மினுவங்கொடை, பத்தடுகொட பகுதியில் துப்பாக்கிச் சூட்டுச் சம்பவம் இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
இன்றையதினம் பொலிஸாரினால் நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூட்டில் காயமடைந்த ஒருவர் கம்பஹா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள நிலையில் மற்றொரு சந்தேக நபர் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது.
குறித்த விடயம் தொடர்பில் மேலும் தெரியவருவது
வெல்ஹேன பகுதியில் பொலிஸாரின் தடையை மீறி மோட்டார் சைக்கிள் பயணித்தது, மோட்டார் சைக்கிள் நிறுத்துமாறு பொலிஸார் உத்தரவிட்டுள்ளனர்
மோட்டார் சைக்கிளில் வந்த இரண்டு இளைஞர்களும் பொலிஸாரின் துப்பாக்கியை பறிக்க முற்பட்டனர். அதனை முறியடித்து சம்பந்தப்பட்ட மோட்டார் சைக்கிளைத் துரத்திச் சென்று பொலிஸார் துப்பாக்கிச்சூட்டை நடத்தினர்.
குறித்த துப்பாக்கிச் சூட்டில் மினுவங்கொட ராஜசிங்கபுர பகுதியைச் சேர்ந்த 27 வயதுடைய லஹிரு திலந்த என்பவர் காயமடைந்து கம்பஹா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
உக்கல்பொட, உனபந்துரவத்த பகுதியைச் சேர்ந்த 21 வயதுடைய தரிந்து ஹீஷான் என்னும் மற்றொருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
மினுவங்கொடையில் உத்தரவை மீறிச்சென்ற மோட்டார் சைக்கிள் - பொலிஸார் துப்பாக்கிச்சூடு மினுவங்கொடை, பத்தடுகொட பகுதியில் துப்பாக்கிச் சூட்டுச் சம்பவம் இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.இன்றையதினம் பொலிஸாரினால் நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூட்டில் காயமடைந்த ஒருவர் கம்பஹா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள நிலையில் மற்றொரு சந்தேக நபர் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது.குறித்த விடயம் தொடர்பில் மேலும் தெரியவருவது வெல்ஹேன பகுதியில் பொலிஸாரின் தடையை மீறி மோட்டார் சைக்கிள் பயணித்தது, மோட்டார் சைக்கிள் நிறுத்துமாறு பொலிஸார் உத்தரவிட்டுள்ளனர்மோட்டார் சைக்கிளில் வந்த இரண்டு இளைஞர்களும் பொலிஸாரின் துப்பாக்கியை பறிக்க முற்பட்டனர். அதனை முறியடித்து சம்பந்தப்பட்ட மோட்டார் சைக்கிளைத் துரத்திச் சென்று பொலிஸார் துப்பாக்கிச்சூட்டை நடத்தினர்.குறித்த துப்பாக்கிச் சூட்டில் மினுவங்கொட ராஜசிங்கபுர பகுதியைச் சேர்ந்த 27 வயதுடைய லஹிரு திலந்த என்பவர் காயமடைந்து கம்பஹா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். உக்கல்பொட, உனபந்துரவத்த பகுதியைச் சேர்ந்த 21 வயதுடைய தரிந்து ஹீஷான் என்னும் மற்றொருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.