• Nov 22 2024

பொலிஸ் உத்தியோகத்தர்கள் இனி சொந்த ஊரில் கடமையில் ஈடுபட முடியாது..? அதிரடி உத்தரவு

Chithra / Mar 26th 2024, 7:42 am
image


 

எதிர்வரும் காலங்களில் பொலிஸ் உத்தியோகத்தர்கள் சொந்த ஊரில் கடமையில் ஈடுபட அனுமதிக்கப்படாது என அறிவிக்கப்பட்டுள்ளது.

எதிர்வரும் காலங்களில் சொந்த ஊரில் அல்லது அவர்களது மனைவியரின் சொந்த ஊரில் கடமையில் ஈடுபடுவதற்கு சந்தர்ப்பம் வழங்கப்படாது என அறிவிக்கப்பட்டுள்ளது.

பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரிகள், துறைசார் பொறுப்பதிகாரிகள் முதல் கான்ஸ்டபிள்கள் வரையிலான பதவி நிலைகளை வகிப்பவர்கள் தங்களது ஊரில், மிக அருகாமையில் அல்லது மனைவியின் ஊரில் கடமையில் அமர்த்தப்பட்டுள்ளார்களா? என்பது குறித்து ஆராய்ந்து அறிக்கை சமர்ப்பிக்குமாறு பொலிஸ் மா அதிபர் தேசபந்து தென்னக்கோன் உத்தரவிட்டுள்ளார்.

இதற்காக விசேட குழுவொன்றை பொலிஸ் மா அதிபர் நியமித்துள்ளார். சிரேஸ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் பிரியந்த வீரசூரிய இந்தக் குழுவிற்கு தலைமை தாங்க உள்ளார்.

பாதாள உலகக் குழு செயற்பாடுகளை கட்டுப்படுத்துவதில் காணப்படும் பிரச்சினைகள் தொடர்பில் ஆராயப்பட்ட போது, சொந்த ஊரில் பணியாற்றும் பொலிஸ் உத்தியோகத்தர்களினால் சில குற்றச் செயல்களை கட்டுப்படுத்த முடியவில்லை என தெரியவந்துள்ளது.

எனவே சொந்த ஊரில் பணியாற்றும் பொலிஸ் உத்தியோகத்தர்கள் இடமாற்றம் செய்யப்பட உள்ளனர். 

பொலிஸ் உத்தியோகத்தர்கள் இனி சொந்த ஊரில் கடமையில் ஈடுபட முடியாது. அதிரடி உத்தரவு  எதிர்வரும் காலங்களில் பொலிஸ் உத்தியோகத்தர்கள் சொந்த ஊரில் கடமையில் ஈடுபட அனுமதிக்கப்படாது என அறிவிக்கப்பட்டுள்ளது.எதிர்வரும் காலங்களில் சொந்த ஊரில் அல்லது அவர்களது மனைவியரின் சொந்த ஊரில் கடமையில் ஈடுபடுவதற்கு சந்தர்ப்பம் வழங்கப்படாது என அறிவிக்கப்பட்டுள்ளது.பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரிகள், துறைசார் பொறுப்பதிகாரிகள் முதல் கான்ஸ்டபிள்கள் வரையிலான பதவி நிலைகளை வகிப்பவர்கள் தங்களது ஊரில், மிக அருகாமையில் அல்லது மனைவியின் ஊரில் கடமையில் அமர்த்தப்பட்டுள்ளார்களா என்பது குறித்து ஆராய்ந்து அறிக்கை சமர்ப்பிக்குமாறு பொலிஸ் மா அதிபர் தேசபந்து தென்னக்கோன் உத்தரவிட்டுள்ளார்.இதற்காக விசேட குழுவொன்றை பொலிஸ் மா அதிபர் நியமித்துள்ளார். சிரேஸ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் பிரியந்த வீரசூரிய இந்தக் குழுவிற்கு தலைமை தாங்க உள்ளார்.பாதாள உலகக் குழு செயற்பாடுகளை கட்டுப்படுத்துவதில் காணப்படும் பிரச்சினைகள் தொடர்பில் ஆராயப்பட்ட போது, சொந்த ஊரில் பணியாற்றும் பொலிஸ் உத்தியோகத்தர்களினால் சில குற்றச் செயல்களை கட்டுப்படுத்த முடியவில்லை என தெரியவந்துள்ளது.எனவே சொந்த ஊரில் பணியாற்றும் பொலிஸ் உத்தியோகத்தர்கள் இடமாற்றம் செய்யப்பட உள்ளனர். 

Advertisement

Advertisement

Advertisement