கொழும்பு, புதுக்கடை நீதிமன்றத்துக்குள் புதன்கிழமை “கணேமுல்ல சஞ்சீவ” என்பவர் சுட்டுக்கொல்லப்பட்ட சம்பவம் தொடர்பில் பொலிஸ் அதிகாரி ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக கொழும்பு பொலிஸ் குற்றத் தடுப்பு பிரிவினர் தெரிவித்துள்ளனர்.இது தொடர்பில் மேலும் தெரியவருவது
கைது செய்யப்பட்ட பொலிஸ் அதிகாரி 25 வயதுடையவர் எனவும் நீர்கொழும்பு பொலிஸ் நிலையத்தில் கடமையாற்றுபவர் எனவும் தெரியவந்துள்ளது
சந்தேக நபரான பொலிஸ் அதிகாரி பாதாள உலக கும்பலைச் சேர்ந்த “கணேமுல்ல சஞ்சீவ” என்பவரை சுட்டுக்கொலை செய்வதற்கு வழக்கறிஞர் வேடத்தில் சென்ற பிரதான சந்தேக நபருக்கு உதவி செய்த பெண்ணுடன் தொலைபேசியில் தொடர்புகளை பேணி வந்ததாக பொலிஸ் விசாரணையில் தெரியவந்துள்ளது.
இது தொடர்பான மேலதிக விசாரணைகளை கொழும்பு பொலிஸ் குற்றத் தடுப்பு பிரிவினர் மேற்கொண்டு வருகின்றனர்.
“கணேமுல்ல சஞ்சீவ” படுகொலை - பொலிஸ் அதிகாரி கைது கொழும்பு, புதுக்கடை நீதிமன்றத்துக்குள் புதன்கிழமை “கணேமுல்ல சஞ்சீவ” என்பவர் சுட்டுக்கொல்லப்பட்ட சம்பவம் தொடர்பில் பொலிஸ் அதிகாரி ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக கொழும்பு பொலிஸ் குற்றத் தடுப்பு பிரிவினர் தெரிவித்துள்ளனர்.இது தொடர்பில் மேலும் தெரியவருவதுகைது செய்யப்பட்ட பொலிஸ் அதிகாரி 25 வயதுடையவர் எனவும் நீர்கொழும்பு பொலிஸ் நிலையத்தில் கடமையாற்றுபவர் எனவும் தெரியவந்துள்ளதுசந்தேக நபரான பொலிஸ் அதிகாரி பாதாள உலக கும்பலைச் சேர்ந்த “கணேமுல்ல சஞ்சீவ” என்பவரை சுட்டுக்கொலை செய்வதற்கு வழக்கறிஞர் வேடத்தில் சென்ற பிரதான சந்தேக நபருக்கு உதவி செய்த பெண்ணுடன் தொலைபேசியில் தொடர்புகளை பேணி வந்ததாக பொலிஸ் விசாரணையில் தெரியவந்துள்ளது.இது தொடர்பான மேலதிக விசாரணைகளை கொழும்பு பொலிஸ் குற்றத் தடுப்பு பிரிவினர் மேற்கொண்டு வருகின்றனர்.