கைத்தொழில்துறை அமைச்சர் சுனில் ஹந்துன்நெத்தி, போக்குவரத்து, நெடுஞ்சாலைகள், துறைமுகங்கள் மற்றும் சிவில் விமான சேவைகள் அமைச்சர் விமல் ரத்நாயக்கா மற்றும் நிதி மற்றும் திட்டமிடல் பிரதி அமைச்சர் Dr. ஹர்சன சூரியப்பெரும ஆகியோர் இன்று பாராளுமன்றத்தில் மீன்பிடியியல் மற்றும் நீரியல் வளத்துறை அமைச்சர் ராமலிங்கம் சந்திரசேகர், யாழ்ப்பாணம் பாராளுமன்ற உறுப்பினர்களான றஜீவன் ஜெயச்சந்திரமூர்த்தி மற்றும் வைத்தியர் பவானந்தராஜா ஆகியோருடன் விசேட சந்திப்பு நடத்தினர்.
இந்த சந்திப்பில் வடக்கு மாகாணத்தில் கைத்தொழில்துறையை மேம்படுத்தும் வழிமுறைகள் மற்றும் தொழில் வாய்ப்புகளை உருவாக்கும் திட்டங்கள் குறித்து விரிவாக கலந்துரையாடப்பட்டது. காங்கேசன்துறை, ஆனையிறவு, பரந்தன், மாங்குளம் மற்றும் ஒட்டுசுட்டான் உள்ளிட்ட பகுதிகளில் கைத்தொழில்துறை அபிவிருத்திக்கு தேவையான நடைமுறைகள் குறித்து முக்கிய தீர்மானங்கள் எடுக்கப்பட்டன.
இதன் தொடர்ச்சியாக, வரும் மார்ச் மாதம் 7ஆம் திகதி மேற்குறித்த அமைச்சர்கள் குழுவினர் யாழ்ப்பாணம் வருகைதரவுள்ளனர். இதன்போது, கைத்தொழில்துறை அபிவிருத்திக்காக சிறப்புப் பார்வையிடுவதோடு, தொழிற்சாலைகள் மற்றும் தொழில்பேட்டைகள் அமைப்பதற்கான முன்னேற்பாடுகள் குறித்து ஆய்வு மேற்கொள்ளப்படவுள்ளது.
இந்த முயற்சியின் மூலம் வடக்கு மாகாணத்தில் தொழில் வாய்ப்புகளை அதிகரித்து, பொருளாதார வளர்ச்சி முன்னேற்றம் பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது. புதிய தொழிற்பேட்டைகள் உருவாகி, வலுவான பொருளாதார அடித்தளத்தை உருவாக்குவதற்கான வாய்ப்பு உருவாகும்.
தொழில் மேம்பாட்டிற்கான புதிய முயற்சியாக யாழ்ப்பாணம் வரவிருக்கும் கைத்தொழில் அமைச்சர் சுனில் ஹந்துன்நெத்தி கைத்தொழில்துறை அமைச்சர் சுனில் ஹந்துன்நெத்தி, போக்குவரத்து, நெடுஞ்சாலைகள், துறைமுகங்கள் மற்றும் சிவில் விமான சேவைகள் அமைச்சர் விமல் ரத்நாயக்கா மற்றும் நிதி மற்றும் திட்டமிடல் பிரதி அமைச்சர் Dr. ஹர்சன சூரியப்பெரும ஆகியோர் இன்று பாராளுமன்றத்தில் மீன்பிடியியல் மற்றும் நீரியல் வளத்துறை அமைச்சர் ராமலிங்கம் சந்திரசேகர், யாழ்ப்பாணம் பாராளுமன்ற உறுப்பினர்களான றஜீவன் ஜெயச்சந்திரமூர்த்தி மற்றும் வைத்தியர் பவானந்தராஜா ஆகியோருடன் விசேட சந்திப்பு நடத்தினர்.இந்த சந்திப்பில் வடக்கு மாகாணத்தில் கைத்தொழில்துறையை மேம்படுத்தும் வழிமுறைகள் மற்றும் தொழில் வாய்ப்புகளை உருவாக்கும் திட்டங்கள் குறித்து விரிவாக கலந்துரையாடப்பட்டது. காங்கேசன்துறை, ஆனையிறவு, பரந்தன், மாங்குளம் மற்றும் ஒட்டுசுட்டான் உள்ளிட்ட பகுதிகளில் கைத்தொழில்துறை அபிவிருத்திக்கு தேவையான நடைமுறைகள் குறித்து முக்கிய தீர்மானங்கள் எடுக்கப்பட்டன.இதன் தொடர்ச்சியாக, வரும் மார்ச் மாதம் 7ஆம் திகதி மேற்குறித்த அமைச்சர்கள் குழுவினர் யாழ்ப்பாணம் வருகைதரவுள்ளனர். இதன்போது, கைத்தொழில்துறை அபிவிருத்திக்காக சிறப்புப் பார்வையிடுவதோடு, தொழிற்சாலைகள் மற்றும் தொழில்பேட்டைகள் அமைப்பதற்கான முன்னேற்பாடுகள் குறித்து ஆய்வு மேற்கொள்ளப்படவுள்ளது.இந்த முயற்சியின் மூலம் வடக்கு மாகாணத்தில் தொழில் வாய்ப்புகளை அதிகரித்து, பொருளாதார வளர்ச்சி முன்னேற்றம் பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது. புதிய தொழிற்பேட்டைகள் உருவாகி, வலுவான பொருளாதார அடித்தளத்தை உருவாக்குவதற்கான வாய்ப்பு உருவாகும்.