• May 03 2024

பல்கலைக்கழக மாணவர்கள் மீதான பொலிஸாரின் அடக்குமுறை...! கஜேந்திரகுமார் எம்.பி கண்டனம்...!samugammedia

Sharmi / Nov 6th 2023, 8:33 am
image

Advertisement

பல்கலைக்கழக மாணவர்கள் மீதான பொலிஸாரின் அடக்குமுறையை கண்டிப்பதாக தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் பாராளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தெரிவித்துள்ளார்.

மட்டக்களப்பு  மயிலத்தமடு கால்நடைப் பண்ணையாளர்களின் போராட்டத்திற்கு ஆதரவு தெரிவிக்கும் முகமாக நேற்றையதினம் வடக்கு, கிழக்கு பல்கலைக்கழக மாணவர்கள் முன்னெடுத்த கவனயீர்ப்புபேரணி மற்றும் போராட்டத்தின் பின்னர் அவர்களை பொலிஸார் கைது செய்த நிலையில் செங்கலடி சந்தி வெளி பொலிஸ் நிலையத்துக்குச் சென்றிருந்த தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் பாராளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம், பல்கலைக்கழக மாணவர்களுடன் கலந்துரையாடினார்.

அதன்பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையிலேயே அவர் இதனை தெரிவித்தார்.

இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,

மட்டக்களப்பு மயிலத்தமடு கால்நடைப் பண்ணையாளர்களின் போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்து மக்கள் திரளக் கூடாது என்பதற்காக பல்கலைக்கழக மாணவர்கள் எடுத்த இந்த முயற்சியை ஏதோவொரு  வகையில் அந்த  மாணவர்களை பயப்பீதிக்குள் தள்ளி அவர்களை தொடர்ந்தும் கால்நடைப் பண்ணையாளர்களுக்கு ஆதரவு தெரிவிக்க முடியாமல் செய்வதற்கான சதியாகவே இதனை பார்ப்பதாகவும் இச் சம்பவத்தை பாராளுமன்றின் கவனத்திற்கு கொண்டுசெல்லவுள்ளதாகவும் தெரிவித்தார்.

அத்துடன், போராட்டங்கள் மற்றும் பேரணிகளுக்கான அனுமதியைப் பெற்றுக்கொள்வதென்பது அவற்றைத் தடுப்பதற்காக அல்ல. மாறாக பொதுமக்களுக்கு இடையூறுகள் ஏற்படாது அவர்களை வழிப்படுத்துவதற்காகும். அவ்வாறான நிலையில்,பல்கலைக்கழக மாணவர்கள் மட்டக்களப்பு  மயிலத்தமடு கால்நடைப் பண்ணையாளர்களின் போராட்டத்திற்கு ஆதரவு  பண்ணையாளர்களுக்கு ஆதரவாக முன்னெடுத்த போராட்டப் பேரணியை நிறைவு செய்ததன் பின்னர் அவர்கள் வெளியேறிச் சென்றுகொண்டிருந்தபோது மேற்கொள்ளப்பட்ட கைது நடவடிக்கையானது திட்டமிட்டதாகும்.

விசேடமாக மேலிடத்து உத்தரவின்றி அவ்வாறான கைதுகள் முன்னெடுக்கப்படுவதற்கு வாய்ப்புக்கள் இல்லை. ஆகவே இவ்விதமான பொலிஸாரின் அடக்குமுறைகளை கண்டிப்பதாகவும் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தெரிவித்தார்.






பல்கலைக்கழக மாணவர்கள் மீதான பொலிஸாரின் அடக்குமுறை. கஜேந்திரகுமார் எம்.பி கண்டனம்.samugammedia பல்கலைக்கழக மாணவர்கள் மீதான பொலிஸாரின் அடக்குமுறையை கண்டிப்பதாக தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் பாராளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தெரிவித்துள்ளார்.மட்டக்களப்பு  மயிலத்தமடு கால்நடைப் பண்ணையாளர்களின் போராட்டத்திற்கு ஆதரவு தெரிவிக்கும் முகமாக நேற்றையதினம் வடக்கு, கிழக்கு பல்கலைக்கழக மாணவர்கள் முன்னெடுத்த கவனயீர்ப்புபேரணி மற்றும் போராட்டத்தின் பின்னர் அவர்களை பொலிஸார் கைது செய்த நிலையில் செங்கலடி சந்தி வெளி பொலிஸ் நிலையத்துக்குச் சென்றிருந்த தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் பாராளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம், பல்கலைக்கழக மாணவர்களுடன் கலந்துரையாடினார். அதன்பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையிலேயே அவர் இதனை தெரிவித்தார்.இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,மட்டக்களப்பு மயிலத்தமடு கால்நடைப் பண்ணையாளர்களின் போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்து மக்கள் திரளக் கூடாது என்பதற்காக பல்கலைக்கழக மாணவர்கள் எடுத்த இந்த முயற்சியை ஏதோவொரு  வகையில் அந்த  மாணவர்களை பயப்பீதிக்குள் தள்ளி அவர்களை தொடர்ந்தும் கால்நடைப் பண்ணையாளர்களுக்கு ஆதரவு தெரிவிக்க முடியாமல் செய்வதற்கான சதியாகவே இதனை பார்ப்பதாகவும் இச் சம்பவத்தை பாராளுமன்றின் கவனத்திற்கு கொண்டுசெல்லவுள்ளதாகவும் தெரிவித்தார்.அத்துடன், போராட்டங்கள் மற்றும் பேரணிகளுக்கான அனுமதியைப் பெற்றுக்கொள்வதென்பது அவற்றைத் தடுப்பதற்காக அல்ல. மாறாக பொதுமக்களுக்கு இடையூறுகள் ஏற்படாது அவர்களை வழிப்படுத்துவதற்காகும். அவ்வாறான நிலையில்,பல்கலைக்கழக மாணவர்கள் மட்டக்களப்பு  மயிலத்தமடு கால்நடைப் பண்ணையாளர்களின் போராட்டத்திற்கு ஆதரவு  பண்ணையாளர்களுக்கு ஆதரவாக முன்னெடுத்த போராட்டப் பேரணியை நிறைவு செய்ததன் பின்னர் அவர்கள் வெளியேறிச் சென்றுகொண்டிருந்தபோது மேற்கொள்ளப்பட்ட கைது நடவடிக்கையானது திட்டமிட்டதாகும்.விசேடமாக மேலிடத்து உத்தரவின்றி அவ்வாறான கைதுகள் முன்னெடுக்கப்படுவதற்கு வாய்ப்புக்கள் இல்லை. ஆகவே இவ்விதமான பொலிஸாரின் அடக்குமுறைகளை கண்டிப்பதாகவும் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தெரிவித்தார்.

Advertisement

Advertisement

Advertisement