸ்டபிளை வில்கம் விகாரை பகுதியில் வைத்து சோதனையிட்டபோது அவரிடம் இருந்து 50 கிராம் ஐஸ் போதைப் பொருள் கைப்பற்றப்பட்டதாகவும் பொலிசார் தெரிவித்தனர்.இவ்வாறு கைது செய்யப்பட்டவர் யாழிலுள்ள பொலிஸ் நிலையமொன்றில் பணியாற்றும் 27 வயதுடைய பொலிஸ் கான்ஸ்டபிள் என தெரிவிக்கப்படுகிறது.கைது செய்யப்பட்ட குறித்த சந்தேக நபரை திருகோணமலை உப்புவெளி பொலிஸ் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளதாகவும் தெரியவருகின்றது.குறித்த சம்பவம் தொடர்பில் உப்புவெளி பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.