பருத்தித்துறை நகர சபையால் குடத்தனை கிராமம் அழிவின் விழிம்பில் இருப்பதாக விவசாயிகள் தெரிவித்துள்ளனர்.
குறித்த விடயம் தொடர்பில் மேலும் தெரியவருவது
யாழ்ப்பாணம் பருத்தித்துறை நகரசபையால் குடத்தனை வலிக்கண்டி பகுதியில் கழிவுகள் கொட்டப்படுவதால் தமது விவசாய நடவடிக்கைகளுக்கு பாதிப்பு ஏற்படுவதாக பருத்தித்துறை நகரசபைக்கு விவசாயிகளால் முறையிடப்பட்டுள்ளது
இந் நிலையில் குறித்த பகுதியில் விவசாயிகளின் நலன்கருதி கழிவு போற்றப்படுவதை நிறுத்தியுள்ளதாக பருத்தித்துறை நகரசபை செயலாளர் தெரிவித்துள்ளார்.
குடத்தனை வலிக்கண்டி பகுதியில் கழிவுகள் கொட்டப்படுவதால் விவசாயம் பாதிக்கப்படுவதாக விவசாயிகள் தெரிவித்திருந்தனர்.
இது தொடர்பாக பருத்தித்துறை நகரசபை செயலாளரை தொடர்புகொண்டு கேட்டபோதே குறித்த பகுதியில் கழிவு கொட்டப்படுவதை இரண்டு வாரங்களுக்கு முன்னரே தாம் நிறுத்தியுள்ளதாக தெரிவித்தார்.
நகரசபையால் கழிவுகள் தரம்பிரிக்காது பொலித்தீன் மற்றும் அபாய கழிவுப்பொருட்கள் கொட்டப்படுவது குறிப்பிடத்தக்கது.
பருத்தித்துறை நகர சபையால் அழிவின் விழிம்பில் குடத்தனை கிராமம்- விவசாயிகள் கவலை பருத்தித்துறை நகர சபையால் குடத்தனை கிராமம் அழிவின் விழிம்பில் இருப்பதாக விவசாயிகள் தெரிவித்துள்ளனர். குறித்த விடயம் தொடர்பில் மேலும் தெரியவருவது யாழ்ப்பாணம் பருத்தித்துறை நகரசபையால் குடத்தனை வலிக்கண்டி பகுதியில் கழிவுகள் கொட்டப்படுவதால் தமது விவசாய நடவடிக்கைகளுக்கு பாதிப்பு ஏற்படுவதாக பருத்தித்துறை நகரசபைக்கு விவசாயிகளால் முறையிடப்பட்டுள்ளதுஇந் நிலையில் குறித்த பகுதியில் விவசாயிகளின் நலன்கருதி கழிவு போற்றப்படுவதை நிறுத்தியுள்ளதாக பருத்தித்துறை நகரசபை செயலாளர் தெரிவித்துள்ளார்.குடத்தனை வலிக்கண்டி பகுதியில் கழிவுகள் கொட்டப்படுவதால் விவசாயம் பாதிக்கப்படுவதாக விவசாயிகள் தெரிவித்திருந்தனர். இது தொடர்பாக பருத்தித்துறை நகரசபை செயலாளரை தொடர்புகொண்டு கேட்டபோதே குறித்த பகுதியில் கழிவு கொட்டப்படுவதை இரண்டு வாரங்களுக்கு முன்னரே தாம் நிறுத்தியுள்ளதாக தெரிவித்தார். நகரசபையால் கழிவுகள் தரம்பிரிக்காது பொலித்தீன் மற்றும் அபாய கழிவுப்பொருட்கள் கொட்டப்படுவது குறிப்பிடத்தக்கது.