• Jan 19 2026

பொலிஸ் பரிசோதகருக்கு 7 வருட சிறை தண்டனை !

dileesiya / Jan 17th 2026, 2:45 pm
image

நபர் ஒருவரைத் தாக்கி காயப்படுத்தியமை மற்றும் கொடூரமாக சித்திரவதை செய்தமை தொடர்பில் குற்றவாளியாகக் காணப்பட்ட பொலிஸ் பரிசோதகர் ஒருவருக்கு 7 வருட சிறைத் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. 


மொனராகலை மேல் நீதிமன்ற நீதிபதி சிந்தக ஸ்ரீநாத் குணசேகரவினால் இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. 


குறித்த பொலிஸ் பரிசோதகர், 2020 ஆம் ஆண்டில் ஹம்பேகமுவ பொலிஸ் நிலையத்தில் கடமையாற்றிய போதே இவ்வாறு நபரைத் தாக்கி காயப்படுத்தியிருந்தார். 


தற்போது சியம்பலாண்டுவ பொலிஸ் நிலையத்தில் இணைக்கப்பட்டு கடமையாற்றும் பொலிஸ் பரிசோதகர் ஒருவருக்கே இவ்வாறு சிறைத் தண்டனை விதிக்கப்பட்டது. 


குறித்த நபருக்கு 7 வருட சிறைத் தண்டனைக்கு மேலதிகமாக 10,000 ரூபா அபராதம் விதிக்கப்பட்டுள்ளதுடன், அதனைச் செலுத்தத் தவறினால் 6 மாத கால சாதாரண சிறைத் தண்டனையும் விதிக்கப்பட்டுள்ளது.

பொலிஸ் பரிசோதகருக்கு 7 வருட சிறை தண்டனை நபர் ஒருவரைத் தாக்கி காயப்படுத்தியமை மற்றும் கொடூரமாக சித்திரவதை செய்தமை தொடர்பில் குற்றவாளியாகக் காணப்பட்ட பொலிஸ் பரிசோதகர் ஒருவருக்கு 7 வருட சிறைத் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. மொனராகலை மேல் நீதிமன்ற நீதிபதி சிந்தக ஸ்ரீநாத் குணசேகரவினால் இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. குறித்த பொலிஸ் பரிசோதகர், 2020 ஆம் ஆண்டில் ஹம்பேகமுவ பொலிஸ் நிலையத்தில் கடமையாற்றிய போதே இவ்வாறு நபரைத் தாக்கி காயப்படுத்தியிருந்தார். தற்போது சியம்பலாண்டுவ பொலிஸ் நிலையத்தில் இணைக்கப்பட்டு கடமையாற்றும் பொலிஸ் பரிசோதகர் ஒருவருக்கே இவ்வாறு சிறைத் தண்டனை விதிக்கப்பட்டது. குறித்த நபருக்கு 7 வருட சிறைத் தண்டனைக்கு மேலதிகமாக 10,000 ரூபா அபராதம் விதிக்கப்பட்டுள்ளதுடன், அதனைச் செலுத்தத் தவறினால் 6 மாத கால சாதாரண சிறைத் தண்டனையும் விதிக்கப்பட்டுள்ளது.

Advertisement

Advertisement

Advertisement