• Feb 21 2025

புதுக்கடை நீதிமன்ற கொலையாளியின் பெயரில் மாற்றம்- வழக்கு தொடர்ந்த உறவினர்கள்

Thansita / Feb 20th 2025, 9:11 pm
image

பாதாள உலகக் குழுத் தலைவர் கணேமுல்ல சஞ்சீவவின் கொலைச் சம்பவத்துடன் தொடர்புடைய மொஹமட் அஸ்மான் ஷெரிப்தீன் என்ற பெயரை தவறாகக் குறிப்பிட்டு அவரது குடும்பத்திற்கு அநீதி இழைத்துள்ளதாகக் கூறி கொழும்பு நீதவான் நீதிமன்றில் மனுவொன்று தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

மொஹமட் அஸ்மான் ஷெரிப்தீனின் சகோதரரால் பெப்ரவரி 19ஆம் திகதி கைது செய்யப்பட்ட சந்தேக நபர் கொலைக்குற்றம் தொடர்பாக அதே நபர் அல்ல என வாதிட்டு இந்த மனு தாக்கல் செய்யப்பட்டது. 

பொலிசார் வேறு ஒரு நபரை தடுத்து வைத்துள்ளதாகவும் மொஹமட் அஸ்மான் ஷெரிப்டீனும் கைது செய்யப்பட்ட சந்தேக நபரும் இரு வேறு நபர்கள் எனவும் சட்டத்தரணி நுவான் ஜயவர்தன சார்பில் சட்டத்தரணி தசுன் பெரேரா நீதிமன்றத்திற்கு அறிவித்தார்.

இந்த தவறான அடையாளத்தால் ஷெரிப்தீனின் குடும்பத்திற்கு சட்ட ரீதியாகவும் சமூக ரீதியாகவும் சிக்கல்கள் ஏற்பட்டுள்ளதாகவும், உரிய உத்தரவை பிறப்பிக்குமாறு நீதிமன்றத்திடம் சட்டத்தரணி மேலும் கோரியுள்ளார்.

சமர்ப்பணங்களை பரிசீலித்த பிரதம நீதவான் தனுஜா லக்மாலி, சந்தேகநபர் இதுவரை நீதிமன்றில் ஆஜர்படுத்தப்படாததால், சந்தேகநபரை நீதிமன்றில் ஆஜர்படுத்தியதன் பின்னர் அவரது வாடிக்கையாளர் கோரிக்கையை சமர்ப்பிக்குமாறு சட்டத்தரணிகளுக்கு அறிவித்தார்.

புதுக்கடை நீதிமன்ற கொலையாளியின் பெயரில் மாற்றம்- வழக்கு தொடர்ந்த உறவினர்கள் பாதாள உலகக் குழுத் தலைவர் கணேமுல்ல சஞ்சீவவின் கொலைச் சம்பவத்துடன் தொடர்புடைய மொஹமட் அஸ்மான் ஷெரிப்தீன் என்ற பெயரை தவறாகக் குறிப்பிட்டு அவரது குடும்பத்திற்கு அநீதி இழைத்துள்ளதாகக் கூறி கொழும்பு நீதவான் நீதிமன்றில் மனுவொன்று தாக்கல் செய்யப்பட்டுள்ளது.மொஹமட் அஸ்மான் ஷெரிப்தீனின் சகோதரரால் பெப்ரவரி 19ஆம் திகதி கைது செய்யப்பட்ட சந்தேக நபர் கொலைக்குற்றம் தொடர்பாக அதே நபர் அல்ல என வாதிட்டு இந்த மனு தாக்கல் செய்யப்பட்டது. பொலிசார் வேறு ஒரு நபரை தடுத்து வைத்துள்ளதாகவும் மொஹமட் அஸ்மான் ஷெரிப்டீனும் கைது செய்யப்பட்ட சந்தேக நபரும் இரு வேறு நபர்கள் எனவும் சட்டத்தரணி நுவான் ஜயவர்தன சார்பில் சட்டத்தரணி தசுன் பெரேரா நீதிமன்றத்திற்கு அறிவித்தார்.இந்த தவறான அடையாளத்தால் ஷெரிப்தீனின் குடும்பத்திற்கு சட்ட ரீதியாகவும் சமூக ரீதியாகவும் சிக்கல்கள் ஏற்பட்டுள்ளதாகவும், உரிய உத்தரவை பிறப்பிக்குமாறு நீதிமன்றத்திடம் சட்டத்தரணி மேலும் கோரியுள்ளார்.சமர்ப்பணங்களை பரிசீலித்த பிரதம நீதவான் தனுஜா லக்மாலி, சந்தேகநபர் இதுவரை நீதிமன்றில் ஆஜர்படுத்தப்படாததால், சந்தேகநபரை நீதிமன்றில் ஆஜர்படுத்தியதன் பின்னர் அவரது வாடிக்கையாளர் கோரிக்கையை சமர்ப்பிக்குமாறு சட்டத்தரணிகளுக்கு அறிவித்தார்.

Advertisement

Advertisement

Advertisement