• Jul 22 2025

Thansita / Jul 21st 2025, 7:18 pm
image

வட்டுக்கோட்டை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட மூளாய் பகுதியில் நேற்றையதினம் இரண்டு குழுவினருக்கு இடையே மோதல் சம்பவம் ஒன்று இடம்பெற்றது.

அதனை தொடர்ந்து அங்கு ஏற்பட்ட பதற்ற நிலையை பொலிஸார் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்ததுடன் பொலிஸ் பாதுகாப்பு தற்போதும் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது.

கடந்த சில தினங்களுக்கு முன்னர் இடம்பெற்ற இரண்டு தனிநபர்களுக்கிடையிலான பிரச்சனை நேற்றையதினம் இரண்டு குழுவினருக்கு இடையேயான பிரச்சனையாக மாறியது.

இதனைத் தொடர்ந்து இடம்பெற்ற  வன்முறையில் ஒரு மோட்டார் சைக்கிள் தீக்கிரையாக்கப்பட்டதுடன் ஒரு மோட்டார் சைக்கிள் சேதப்படுத்தப்பட்டுள்ளது. அத்துடன்  சிலர் காயமடைந்தனர். 

இதன்போது பொலிஸார் துப்பாக்கி பிரயோகம் மேற்கொண்டனர். 

இந்நிலையில் அங்கு நேற்றில் இருந்து பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது



மூளாயில் தொடரும் பொலிஸ் பாதுகாப்பு வட்டுக்கோட்டை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட மூளாய் பகுதியில் நேற்றையதினம் இரண்டு குழுவினருக்கு இடையே மோதல் சம்பவம் ஒன்று இடம்பெற்றது.அதனை தொடர்ந்து அங்கு ஏற்பட்ட பதற்ற நிலையை பொலிஸார் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்ததுடன் பொலிஸ் பாதுகாப்பு தற்போதும் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது.கடந்த சில தினங்களுக்கு முன்னர் இடம்பெற்ற இரண்டு தனிநபர்களுக்கிடையிலான பிரச்சனை நேற்றையதினம் இரண்டு குழுவினருக்கு இடையேயான பிரச்சனையாக மாறியது.இதனைத் தொடர்ந்து இடம்பெற்ற  வன்முறையில் ஒரு மோட்டார் சைக்கிள் தீக்கிரையாக்கப்பட்டதுடன் ஒரு மோட்டார் சைக்கிள் சேதப்படுத்தப்பட்டுள்ளது. அத்துடன்  சிலர் காயமடைந்தனர். இதன்போது பொலிஸார் துப்பாக்கி பிரயோகம் மேற்கொண்டனர். இந்நிலையில் அங்கு நேற்றில் இருந்து பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது

Advertisement

Advertisement

Advertisement